Get Adobe Flash player

ஏழைகளுக்கு உணவே, திருத்தந்தைக்கு தரும் பிறந்த நாள் பரிசு
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
pope 21

டிச.16,2017. தன் 81ம் பிறந்த நாளை இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கும் பரிசாக, இஞ்ஞாயிறன்று, ஏழைகளுக்கு மதிய உணவளிக்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது, உரோம் நகர் மாணவர் குழு ஒன்று.

சமையல் தொழில் தொடர்புடைய அரசு கல்விக் கழகத்தில் பணிபுரியும் மாணவர்கள் இணைந்து உணவைத் தயாரித்து, திருத்தந்தையின் பெயரால் இஞ்ஞாயிறன்று ஏழைகளுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மாணவர்களால் எடுத்து நடத்தப்படும் இந்த முயற்சிக்கு, பல்வேறு கத்தோலிக்க அமைப்புக்களும், உரோம் மறைமாவட்டமும் தங்கள் ஒத்துழைப்பை வழங்க முன் வந்துள்ளன.

இதற்கிடையே, Don Orione என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புக்கள், ஞாயிறன்று சிறப்பிக்கப்படும், திருத்தந்தையின் 81வது பிறந்த நாள் தினத்திற்கு தங்கள் வாழ்த்துக்களை சனிக்கிழமையன்றே தெரிவித்துள்ளன.




AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org