Get Adobe Flash player

பைபிளை அடிப்படையாக கொண்டு ஹொலிவூட்டில் இன்னொரு படம்.

 நன்றி : பண்கொம்பு . நெட்
jesus 19

உலகில் அதிகம் பிரசுரிக்கப்பட்ட, மொழிப்பெயர்க்கப்பட்ட புத்தகம் பைபிள். உலகில் அதிக படங்கள் பைபிளை அடிப்படையாக வைத்தே தயாராகியிருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் உலகில் ஒரு டஜன் படங்களாவது பைபிளை அடிப்படையாக வைத்து தயாராகும். ஹாலிவுட்டும் அடிக்கடி இந்த பக்தி வியாபாரத்தில் இறங்குவதுண்டு. ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிப் படங்களில் உலக அளவில் அதிகம் வசூல் செய்த படம் எது தெரியுமா? மெல்கிப்சனின் இயக்கத்தில் வெளியான பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட்.
 

ஹாலிவுட் இந்த வருடம் சன் ஆஃப் காட் என்ற படத்தை தயாரித்துள்ளது. இதுவும் பைபிள் கதைதா
ன். இதற்குப் பின்னால் இன்னொரு கதையும் உண்டு.
2013ல் மார்ச் 3 முதல் மார்ச் 31 வரை ஹிஸ்டரி தொலைக்காட்சியில் தி பைபிள் என்ற பெயரில் பைபிள் சம்பந்தப்பட்ட மினிசீரிஸ் ஒளிபரப்பப்பட்டது. தொடருக்கு திரைக்கதை எழுதி தயாரித்தவர்கள் Roma Downey, Mark Burnett. தற்போது இந்த சீரிஸை இவர்கள் சினிமாவாக வெளியிடுகிறார்கள். மினிசீரிஸில் இல்லாத பல பைபிள் கதைகள் இந்த சினிமாவில் இடம்பெற்றுள்ளது. படத்தின் பெயர் சன் ஆஃப் காட். படத்தை இயக்கியிருப்பது கிறிஸ்டோபர் ஸ்பென்சர்.


AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org