Get Adobe Flash player

ஞானகத்தின் மூத்த பணியாளருக்குத் தமிழக அரசின் விருது.
BL virithu

05.04.2018 அன்று சென்னை கோட்டையில் தமிழக அரசின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2016 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் அயலகத் தமிழறிஞர் இலக்கண  விருதினை நம் ஞானகத்தின் மூத்த பணியாளரான பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ அவர்களுக்குத் தமிழக  முதல்வர் மாண்புமிகு எடப்பாடி அவர்கள் வழங்கினார்கள். பொன்னாடை போர்த்தி,  பட்டயம்,  காசோலை பரிசளித்துப்  பெருமை பாராட்டினார்கள். உலகிலேயே மூவருக்கு மட்டுமே வழங்கப்பட்ட இவ்விருது பெற்ற  பேராசிரியருக்கு நம் ஞானகத்தின் வாழ்த்துகள். கத்தோலிக்கருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது இவ்விருது.
BL virithu 02

 

 
01.05.2018 அன்று சர்சலில் நடைபெற்ற சூசையப்பர்த் திருவிழா திருப்பலி நிறைவில் நம் ஞானகத் தந்தை பேராசிரியரைப் பாராட்டிப் பேசினார் ; பின் மேதகு யுவோன் அம்புரோஸ் ஆண்டகை அவர்கள் பேராசிரியருக்குப் பொன்னாடை போர்த்திப் பெருமை பாராட்ட மக்கள் எழுந்து நின்று  கைதட்டி வாழ்த்தினார்கள்.
 
BL virithu 01
சென்னையில் இருந்து வெளிவரும் கத்தோலிக்கப் பத்திரிகை 'நம் வாழ்வு '. இது, இரண்டு பக்க அளவில் இவர் பேட்டியை  வெளியிட்டிருந்தது. புதுச்சேரியில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் என்ற தொலைகாட்சி இவர் பேட்டியை  மே  தினம் அன்று இரவு 8 மணிக்கு  ஒளி பரப்பியது. பலரும் அதனைக் கண்டு களித்துப் பாராட்டினர்

சென்னை, புதுச்சேரி, கங்கைகொண்ட சோழபுரம்...ஊர்களில் தமிழறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் கூடிப் பேராசிரியருக்குப் பாராட்டு விழா எடுத்தார்கள்.பிரான்சிலும் விழா எடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள்



AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org