திருத்தந்தை பிரான்சிஸ் : பிரமாணிக்கமும், பயனும் நிறைந்த திருமணம் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்பிப்.14,2014. அன்பு இளையோரே, திருமணம் செய்துகொள்ள அஞ்ச வேண்டாம், பிரமாணிக்கமுள்ள மற்றும் பயனுள்ள திருமணம் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்று இவ்வெள்ளியன்று தனது Twitter செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், அமெரிக்க யூதமதப் பிரதிநிதிகள் குழு ஒன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, அமெரிக்க யூதச் சமுதாயத்தின் பல்சமய விவகாரத்துறை இயக்குனர் ராபி David Rosen அவர்கள், தங்களது இச்சந்திப்பு, குடும்பச் சந்திப்பு போன்று இருந்ததாகத் தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் யூத சமூகத்துடன் மிக நெருக்கமான உறவு கொண்டிருப்பதை இச்சந்திப்பில் உணர முடிந்ததாகவும் ராபி David Rosen தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி