அன்னை மரியாவின் மாசற்ற இதயத்திற்கு இங்கிலாந்து அர்ப்பணிப்பு
Marie

 
 
20/02/2017 16:4
ஆதாரம் : ICN/வத்திக்கான் வானொலி

பிப்.20,2017. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியை அன்னைமரியாவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார், வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ்

போர்த்துக்கல்லின் பாத்திமா நகரில் அன்னைமரியா காட்சியளித்ததன் 100ம் ஆண்டையொட்டி, பாத்திமா அன்னை திரு உருவம், இலண்டனுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியை அன்னை மரியாவின் மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார், கர்தினால்.

திருப்பலிக்குப்பின், வெள்ளிமுலாம் பூசப்பட்ட மகுடத்தை அன்னை மரியாவின் திரு உருவச் சிலைக்கு அணிவித்த கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், அன்னை மரியாவைக் குறித்து நாம் என்ன அறிந்துள்ளோம் என்பதையொட்டியும், அன்னை மரியா நம்மிடம் என்ன கூற விரும்புகிறார் என்பதையொட்டியுமே, இயேசுவின் சீடர்களாக நாம் செயல்படுவதற்குரிய பாதை அமைந்துள்ளது என மேலும் கூறினார்.