Get Adobe Flash player

திருச்சியில் நடைபெற்ற சர்வ சமய நல்லிணக்க அமைதிக் கருத்தரங்கு
- கே. எம். செல்வராஜ்
-

அண்ணல் அசிசியார் புனித பிரான்சிஸ், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சுல்தான் அல் மாலிக் அல் கமில் அவர்களை சந்தித்ததின் 800 ஆண்டு நிறைவைக் கொண்டாடுமுகமாக சர்வ சமய நல்லிணக்க அமைதிக் கருத்தரங்கை கப்புச்சி அமல அன்னை மறை மாநிலம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

கப்புச்சின் மறைமாநிலத் தலைவர் அருள்முனைவர் A. J. மேத்தியூ தலைமையில் பிரான்சிஸ்கன் துறவற சபைகளின் கூட்டமைப்பாகிய AFFI ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், திரளாக இருபால் துறவறத்தார், பொதுநிலையினர், சிறுவர் சிறுமியர் இளைஞர் இளம்பெண்கள்  திரளாய் கலந்து கொண்டு பயனடைந்தனர். திருச்சி மறைமாவட்ட பலசமய உரையாடல் பணிக்குழுவின் அருள்முனைவர் மரியானுஸ் ஐசக், புனித பிரான்சிஸ் - சுல்தான் அல் மாலிக் அல் கமில் அவர்கள் சந்திப்பின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

மதுரை முனைவர் பஷீர் அஹமத் அளவற்ற அருளாளன் இறைவன் அமைதியை விரும்பும் கடவுள் அவருக்கே அனைத்துப் புகழும் உண்டாகுக என்றவாறு அண்ணல் அசிசியார் வன்முறையும் கொலைவெறித்தாக்குதலும் நடைபெற்ற போர்க்களத்திற்கு துணிவுடன் சுல்தானைச் சந்திக்க சென்றார், அமைதி நிலவ வேண்டும் என்று அமைதியின் தூதுவரைச் சென்றார். அவர் சொல்லும் செய்தி நாம் பன்முகம் கொண்ட இந்தியத் திருநாட்டில் அமைதியின் தூதுவர்களாக நாம் ஒவ்வொருவரும் அமைதியின் கனிகளாகச் செல்வோம் என்றார். ஒரு சமயத்தை மற்ற சமயத்தவர் மதிக்க வேண்டும். நன்மைகள் செய்வதில் ஒருவருக் கொருவர் முந்திக்கொள்ளுங்கள் என்று திருக்குர்ஆன் சொல்லுகிறது. ஆகவே ஒருவரை ஒருவர் மதித்து நடப்போம். அவரவர் வழியில் அவரவர் செல்வோம் அமைதியுடன் மனித நேயம் வளர்ப்போம் என்றார்.

சென்னை - மயிலை முன்னாள் பேராயர் சின்னப்பா, சமண மதப் பெரியவர் பட்டா சாரிய வர்ய மஹா ஸ்வாமிஜி, புத்த மத துறவி பிக்கு பந்தி அம்பேத்கர், பிரம்மகுமாரிகள் சபையின் சகோதரி மல்லிகா ஆகியோர் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் சகோதரத்துவம் கடைபிடிக்கப்படவேண்டும் எனவும், அமைதியே வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும்  வழி  எனவும் சிறப்புரை நிகழ்த்தினர். பிரான்சிஸ்கன் துறவற சபைகளின்  கல்லூரி மாணவிகள் அமைதி - அன்பு - சகோதரத்துவம் என்பதனை வலியுறுத்தும் விதமாக நடன நிகழ்ச்சிகள் நடத்தியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org