அக்டோபர் 14, ஆஸ்கர் ரொமேரோ உட்பட 6 புதிய புனிதர்கள் -
நன்றி ; வத்திக்கான் வானொலி

அருளாளர்கள் திருத்தந்தை ஆறாம் பவுல், ஆஸ்கர் ரொமேரோ, பிரான்செஸ்கோ ஸ்பினெல்லி, வின்சென்சோ ரொமானோ, மரிய கத்தரீனா காஸ்பர், இயேசுவின் தெரசின் நசரியா இஞ்ஞாசியா ஆகிய ஆறு பேரையும், திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்கள், வருகிற அக்டோபர் 14ம் தேதி புனிதர்கள் என அறிவிப்பார்.


மறைசாட்சியான சான் சால்வதோர் பேராயர் ஆஸ்கார் ரொமேரோ (Oscar Arnulfo Romero Galdámez) அவர்கள், 1980ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி, திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இவர், மத்திய அமெரிக்க நாடான எல் சால்வதோர் நாட்டின் Ciudad Barriosல், 1917ம் ஆண்டு  ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்தவர். மறைமாவட்ட அருள்பணியாளரான, அருளாளர் பிரான்செஸ்கோ ஸ்பினெல்லி (Francesco Spinelli) அவர்கள், திருற்கருணை ஆராதனை அருள்சகோதரிகள் சபையை நிறுவியவர். அருளாளர் வின்சென்சோ ரொமானோ (Vincenzo Romano – 1751-1831) அவர்கள், இத்தாலியின் நேப்பிள்ஸ் பகுதியைச் சேர்ந்த மறைமாவட்ட அருள்பணியாளர். அருளாளர் மரிய கத்தரீனா காஸ்பர் (Maria Caterina Kasper)  அவர்கள், இயேசு கிறிஸ்துவின் ஏழைச் சகோதரிகள் சபையை நிறுவியவர். அருளாளர் இயேசுவின் தெரசின் நசரியா இஞ்ஞாசியா (Nazaria Ignazia di Santa Teresa di Gesù) அவர்கள், திருஅவையின் திருச்சிலுவை மறைபோதக சபையைத் தோற்றுவித்தவர்.