Get Adobe Flash player

செயின்ட் ஜோசப் கருணை இல்லம்
ஸ்தனிஸ்லாஸ் பெரியநாயகம்
தகவல் :திருஅவை செய்தி தொகுப்பு 4 பிரதி 002 27 02 2018
Sevai 01

செங்கல்பட்டு அருகே செயல்பட்டுவந்த செயின்ட் ஜோசப் கருணை இல்லம் தற்போது பிரச்சினையில் சிக்கியுள்ளது. முழுமையான விசாரனை நடத்தி அங்கு தவறு நடந்திருந்தால் அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனையைக்கூட (தூக்கிற்கு நான் எதிரி) கொடுங்கள். தவறு யார் செய்தாலும் தவறுதான். தமிழக அரசின் சமூக நலத்துறை, காவல்துறை, தாசில்தார் உள்ளிட்டோர் அங்கு சோதனை நடத்தி அதன் அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அறிக்கையாக கொடுத்துள்ளனர். அதில் உள்ள விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஆனால் பல தகவல்களை உண்மையா பொய்யா என ஆராய்வதற்கு முன்பே இங்கு தீயைப் பரப்பும் கும்பலும் இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களின் இலக்குத் தெளிவாகத் தெரிந்த ஒன்று.அதனால்தான் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று சில சமூக விரோதிகள் கிளம்பி இருக்கின்றனர். இங்கு முதியவர்களின் பிணங்கள் புதைக்கப்பட்டு அவர்களின் எலும்புகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக ஒரு தகவலை பரப்பி பீதிக்குள்ளாக்கும் யாராவது ஒருத்தர் இதற்கு பதில் சொல்லட்டும்:

 • 1.இந்தியாவிலிருந்து மனித எலும்புகளை ஏற்றுமதி செய்ய சட்டம் அனுமதிக்கிறதா?
 • 2 . ஏற்றுமதி /இறக்குமதி செய்யும் எந்த ஒரு பொருளும் கஸ்டம்ஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு தெரியாமல் செய்ய முடியுமா?
 • 3.செயிண்ட் ஜோசப் கருணை இல்லம் சார்பில் கடந்த ஏழு ஆண்டுகளில் ஏதேனும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா?
 • 4. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கருணை இல்லத்திற்கு லைசன்ஸ் இருக்கிறதா?
 • 5. கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாடுகளிலிருந்து NGOக்களுக்கு வந்த நிதியை தடுத்துவிட்டோம் என சொல்லி வந்த பாஜகவினர் தற்போது மட்டும் செயின்ட் ஜோசப் கருணை இல்லத்திற்கு வெளிநாட்டு நிதி வருகிறது எனச் சொல்வது எப்படி?
 • 6. மத்திய அரசுக்கு தெரியாமல் எப்படி நிதியை இந்தியாவிற்குள் கொண்டுவர முடியும்?
 • 7. சசிகலா குடும்பம் தொடர்புடைய 150க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வருமானவரி சோதனை செய்து அதை இந்தியாவின் மிகப்பெரிய வருமான வரி சோதனையாக சொன்ன மத்திய அரசால் இந்த கருணை இல்லம் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகளை கண்டுபிடிப்பது கடினமான காரியமா என்ன?
 • 8. கூடங்குளம் போராட்டம் வெளிநாட்டு நிதியில்தான் நடக்கிறது. அதை கண்டுபிடித்து தண்டனை வாங்கித்தருவோம் என சொன்ன பாஜக ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளாகியும் ஒரு சிறு வங்கி பரிவர்த்தனை ஆதாரத்தையும் கொடுக்கவில்லையே ஏன்?
 • 9. கூடங்குளத்தில் அணுவுலை வெடித்தால் சாகப்போவது கிறிஸ்தவன் மட்டும் அல்ல தென் தமிழகம் முழுவதுமே அழிந்துபோகும். இந்த உண்மையிலிருந்து மக்களை திசை திருப்பி பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு, அங்கு போராடும் மக்களை வெறும் கிறிஸ்தவர்களாக மட்டும் காட்டி, இது ஏதோ ஒரு மதப் பிரச்சினை போன்று சித்தரித்து அந்தப் போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய தேவைப்பட்டது மதம். கூடங்குளத்தை சுற்றிலும் உள்ள கடற்கரையோர கிராமங்களில் வாழ்பவன்தான் அதை எதிர்த்து போராடியாக வேண்டும். அப்படி போராடுபவனின்  மதம்தான் அந்த போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய கிடைத்த ஆயுதம்.
 • 10. ஒரு சினிமா படம் வெளிவரும் முன்பே அந்த படத்தில் நடிகர் விஜய் இந்து மதத்தை தவறாகப் பேசியிருக்கிறார் எனச் சொல்லி,  இந்திய அரசு ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கும் தனிப்பட்ட ஆவணமான வாக்காளர் அடையாள அட்டைவரை நோண்டி எடுத்து 'ஜோசப் விஜய்' என கண்டுபிடித்து சொன்ன H.ராஜா தலைமையிலான புலனாய்வு குழுவிற்கு செயின்ட் ஜோசப் கருணை இல்ல விவகாரத்தில் நடந்ததை சொல்ல ஒரு ஆதாரம் கூடவா இல்லை?
 • 11. மத்திய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சுங்கத்துறை, நிதிப் பரிவர்த்தனைகள், சிபிஐ என இத்தனை துறைகளை வைத்திருந்தும் ஆதாரப்பூர்வமாக எதையும் கண்டுபிடிக்க முடியாத ஆட்சியா மோடி ஆட்சி?
 • 12. வயதானவர்களை கொண்டுவந்து, சோறுபோடாமல் சாகடித்து, அவர்களை புதைத்து,அவர்களின் எலும்புகளை எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யனும். ஏன் இவ்ளோ கஷ்டப்படனும்? காசிக்கு போனா அங்க தினமும் பாதி எரிந்த நிலையில் நூற்றுக்கணக்கான பிணம் தண்ணிரில் மிதந்து வருமே? அங்க கிடைக்காத பிணமா இங்கே கிடைக்கப்போகுது?
 • 13. இந்தியாவிலிருந்து சாதாரண மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்ய வேண்டுமென்றால்கூட முறையான லைசன்ஸ் வேணும். ஏன் இங்கு பெரும்பான்மையான மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனத்தை நடத்திவரும் பக்தாளுக்கு தெரியாதா இது?
 • 14. மாட்டுக்கறி ஏற்றுமதிக்கே இவ்வளவு கட்டுப்பாடு இருக்கும்போது மனித எலும்பு ஏற்றுமதி அவ்வளவு சாதாரண விஷயமா என்ன?
 • 15. இது மட்டும் உண்மையா இருந்தா இதைவிட ஒரு தொக்கான மேட்டர் ஹெச்.ராஜா கோஷ்டிக்கு இருக்குமா என்ன?

உண்மை இருந்தால் அதன் அடிப்படையில் மிக கடுமையான சட்ட நடவடிக்கையை இந்த கருணை இல்லத்தின் மீது எடுங்கள். தவறு செய்திருந்தால் அதற்கு காரணமானவர்களை தூக்கில்கூட போடுங்கள். ஆனால் ஆட்சி, அதிகாரம் அனைத்தையும் கையில் வைத்துக்கொண்டு புரளியை கிளப்பி மத சண்டைகளை மூட்டிவிட இங்கு முயற்சிக்க வேண்டாம்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org