இந்திய ஆயர் பேரவையின் தலைவராக கர்தினால் கிரேசியஸ் 
தகவல் : வத்திக்கான் வானொலி

இந்திய ஆயர் பேரவையின் 33வது ஆண்டுக்கூட்டத்தில், இப்பேரவையின் தலைவராக, மும்பை பேராயர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  பிப்ரவரி 2ம் தேதி முதல், 9ம் தேதி முடிய, பெங்களூருவில் நடைபெற்றுவரும் இந்திய ஆயர் பேரவை கூட்டத்தில், கர்தினால் கிரேசியஸ் அவர்கள், அடுத்த இரு ஆண்டுகளுக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

இந்திய ஆயர் பேரவையின் முதல் துணை தலைவராக கேரள மாவெலிக்கரா மறைமாவட்ட ஆயர் மார் ஜோஷுவா இக்கனாதியோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரண்டாவது துணை தலைவராக தலைசெரி பேராயர் ஜார்ஜ் நிஜாரலாகாட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  மேலும், இப்பேரவையின் இணைப் பொதுச் செயலராக, மும்பை உயர் மறைமாவட்டத் தைச் சேர்ந்த அருள்பணி Jervis D’Souza அவர்களும், இந்திய காரித்தாஸ் அமைப்பின் தலைவராக, எர்ணாகுளம் உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி Paul Moonjely அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலராகப் பணியாற்றும் ஆயர் Theodore Mascarenhas அவர்கள், இந்த நியமனங்களை, இந்திய ஆயர் பேரவை வலைத்தளத்தின் வழியே அறிவித்துள்ளார்.