ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் »
இலங்கை இலங்கைக்குப் போகிறார் போப்பாண்டவர்!
Posted by: Sudha Published: Monday, February 10, 2014, 8:29 [IST]

Read more at: http://tamil.oneindia.in/news/srilanka/pope-announces-possible-trip-sl-193198.html

 

pape 06
இலங்கைக்குப் போகிறார் போப்பாண்டவர்! கொழும்பு: போப்பாண்டாவர் முதலாவது பிரான்சிஸ், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்தத் தகவலை அவரே தெரிவித்துள்ளார். இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் குழு போப்பாண்டவரை வாடிகன் சிட்டியில் சந்தித்தது. அப்போது அவர்களிடம் இத்தகவலைத் தெரிவித்தார் போப்பாண்டவர். தன்னைச் சந்தித்த இலங்கையர்களிடம், கடவுள் நிச்சயம் இலங்கை பயணத்திற்கான ஆசிகளை எனக்கு அளிப்பார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார் போப்பாண்டவர். இலங்கையில் உள்ள பிரபல கன்னி மேரி சர்ச் நிர்மானிக்கப்பட்டதன் 75வது ஆண்டையொட்டி போப்பாண்டவரிடம் ஆசி பெறுவற்காக கொழும்பு ஆர்ச்பிஷப் கர்டினால் மால்கம் ரஞ்சித் தலைமையிலான குழு ரோம் வந்துள்ளது. பின்னர் அவர்கள் போப்பாண்டவரைச் சந்தித்துப் பேசினர். அவர்களிடையே போப்பாண்டவர் பேசுகையில், என்னை இலங்கைக்கு வருமாறு அழைத்துள்ளீர்கள். இதற்காக நன்றி கூறிக் கொள்கிறேன். இந்த அழைப்பை நான் வரவேற்கிறேன். கடவுள் அந்த ஆசியை எனக்கு அளிப்பார் என்று நம்புகிறேன் என்றார் போப்பாண்டவர். இனஅழிப்புப் போரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு போப்பாண்டவர் செய்யும் விஜயத்தால் தமிழர்களுக்கு ஏதாவது நல்லது நடக்குமா என்ற அல்லது போப்பாண்டவரின் விஜயத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு சிங்கள அரசு செயல்படுமா என்பது தெரியவில்லை. உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.