Get Adobe Flash player

 பாரிஸ் நகரப் பேராயர் மேதகு ஆந்திரே கர்தினால் வெந்துருவா ஆண்டகை அவர்கள் பணி நிறைவு செய்கிறார்கள்
ND Paris 02 Sml


07.12.2017 (புனித அம்புரோசியார் திருநாள்)
பாரிஸ் நகரப் பேராயர் மேதகு ஆந்திரே கர்தினால் வெந்துருவா ஆண்டகை அவர்கள் பணி நிறைவு செய்து தம் பதவி விலகளைப் பாப்பரசருக்குத் தெரிவித்திருக்கிறார்.

கர்தினால் அவர்கள் வேண்டுகோளைப் பாப்பிறை பிரான்சுவா அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். பாரீசுக்குப் புதிய பேராயராக மேதகு மிஷேல் ஒபெத்தி அவர்களைத் திருத்தந்தை நியமனம் செய்திருக்கிறார்கள்.


சனிக்கிழமை 16.12.2017 அன்று காலை 10.30 மணிக்குக் கர்தினால் அவர்களுடன் புதிய பேராயர் மேதகு மிஷேல் ஒபெத்தி, நோத்ர் தாம் த பரி பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றுவார். ழான்வியே மாதம் 06.01.2018, சனிக்கிழமை மாலை 06.30 மணிக்குப் புதிய பேராயர் பதவி ஏற்பு விழா நடைபெறும். அதுவரை கர்தினால் ஆந்திரே வெந்துருவா அவர்கள் பாரிஸ் மறை மாவட்டத்தின் நிர்வாகியாகத் தொடரத் திருத்தந்தை இசைவளித்துள்ளார்.

இச்செய்தியைக் கர்தினால் அவர்கள் மடல் வாயிலாக அறிவித்திருக்கிறார்கள் அதனை அடுத்த செய்தியில் காணலாம்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org