Get Adobe Flash player

புனித வளனார் கருணையில்லம் - உண்மைச் செய்தி என்ன?
அருள்பணி பிலோமின்தாசு
St Josephs hospice 01

கௌரவமாக சாவதற்கும் வழியில்லாமல் போய்விடுமோ? ஊடகங்களோடு விஷமிகளின் அறியாமை:

புனித வளனார் கருணையில்லம் (St Joseph's Hospice) நிறுவனம் ஏதோ தவறு செய்துவிட்டதாக தங்கள் TRP மதிப்பை அதிகப் படுத்தும் நோக்கில் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள் தொலைக்காட்சி நிறுவனங்கள். சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சில விஷமிகள், ஏதோ புனித வளனார் கருணையில்லம் நிறுவனம் எலும்புகளை சேகரித்தும், உள் உறுப்புகளை அறுவடை செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவதாகவும் சமுகவலைதளங்களில் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். ஆகவே மக்களுக்கு தெளிவு படுத்த எனது சிறு முயற்சி.

 

Vault எனும் ஆங்கிலச் சொல்லுக்கு, தமிழ்ப்பதம்: பெட்டகம் என்று கொள்ளலாம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை போன்ற நகரங்களில் கல்லறைத் தோட்டங்கள் நிறம்பி விட்டதால், C.S.I. பேராயர் தேவசகாயம் அவர்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் கல்லறைகளுக்கு இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருப்பதால், இறந்தைவர்களின் சடலங்களை எரிப்பதற்கும், பெட்டகத்தில் அடக்கம் செய்வதற்கும் பரிந்துறை செய்திருந்தார். இப் பெட்டகங்களில் அடக்கம் என்பது பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ள நிகழ்வு தான். இப்படிப் பட்ட 200 ஆண்டுகள் பழமையான பெட்டகம் ஒன்றை நான் திருச்சியிலுள்ள ஆலயத்தில் பார்த்திருக்கிறேன். இப்படிப் பட்ட பெட்டகம்-முறை அடக்கம் கேரளாவில் மிகவும் அதிகம். சில குடும்பங்கள் தாங்கள் இறந்த பின்னரும் குடும்பத்தாரோடு இருக்கவேண்டும் என்றெண்ணி குடும்பத்திற்கென்று ஒரு பெட்டகத்தை ஆலயத்திலுள்ள பகுதிகளில் கட்டி இருப்பார்கள். ஒராண்டிருக்கு முன்னர் நடிகை 'ப்ரியாங்கா சோப்ரா' தனது பாட்டியை தங்கள் குடுப்பத்தின் பெட்டகத்தில் அடக்கம் செய்ய ஆர்தோடாக்ஸ் ஆலையம் மறுத்துவிட்டதென்று அங்காய்த்தது உங்கள் நினைவுக்கு வரலாம். ஆகவே பெட்டகம்-முறை அடக்கம் என்பது, இந்தியா உட்பட உலக்தின் அனைத்து நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது தான். The Madras Cemeteries Board (MCB) Trust தங்கள் வசம் உள்ள கல்லறைத் தோட்டத்தில் பல அடுக்கு பெட்டகத்தை 2007ஆம் ஆண்டே அறிமுகம் செய்துள்ளது.

புனித வளனார் கருணையில்லம் நிறுவனம் தங்களை எவ்வாறு அடையாளப் படுத்தி இருக்கிறார்கள்? சாகும் தருவாயில் கைவிடப் பட்டவர்களின் இல்லம் (Home for Dying Destitute) என்று தானே!

புனித வளனார் கருணையில்லம் நிறுவனம் எதையுமே மறைக்க வில்லையே! தங்கள் வெப்சைட்டில் ( http://www.stjosephshospices.com/web/index.php?r=site%2Findex ) எவ்வாறு பெட்டகத்தில் இறந்தவர்கள் அடக்கம் செய்யப் படுகிறார்கள் என்பதை படத்துடன் வெளியிடிருக்கிறார்களே! யூடுபில் YouTube கூட இது பற்றிய காணொலிகள் (videos) உண்டு:

https://youtu.be/zwhLvMgDxuI

https://youtu.be/9gGDqbRl5m0

அருள்தந்தை R V தாமஸ் 2011ம் ஆண்டு ஆரம்பித்த பாதுகாப்பகத்திற்கு என் வயோதிகர்கள் வருகிறார்கள்? குடும்பத்தாரால் கைவிடப்பட்டவர்கள், அமைதியான சாவுக்காக புனித வளனார் கருணையில்லம் நிறுவனத்தை நாடி வருகிறார்கள் (They come to this hospice to have a peaceful death).

இப்படி மதிப்போடு மக்கள் இறப்பதற்கு செயல் பட்டுவரும் இடத்தை (A place for death and human dignity) ஊடகங்களும், விஷமிகளும் கொச்சை படுத்தி வருவதை நினைத்து மனம் வெகுவாக வேதனைப் படுகிறது.

50 ஆண்டுகளுக்கு முன்னர் கத்திக்குத்து பற்றிய செய்தியை வெளியிடும் பொழுது, "சதக் சதக் என்று கத்தியால் குத்தினான்" என்று கோரமாய் செய்தி வெளியிடும் ஊடகத்திடம் இதைத் தவிற்று வேறு எதை ஏதிர் பார்க்க முடியும்?

"புனித ஜோசப் இறக்கும் தறுவாயிலுள்ளோருக்கு உதவும் இல்லத்திற்கு கொண்டு வரப்படும் எவரும் திடகாத்திரமானவர்கள் அல்ல. சாலையோரத்தில் கேட்பாரற்று சாகக் கிடக்கும் மனிதர்களே.

ஆண்டவன் படைப்பில் அனாதையாக வாழ்ந்தவர்கள் இறப்பிலாவது நிம்மதிப் பெருமூச்சு விடட்டுமே என்ற எண்ணத்தில்தான் இல்லம் நடத்தப்படுகிறது. செங்கை பாளேஸ்வரம், மதுரை கொடை ரோடு இவ்விரண்டு இல்லங்களையும் நேரடியாகப் பார்வையிட்டுள்ளேன்.

அங்கே ஏமாற்றோ மதமாற்றமோ இல்லை. இறக்கும் நிலையில் இருப்பவர் எனத் தெரிந்து மதம் மாற்றி என்ன பயன்?

இந்தப் பணியைச் செய்ய எத்தனை பேரால் முடியும்?

யார் வேண்டுமானாலும் இந்த உண்மையை நேரில் கண்டுணரலாம். மனிதர்களை நேசிக்கத் தெரிந்தவர்கள் இதனைப் புரிந்து கொள்வர். நன்மை செய்ய நம்மால் முடியாவிட்டாலும், அந்த நன்மையை கொச்சைப் படுத்துவானேன்?

எவருமின்றி அனாதையாக இறப்பவர்களின் மன வலி யாருக்குத் தெரியும்? வாழ்ந்து பார்ப்போருக்குத்தான் அந்த வலி புரியும்!"

இதற்காக நான் அவர்களை நியாயபடுத்தவில்லை, ஆனால் நீதிமன்றம் தண்டனை வழங்கட்டும்  தவறு  இருந்தால்.

பல கேள்விகள்  எழுகின்றன நமக்கு, அந்த அடக்கம்  பண்ணப்படும்  பெட்டகம் ஒரு குழி(சேவ்டி  டாங்க்) போன்ற  அமைப்பில்  சென்றடையும்.  அது பல ஆண்டுகளுக்கு ஓரு முறை சுத்தம் செய்ய வேண்டும். இதில்  ஒன்றும்  லாபம் கிடைக்காது.

நமக்கு  எது தெரியாதோ அல்லது புரியவில்லையோ அதை குற்றம்  சாட்டுவது நம் வழக்கம்.

டிரைவர்  ஓடியது ஏன்? அவரை தாக்க முயன்ற தால்  பயந்து  ஓடி இருக்கலாம்.  இல்ல  சுகாதாரமின்றி பெட்ரோல் லாபம் படுத்த எல்லாம் சேர்ந்து  எடுத்து சென்றதால் ஆகலாம்.

அங்கு  இருக்கும் பலர்  (50%) படுக்கையில் கழிப்பார்கள், இதை சுத்தம் செய்ய எத்தனை பேர் முன் வருவார்கள்.?

அங்கு  இருப்பவர்களில்  ஒருவர்  ஏன் வெளியே செல்ல வேண்டும்  என்று சொன்னார்?  அவர்  அங்கே  ஆறு மாதங்கள்  இருப்பதாக சொல்கிறார் வீடியோவில்  அங்கு  இருப்பவர்களில் பலர் பல இடங்களில்  இருந்து வந்தவர்கள், முதியவர்கள் அங்கே  இருப்பது புடிக்காது..

ஆனால்  நீங்கள் சொல்லும் வெள்ளை பாவாடை இட்டவர் சொல்கிறார் இவர்கள்  வெளியில் சென்றால்  இவர்களால் தங்களைப் பார்த்துக் கொள்ள முடியாது, அவர்கள் நன்மைக்காக  இங்கே வைக்கப் பட்டுள்ளனர்.

இதை குற்றம் சொல்பவர்கள் முதியவர்கள்  இல்லம் நடத்த தயாரா?

என்னால்  இப்போது  உறுதியாக சொல்ல முடிந்த அவர்களின் தவறு போதுமான சுகாதாரமின்றி செயல் பட்டது, . முகவரி மற்றும், யார் என தெரியாததால்  இறப்பு சான்றிதழ் பெறவில்லை .

இதில் நான் நடுநிலையாக  பேசவில்லை  என தோன்றியது, ஆனால்  இதை நான்  சொல்லவில்லை  என்றால் பலர் ஏமாற்றப் படுவார்கள் சமூக வலை தளங்கள் வாயிலாக.

எது எப்படி இருப்பினும், இதை குற்றம் கூறுபவர்கள் தயவு செய்து இதை சவாலாகவோ இல்லை வேண்டுகோளாகவோ ஏற்றுக்  உங்கள் தொண்டு நிறுவனத்திடம் பேசி 10  முதியோர் இல்லம் துவங்க கேட்டுக்கொள்கிறேன்.   பின்னர் நாம் இவரை திட்டலாமே

Check these videos

https://m.facebook.com/groups/1425260697724339?view=permalink&id=2218739081709826

https://m.facebook.com/groups/1425260697724339?view=permalink&id=2218740238376377

https://m.facebook.com/groups/1425260697724339?view=permalink&id=2218741235042944

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org