Get Adobe Flash player

Lectures

Jesus 24

முதல்வாசகம்
ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 66: 10-14

எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள். அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்.

Lire la suite...

Luke gospel

முதல்வாசகம்
எலிசா புறப்பட்டுப் போய், எலியாவுக்குப் பணிவிடை செய்தார்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 16,19-21

அந்நாள்களில் ஆண்டவர் எலியாவை நோக்கி, ``ஆபேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய்'' என்றார். எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார்.

 

Lire la suite...

12 ஆம் ஞாயிறு வாசகங்கள்

முதல்வாசகம்
தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்று நோக்குவர்.
இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 12: 10-11

ஆண்டவர் கூறியது: நான் தாவீது குடும்பத்தார் மேலும், எருசலேமில் குடியிருப்போர் மேலும் இரக்க உள்ளத்தையும் மன்றாடும் மனநிலையையும் பொழிந்தருள்வேன்.

Lire la suite...

Jesus sinner

முதலாம் வாசகம்
2 சாமு.12:7-10,13

அந்நாட்களில் நாத்தான் தாவீதிடம், "நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார். "நான் இஸ்ரயேலின் அரசனாய் உன்னைத் திருப்பொழிவு செய்தேன். நான் உன்னைச் சவுலின் கையிலினின்று விடுவித்தேன். உன் தலைவரிடம் வீட்டை உன்னிடம் ஒப்படைத்தேன்" அவன் மனைவியரையும் உனக்கு மனைவியர் ஆக்கினேன்" இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் உனக்கு அளித்தேன்" இது போதாதென்றால் நான் மேலும் உனக்கு மிகுதியாய் கொடுத்திருப்பேன்.

Lire la suite...

Sacré Coeur de Marie

முதல் வாசகம்

 ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 9-11

எருசலேமின் வழிமரபினர் பிற இனத்தாரிடையேயும், அவர்கள் வழித் தோன்றல்கள் மக்களினங்கள் நடுவிலும் புகழ் அடைவார்கள்; அவர்களைக் காண்பவர் யாவரும் அவர்களை ஆண்டவரின் ஆசிபெற்ற வழிமரபினர் என ஏற்றுக்கொள்வார்கள்.

Lire la suite...

sacré coeur 01

முதல் வாசகம்

 நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 11-16

தலைவராகிய ஆண்டவர் கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக்காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வதுபோல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன்.

Lire la suite...

ezhugave

முதல்வாசகம்
"இதோ! உன் மகன் உயிருடன் இருக்கிறான்".
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம். 17:17-24

ஒருநாள், வீட்டுத் தலைவியான அந்தப் பெண்ணின் மகன் நோயுற்றான். அவனது நோய் மிகவும் முற்றவே, அவன் மூச்சு நின்று விட்டது. அவர் எலியாவிடம், 'கடவுளின் அடியவரே, எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்? என் பாவத்தை நினைவூட்டவும் என் மகனைச் சாகடிக்கவுமா நீர் வந்திருக்கிறீர்?" என்றார்.

Lire la suite...

Jesus 23

முதல்வாசகம்
அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம். 14:18-20

அந்நாள்களில், சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் உன்னத கடவுளின் அர்ச்சகராக இருந்தார்.

Lire la suite...

மூவொரு கடவுள் பெருவிழாத் திருப்பலி -22.05.2016 வாசகங்கள்

Jesus 22

முதல்வாசகம்
மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 8: 22-31

இறைவனின் ஞானம் கூறுவது: ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே, தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப் படைத்தார். தொடக்கத்தில், பூவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன். கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை. மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன்.

Lire la suite...

Jesus 21

முதல் வாசகம் :

திருத்தூதர் பணிகள் - 25:13-21

அகிரிப்பா பெர்னிக்கியிடம் பவுல் கொண்டுவரப்படுதல்

13சில நாள்களுக்குப் பின் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கியுவும் பெஸ்தைச் சந்திக்கச் செசரியா வந்தனர்.
14அவர்கள் பல நாள்கள் அங்குத் தங்கியிருந்தபோது பெஸ்து பவுலுக்கு எதிரான வழக்கை அரசனிடம் எடுத்துக் கூறினார்; “பெலிக்சு கைதியாக விட்டுச் சென்ற ஒரு மனிதர் இங்கு இருக்கிறார்.

Lire la suite...

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org