மதுரை தூய மரியன்னை பேராலயத்தின் 175ம் ஆண்டு யூபிலி
Madurai church
ஜூலை,27,2017. ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டு பழம்பெரும் வரலாற்றைக் கொண்டுள்ள மதுரை மாநகரிலுள்ள, பல கோவில்கள், வரலாற்று சிறப்பு கொண்டவை. இவற்றில், கீழமாசி வீதியில் அமைந்துள்ள தூய மரியன்னை கத்தோலிக்கப் பேராலயம், பார்ப்பதற்கு மிக அழகாக, கட்டட கலை நுணுக்கங்களுடன் காணப்படுகின்றது. இப்பேராலயம், இவ்வாண்டில் 175ம் ஆண்டு யூபிலி விழாவைக் கொண்டாடுகின்றது. வருகிற ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கும் இவ்விழா, நவம்பர் 26ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவோடு நிறைவடைகின்றது. இந்த 175ம் யூபிலி விழாவை முன்னிட்டு, அப்பேராலயப் பங்குப் பணியாளர் இயேசு சபை அருள்பணி ஆர். ஆரோக்ய ராஜ் அவர்களுக்கு வாட்சப்பில் சில கேள்விகளை அனுப்பினோம். அவரும் வாடசப் வழியே பதில்களை அனுப்பி உதவினார்.