Get Adobe Flash player

தூய வளனார் கருணை இல்லத்துக்கு உயர்நீதி மன்றத்தின் பாராட்டு

செய்தி தொகுப்பு.. மைக்கேல்ராஜ் Y

ஜோசப் கருணை இல்ல செயல்களுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு ! காவிகள் முகத்தில் கரி?
high court


பாலேஸ்வரம் கருணை இல்லத்தை மூடுவது குறித்த நோட்டீசுக்கு தடை : உயர் நீதிமன்றம் உத்தரவு..

இந்த பாலேஸ்வரம் முதியோர் இல்லத்தை பற்றி கனத்த சர்ச்சை வந்தது, பாவாடை சாமிகள் எலும்பு கடத்துகின்றார்கள் என்றது கோவண கோஷ்டிகள், இதனால் அரசு விராசணைக்கும் உத்தரவிடபட்டது. அரசு அதிகாரிகளின் ஆணவ அராஜக மனிதநேயமற்ற செயல்களையும் கண்டோம்..

கசாப்பு கடை நடத்துகின்றார்கள் என ஊதாரி பாலிமர் டிவி தொடங்கி வைத்த ஒப்பாரியினை அக்கும்பல் பிடித்தது, விசாரிக்கலாம் தவறு இருந்தால் தண்டிப்போம், தவறு இல்லா பட்சத்தில் தொடர்ந்து இயங்கலாம் என நாமும் சொல்லியிருந்தோம்

இப்பொழுது விசாரணையில் அங்கு எந்த மர்மமும், சட்டவிரோத காரியமும் இல்லை என நீதிமன்றத்தில் சொல்லிவிட்டார்கள்

அவர்கள் சொல்லியிருக்கும் விஷயங்களும் , இல்லத்தின் தரப்பில் கொடுக்கபட்ட விளக்கமும் ஏற்றுகொள்ள தக்கவையே..

மருத்துவ உலகமும் அதனையே சொல்கின்றது. எலும்பை ஏற்றுமதி செய்வது மிக சிக்கலான விஷயம். ஆடு மாடு எலும்பினைபோல் எளிதாக கப்பலில் அனுப்ப முடியாது . எலும்பு மஜ்ஜை மாற்று என்பது சாதாரணம் அல்ல..

அதெல்லாம் இதயமாற்று போல மிக மிக குறுகிய நொடியில் செய்யவேண்டிய சிகிச்சைகள் அதுவும் இன்னொரு பெரும் சிக்கல் இருக்கின்றது..

எல்லா உறுப்புக்கும் ஆயுள் உண்டு, அதுவும் முதிர்ந்த வயதுடையவர்களின் உறுப்புகள் செயலாற்றி ஓய்ந்தவை. அது இதயமோ கல்லீரலோ எதுவோ. அதை எல்லாம் இன்னொருவருக்கு மாற்றவே முடியாது..

அப்படி அது சாத்தியம் என்றால் இவ்வுலகில் பலர் இன்னும் சாகாமலே இருப்பார்கள். சாகாவரம் அவர்களுக்கு உண்டு..

மருத்துவ உலக கூற்றுபடி முதிர்ந்தவர்கள் உடலுறுப்புக்காக கடத்தபடுகின்றார்கள் என்பது ஏற்றுகொள்ள முடியா விஷயம்..

இக்கும்பல் குற்றம் சாட்டிற்றே தவிர ஒரு ஆதாரம் கூட கொடுக்க முடியவில்லை, எலும்பை விற்றது யார்? வாங்கியது யார் என்ற தகவல் எங்கே இருந்து கொடுக்க முடியும்?

ஆக என்ன புரிகின்றது?

இந்த கோவண , காவி கோஷ்டிகள் முன்பு அன்னை தெரசா இல்லத்தில் செய்த அட்டகாசத்தை இங்கும் தொடர வந்திருக்கின்றன..

அன்று நேருவிடம் இப்படித்தான் மல்லுக்கு நின்றார்கள், அந்த தெரசா மதமாற்றம் செய்கின்றார் அவரை நாட்டை விட்டு வெளியேற்று என குட்டிகரணம் அடித்தார்கள்..

நேரு அமைதியாக சொன்னார், "வாருங்கள் செல்வோம் அப்படி அவர் மதமாற்றம் செய்தால் இன்றே அனுப்பிவிடுவோம்" என சொல்லிவிட்டு கல்கத்தா விரைந்தார்..

காவி கோஷ்டிக்கு மகிழ்ச்சி தாளவில்லை, செல்வோம் அங்கே அந்தம்மா ஞானஸ்நானம் கொடுத்துகொண்டிருக்கும், இன்றே தூக்கிவிடலாம் என மகிழ்வோடு சென்றார்கள்..

நேருவும் அவர்கள் உள்ளே நுழைய அக்கும்பலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அங்கே தொழுநோயாளிகள் புண்களுக்கு சிலர் மருந்து இட்டுகொண்டிருந்தனர், சிலர் முதியவர்களுக்கு உணவு ஊட்டினர், சிலர் அவர்களை குளிப்பாட்டி கொண்டிருந்தனர்..

சீழ்பிடித்த அந்த நோயாளிகளை, மற்றவர்கள் அருகே செல்லும் அந்த வியாதிக்காரர்களை எந்த கூச்சமுமின்றி அவர்கள் பராமரித்துகொண்டிருந்தார்கள்.

ஜெபமாலையும், கர்தராகிய இயேசு வாழ்க, அல்லேலூயா என்ற சத்தம் கேட்கும் என சென்றவர்களுக்கு கடும் அதிர்ச்சி..

நேரு கேட்டார் "இந்த நோயாளிகள் எந்த நாட்டுக்காரர்கள்"..

காவிகள் சொன்னது "நம் நாட்டுக்காரர்கள்"

"அந்த பெண் யார்?"

"அயல்நாட்டுக்காரி"

நேரு சற்று கோபத்துடன் சொன்னார், "இந்நாட்டு நோயாளிகளை அந்நிய நாட்டு பெண் வந்து பராமரிக்கின்றார். உங்கள் வீட்டு பெண்கள் இந்த சேவைக்கு வர தயார் என்றால் இப்பொழுதே தெரசாவினை அனுப்பிவிடுகின்றேன்"..

அதன் பின் காவி அட்டகாசம் தெரசா சபைக்கு இல்லை..

இந்த முதியோர் இல்லத்திலும் இதுதான் நடக்கின்றது.அவர்கள் தெருவில் கிடந்த முதியவர்களை பராமரிப்பில்லா முதியவர்களை அழைத்து பராமரித்து இறுதிவரை பார்த்திருக்கின்றார்கள்..

இச்சமூகத்தின் அவமான பக்கங்களை அவர்கள் துடைத்திருக்கின்றார்கள்..

இறந்தவர்களை நல்ல முறையில் தகனமும் அடக்கமும் செய்யவேண்டியது மானிட குலத்தின் கடமை என்றே எல்லா மதமும், உபதேசமும் சொல்கின்றன..

ஆவி பிரிந்தபின் அக்கூட்டினை மரியாதையுடன் தகனம் செய்வது புண்ணியமான காரியங்களில் ஒன்று என்கின்றது எல்லா மதங்களின் சாஸ்திரம்..

அந்த முதியவர்கள் நம்மில் ஒருவர்கள், பிள்ளைகளாலும் உறவினர்களாலும் கையில் ஒன்றுமில்லை என்பதால் விரட்டபட்டவர்கள்..

சொத்து உள்ள முதியவரை யார் விரட்டுவார்?

அப்படியே இவர்கள் கிட்னி 10 லட்சம், கல்லீரல் 50 லட்சம், எலும்பு சில நூறு டாலர்கள் என்றால் ஏன் அவர்களை இவர்கள் தெருவில் விடுவார்கள்?

வீட்டில் வைத்தே கூறு போட்டு விற்றுவிட மாட்டார்களா? ஏன் துரத்துகின்றார்கள்?

முதியவர்களை கொன்று உடல் உறுப்புகளை கடத்துவது சாத்தியம் என்றால் கங்கையில் எத்தனை பிணங்கள் மிதக்கின்றன, அவை எல்லாம் வைர மூட்டைகள் அல்லவா?

பின் ஏன் மீனுக்கு உணவாக போட்டுவிடுகின்றார்கள்?

நாம் முன்பே சொன்னோம் எல்லா கிறிஸ்தவ தொண்டு நிறுவணங்களும் உண்மையானவை அல்ல..

சர்ச்சை வந்தால் நீதிமன்றம் செல்லலாம், இதோ சென்றார்கள் இப்பொழுது அந்த இல்லம் மீது சந்தேகம் இல்லை என நீதிமன்றம் சொல்லியாயிற்று..

இதனை யாராவது பேசுவார்களா? இல்லை

ஊரறிய விஷம் விதைத்த பாலிமர் டிவி பேசுமா? இதர ஊடகம் பேசுமா என்றால் நிச்சயமாக இல்லை, இனி பேசமாட்டார்கள்..

எல்லா கிறிஸ்துவ தொண்டு நிறுவணங்களும் உண்மையானவை அல்ல, வெளிநாட்டு பணத்திற்காகவும், வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் நடத்தும் சில காரியங்கள் உண்டு.. உளவாளிகளுக்கு மதம் நாடுமுக்கியமல்ல. எல்லா மதங்களிலும் காட்டிக்கொடுக்கும் கயவர்களும் உண்டு..

அதை எல்லாம் பாவாடைகள் என இந்த கோவண கோஷ்டி இறங்காது

ஏன் தெரியுமா?

அவை கொழுத்த பணத்தில் இயங்குபவை. இவர்கள் முணுமுணுத்தவுடன் அள்ளி கொடுத்து இவர்கள் வாயினை அடக்கும் சக்தி அவைகளுக்கு உண்டு

இதனால்தான் ஆபத்தான பல தொண்டு நிறுவனங்கள் எல்லாமத சாயத்திலும் சத்தமின்றி இயங்குகின்றன, யார் பிரிவினை வாதிகளை பேச அழைத்து மாணவ சமுதாயம் மீது இந்தியா பற்றி வெறுப்பினை விதைக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் அந்த வகை..

பசுவேடம் போட்டு கொண்டு உள்ளே கொம்பு சீவும் நரிகள் அவை, ஆனால் காசினை அள்ளி வீசுவதால் சிக்கல் இல்லை

மாறாக இம்மாதிரி தொண்டு நிறுவனங்கள் உண்மையானவை, இவற்றின் வருமானமும் குறைவு வந்தாலும் கூடுதல் நோயாளிகளை இயன்றவரை கவனிப்பார்கள்..

இவை யாருக்கும் பணம் கொடுக்கும் அவசியமுமில்லை. நீதிமன்ற படியேற கலங்குவதுமில்லை..

இதனால் இம்மாதிரி இல்லங்கள் மகா சிக்கலுக்கு உள்ளாகின்றன, கமிஷன் கிடைக்கா காவிகள் இந்த அப்பாவி இல்லங்களை மிரட்டி குதித்துவிட்டு "ஏய் நாங்கள் பாரத நாட்டின் மாண்பினை காத்துவிட்டோம்,மாபெரும் அயோக்கிய கூட்டத்தை கண்டுபிடித்துவிட்டோம்" என தங்களுக்கு தாங்களே வாழ்த்து சொல்லி மகிழ்கின்றன..

இவர்களின் நோக்கம் உண்மையானால் போலி கிறிஸ்தவ நிலையங்கள் மீது ஒருவார்த்தை குற்றம் சுமத்தட்டும் பார்க்கலாம் , செய்யமாட்டார்கள்..

உண்மையான சேவை செய்பவர்கள் யாருக்கு அஞ்ச வேண்டும்? கிறிஸ்து அதனைத்தான் செய்ய சொன்னார் அவர்கள் செய்கின்றார்கள் அஞ்சாமல் செய்கின்றார்கள்

கிறிஸ்து செய்ய சொல்லாதது கண்ணில் பட்ட இடத்தை எல்லாம் வளைத்து போட்டு கல்வி நிலையம் கட்டி கொள்ளையடிக்கும் விஷயம்..

இதில் ஒரு கல்வி நிலையம் பிடிபட்டிருக்குமா? அந்த ஈஷா மையத்தை அடுத்து மலைவரை ஆக்கிரமித்திருக்கும் போதகர் நிலத்திலிருந்து ஒரு சென்ட் மீட்டார்களா?

இல்லை ஏன்? அவர் அன்றே மோடிக்கு சால்வையிட்டு அவரின் வெற்றிகாக ஜெபித்துவிட்டு வந்தாராம். இயேசு அவரின் பிரார்த்தனையினை கேட்டு மோடிக்கு வெற்றிமேல் வெற்றி கொடுக்கின்றாராம், ஆம் அவர் ஜெயம் கொடுக்கும் தேவன்..

பால்தினகரன் கோஷ்டி சால்வை மட்டுமா கொடுத்தது?

கிறிஸ்தவ பெயரால் ஏமாற்றும் பால் தினகரன், கிறிஸ்தவ பெயரால் பாசிசவாதிகளை ஆதரித்து இந்நாட்டில் பிரிவினைவாதம் கொணர முயன்ற போலிகளை , அவர் சபைகளை விட்டுவிடுபவர்கள்..
உண்மையான தொண்டு செய்பவர்களிடம் தங்கள் வீரத்தை காட்டுவார்களாம்?

ஒரு உண்மையான இந்து இதனை செய்வானா? ஒருகாலும் செய்ய மாட்டான்..

அப்படியாக யாரெல்லாம் இவர்களுக்கு அள்ளி கொடுக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் நல்ல கிறிஸ்தவர்கள், நாட்டுபற்றுள்ள கிறிஸ்தவர்கள்..

யாரெல்லாம் கொடுக்கவில்லையோ அவர்கள் எல்லாம் மதமாற்றம் செய்பவர்கள், உறுப்பு கடத்துபவர்கள், ஏன் உயிரையே கிளிக்குள் வைத்து வெளிநாட்டுக்குக்கு கடத்தும் அயோக்கியர்கள் என்பதுதான் சில காவிகளின் இப்போதைய அரசியல் தத்துவம்..

ஏதோ ஒரு படத்தில் கவுண்டமணி கடலில் வீசிய வலையில் செந்தில் சிக்குவார், அது திமிங்கலம் என எண்ணிய கூட்டம் அதன் எலும்பு அத்தனை கோடி, தோல் இத்தனை கோடி, பல் இத்தனை கோடி என சொல்லிகொண்டிருக்கும்..

பின் அது செந்தில் என கண்ட கவுண்டமணி கூட்டத்தை பார்த்து சொல்வார், "ஒரு மண்ணும் தெரியாது ஆளாளுக்கு அது இத்தனை கோடி, இது இத்தனை கோடி, பல் சில கோடி , எலும்பு பல கோடி என அள்ளி விட வேண்டியது. போங்கடா."

அந்த கூட்டத்து நிலையில் இருக்கின்றது புள்ளிராசாவின் காவி கோஷ்டி ..
செய்தி தொகுப்பு..
மைக்கேல்ராஜ் Y

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org