Get Adobe Flash player

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் அவையின் ஆண்டு கூட்டம்
நன்றி : வத்திக்கான் வானொலி 

 

 இந்தியாவில் பணியாற்றும் இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்களின் 31வது ஆண்டுக் கூட்டம், சனவரி 7, வருகிற திங்கள் முதல், 14ம் தேதி முடிய நடைபெற உள்ளது.

Indian bishops conf 2018

இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்களின் 31வது ஆண்டுக் கூட்டம்

 இந்தியாவில் பணியாற்றும் இலத்தீன் வழிபாட்டு முறையைச் சேர்ந்த ஆயர்களின் 31வது ஆண்டுக் கூட்டம், சனவரி 7, வருகிற திங்கள் முதல், 14ம் தேதி முடிய நடைபெற உள்ளதென்று, CCBI என்ற இந்திய கத்தோலிக்க ஆயர்கள் அவை அறிவித்துள்ளது.

சென்னையின் அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் இக்கூட்டம், சனவரி 8ம் தேதி காலை, இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள திருப்பீடத் தூதர், பேராயர் Giambattista Diquattro அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியுடன் ஆரம்பமாகும். இக்கூட்டத்தின் முதல் அமர்வை, மும்பை பேராயரும், இந்திய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துவார். இக்கூட்டம் நடை பெறும் நாள்களில் ஒருநாள், ஆயர்கள் மேற்கொள்ளும் தியானத்தை, வாரணாசியைச் சேர்ந்த அருள்பணி அனில் தேவ் அவர்கள் வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 132 இலத்தீன் வழிபாட்டு முறை மறைமாவட்டங்களைச் சேர்ந்த 189 ஆயர்களை கொண்ட CCBI அவையின் பொறுப்பாளர்கள், இந்த ஆண்டு கூட்டத்தின்போது தெரிவு செய்யப்படுவர் என்றும், சனவரி 14ம் தேதி, இக்கூட்டம் நிறைவுறும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org