Get Adobe Flash player

News

திருச்சியில் நடைபெற்ற சர்வ சமய நல்லிணக்க அமைதிக் கருத்தரங்கு
- கே. எம். செல்வராஜ்
-

அண்ணல் அசிசியார் புனித பிரான்சிஸ், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சுல்தான் அல் மாலிக் அல் கமில் அவர்களை சந்தித்ததின் 800 ஆண்டு நிறைவைக் கொண்டாடுமுகமாக சர்வ சமய நல்லிணக்க அமைதிக் கருத்தரங்கை கப்புச்சி அமல அன்னை மறை மாநிலம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

Lire la suite : திருச்சியில் நடைபெற்ற சர்வ சமய நல்லிணக்க அமைதிக் கருத்தரங்கு 

தீபாவளித் திருவிழாவுக்காக திருப்பீடத்தின் சிறப்புச் செய்தி
- கிறிஸ்டோபர் பிரான்சிஸ்
-


Deepavaliஒளியின் திருவிழா, இந்து நண்பர்கள் அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்வு, அமைதி, செழிப்பு ஆகியவற்றைக் கொணரவேண்டும்.
அக்டோபர் 27,  சிறப்பிக்கப்படவிருக்கும் தீபாவளித் திருவிழாவுக்கென, திருப்பீடத்தின் பல்சமய உரையாடல் அவை சிறப்புச் செய்தியொன்றை, இத்திங்களன்று வெளியிட்டுள்ளது. பல்சமய உரையாடல் அவையின் தலைவர், கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்களும், இந்த அவையின் செயலர், அருள்பணி Indunil Janakaratne Kankanamalage அவர்களும் இணைந்து, அனுப்பியுள்ள இச்செய்தி, 'மத நம்பிக்கையாளர்கள்: உடன்பிறந்த நிலையையும், அமைதிநிறைந்த வாழ்வையும் கட்டியெழுப்புவோர்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

Lire la suite : தீபாவளித் திருவிழாவுக்காக திருப்பீடத்தின் சிறப்புச் செய்தி 

நமது பூமித்தாய்" திருத்தந்தையின் புதிய நூல் வெளியீடு

 

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகம் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு கொடை என்பதை மறந்து, பேராசையால், உலகத்தை அபகரிக்கும் கலாச்சாரம் ஆட்சி செய்வதால், நாம் அனைவரும் மன்னிப்பு கேட்கவேண்டியுள்ளது - திருத்தந்தை
pope 09

நம் பொதுவான இல்லமான பூமிக்கோளத்தையும், அங்கு வாழும் வறியோரையும் காப்பாற்றும் நோக்கத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட 'இறைவா உமக்கேப் புகழ்' என்ற திருமடலையும், அமேசான் சிறப்பு ஆயர்கள் மாமன்றம் நிறைவடையும் தருணத்தையும் நினைவுறுத்தும் வகையில், சுற்றுச்சூழலை மையப்படுத்தி, திருத்தந்தை எழுதியுள்ள ஒரு புதிய நூல், அக்டோபர் 24, இவ்வியாழனன்று வெளியானது.

Lire la suite : நமது பூமித்தாய்" திருத்தந்தையின் புதிய நூல் வெளியீடு

ஆயர் அந்தோணி டிவோட்டவுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி 
- கே. எம். செல்வராஜ்
, திருஅவை செய்தி -
Mgr Devotta 01

அன்னை ஆலயம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஆலயத்தினுள் இடப்பட்டிருந்த இருக்கைகள் எல்லாமே பொதுமக்களாலும், இருபால் துறவறத்தாராலும், சிறியவர், பெரியவர், ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களால் நிரம்பியிருந்தது. திருப்பலி நிறைவேற்றப்படும் மேடையில் இருபுறமும் நாற்காலிகளில் அருள்பணியாளர்கள் அமர்ந்திருந்தனர். அங்கே இடமில்லாமல், கீழேயும் நாற்காலிகளில், முன்வரிசை பெஞ்சுகளில் பங்கேற்க வந்த குருக்கள் இடம்பிடித்து அமர்ந்திருந்தனர். எங்குபார்த்தாலும் எல்லா இடங்களிலும் ஒரு சோகம் தோய்ந்த முகத்துடன் ஆயர் நம்மிடையே இல்லை இனி என்றைக்கும் அவரை சந்த்திக்க தங்களால் முடியாது என்று உணர்ந்தவர்களாய் ஏக்கப் பெருமூச்சோடு அவர்கள் இருந்த இருக்கை ஆயர்மீது அவர்கள் கொண்டிருந்த மரியாதையை, அன்பை வெளிப்படுத்தியது.
 

Lire la suite : ஆயர் அந்தோணி டிவோட்டவுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி 

கேரளா கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு இன்று புனிதர் பட்டம் வழங்குகிறார் போப் பிரான்சிஸ்!

| Published: Sunday, October 13, 2019, 10:15 [IST]
 
 Maria Theresa

வாடிகன்: கேரளா கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு இன்று வாடிகன் நகரில் இன்று புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்க இருக்கிறார்.

கேரளாவின் திருச்சூரில் 1876-ம் ஆண்டு பிறந்த மரியம் திரேசியா, 1914ல் அருட்சகோதரிகளுக்கான திருக்குடும்ப சபையை உருவாக்கினார். இந்த சகோதரிகள் சபை மூலம் ஏராளமான ஏழைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வந்தன.

Lire la suite : கேரளா கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு இன்று புனிதர் பட்டம் வழங்குகிறார் போப் பிரான்சிஸ்!

11 நாடுகளைச் சேர்ந்த 13 புதிய கர்தினால்கள்
-
மேரி தெரேசா
-
pope 06

இந்தோனேசியா, இத்தாலி, இஸ்பெயின், போர்த்துக்கல், கியூபா, காங்கோ, லக்சம்பர்க், குவாத்தமாலா, லித்துவேனியா, அங்கோலா, பிரிட்டன் ஆகிய 11 நாடுகளைச் சேர்ந்த 13 பேராயர்கள் மற்றும், ஆயர்களை, கர்தினால்களாக உயர்த்தினார், திருத்தந்தை பிரான்சிஸ். வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் அக்டோபர் 5, உரோம் நேரம் மாலை நான்கு மணிக்குத் தொடங்கிய திருவழிபாட்டில், 13 புதிய கர்தினால்களுக்குத் தொப்பியும், மோதிரமும், அவர்களுக்குரிய திருஆட்சிப் பீடமும் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Lire la suite : 11 நாடுகளைச் சேர்ந்த 13 புதிய கர்தினால்கள்

அமேசான் மாமன்றம், அசிசி நகர் புனித பிரான்சிசிற்கு அர்ப்பணிப்பு
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருஅவைக்கும், ஒருங்கிணைந்த சூழலியலுக்கும் புதிய பாதைகளைத் தெளிந்து தெரிவுசெய்வதில்,
அசிசி நகர் புனித பிரான்சிசின் வாழ்வும், பணியும் முக்கிய வழிகாட்டிகள்

pope 05
 அமேசான் பகுதி பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தை, அசிசி நகர் புனித பிரான்சிஸ் அடிகளாரின் பாதுகாவலில் அர்ப்பணிப்போம் என்று, அக்டோபர் 4, இவ்வெள்ளியன்று, படைப்பின் காலம் என்ற நிறைவு நிகழ்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இத்தாலியின் அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் விழாவாகிய அக்டோபர் 4, இவ்வெள்ளி பகல் 12.30 மணியளவில், வத்திக்கான் தோட்டத்தில், படைப்பின் காலம் என்ற நிகழ்வை நிறைவுறச் செய்த நிகழ்வில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

Lire la suite : அமேசான் மாமன்றம், அசிசி நகர் புனித பிரான்சிசிற்கு அர்ப்பணிப்பு

pope 04

செப்டம்பர் 1-அக்டோபர் 4, படைப்பின் காலம்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இவ்வெள்ளி மாலையில், வத்திக்கான் பசிலிக்காவில், நான்கு அருள்பணியாளர்களை ஆயர்களாகத் திருப்பொழிவு செய்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

அமேசான் பகுதி பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தை, அசிசி நகர் புனித பிரான்சிஸ் அடிகளாரின் பாதுகாவலில் அர்ப்பணிப்போம் என்று, அக்டோபர் 4, இவ்வெள்ளியன்று, ஹாஸ்டாக் (#SeasonOfCreation) குடன், தன் டுவிட்டர் செய்தியையும் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

Lire la suite : செப்டம்பர் 1-அக்டோபர் 4, படைப்பின் காலம்

திருப்பீடத்தில் காந்திஜி பிறந்ததன் 150ம் ஆண்டு நிறைவு -
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்

Gandhi feast 01

நம் அதிகாரத்திற்குட்பட்ட எல்லா வழிகளையும் பயன்படுத்தி, உலகை, அமைதி மற்றும் நல்லிணக்கம் நிறைந்ததாக வடிவமைக்க, எல்லாரும் அழைக்கப்பட்டுள்ளோம். நல்லவராய் இரு மற்றும், நன்மை செய், தீமையை வெறுத்து, அமைதியை அறுவடை செய், அனைவரையும் அன்பு செய் மற்றும், ஒருவரையும் வெறுக்காதே, பன்மைத்தன்மையை மதித்து, உடன்பிறந்த உணர்வை ஊக்குவி என்னும், உலகளாவிய நன்னெறிகளையே ஒவ்வொரு மதமும், தனது விசுவாசிகளுக்குப் போதிக்கின்றது என்று, திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கூறினார்.

Lire la suite : திருப்பீடத்தில் காந்திஜி பிறந்ததன் 150ம் ஆண்டு நிறைவு 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org