கேரளாவைச் சேர்ந்த இரண்டு பேருக்கு புனிதர் பட்டம்... போப்பாண்டவர் வழங்கினார்!
Posted by: Jayachitra Published: Sunday, November 23, 2014, 16:42 [IST]

Read more at: http://tamil.oneindia.com/news/international/pope-francis-confers-sainthood-on-two-beatified-candidates-from-kerala-at-vatican-2-215491.html

New saints in Kerala

 

வாடிகன் சிட்டி: வாடிகனில் இன்று நடைபெற்ற விழாவில் கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் மற்றும் ஒரு கன்னியாஸ்திரிக்கு போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ், புனிதர் பட்டம் வழங்கி உள்ளார். இந்த அரிய தருணத்தை எதிர்நோக்கி கேரளாவில் ஆயிரக்கமக்கான கிறிஸ்தவர்கள் காத்திருந்தார்கள். பாதிரியார் குரியகோஸ் சவரா மற்றும் கன்னியாஸ்திரி யூபிரேசியா ஆகியோருக்கே இன்று புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
 

 

இந்த நிகழ்வைத் தொடர்ந்து இன்று காலை முதலே கேரளாவில் உள்ள பல்வேறு சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலிகள் உள்ளிட்டவை நடந்து வந்தது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் சர்ச்சுகளில் குவிந்திருந்தனர். புனிதர் பட்டம் அளிக்கும் நிகழ்ச்சி சர்ச்சுகளில் நேரடியாக ஒளிபரப்புசெய்யப்பட்டது. வாடிகனில் உள்ள புனித பீ்ட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த இருவருக்கும் புனிதர் பட்டம் வழங்கி சிறப்பித்தார் போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ்.

 

இன்று புனிதர் பட்டம் பெற்ற இந்த இருவரையும் சேர்த்து நூற்றாண்டு பெருமை மற்றும் பழமை வாய்ந்த சைரோ மலபார் சர்ச், 3 புனிதர்களைப் பெற்ற பெருமையை அடைகிறது. கடந்த 2008ம் ஆண்டு கன்னியாஸ்திரி அல்போன்சாவுக்கு வாடிகன், புனிதர் பட்டம் வழங்கியது என்பது நினைவிருக்கலாம். 1829ம் ஆண்டு பாதிரியார் குரியகோஸ் பாதிரியாராக செயல்படத் தொடங்கினார். இவர் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர் ஆவார். பல்வேறு புரட்சிகரமான நடவடிக்கைகளையும் எடுத்தவர். இவரும், கன்னியாஸ்திரி அல்போன்சாவும் கடந்த 1986ம் ஆண்டு புனிதர் பட்டத்துக்குத் தகுதி வாய்ந்தவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

 

சைரோ மலபார் கத்தோலிக் சர்ச்சின் சார்பாக பல பள்ளிகளையும், சர்ச்சுகளையும் நிறுவியவர் பாதிரியார் குரியகோஸ். மேலும் கோட்டயத்தில் முதலாவது சைரோ மலபார் சர்ச்சுகளுக்கான அச்சகத்தையும் தோற்றுவித்தவர். இந்த அச்சகம்தான்,முதல் மலையாள நாளிதழை அச்சிட்டு வெளியிட்டது. 1871ம் ஆண்டு பாதிரியார் குரியகோஸ் மரணமடைந்தார். எர்ணாகுளம் மாவட்டம் கூனம்மாவு என்ற இடத்தில் உள்ள புனித பிலோமினாள் சர்ச்சில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

கன்னியாஸ்திரி யூபிரேசியா 2006ம் ஆண்டு புனிதர் பட்டத்துக்குத் தகுதி வாய்ந்தவராக அறிவிக்கப்பட்டார். இவர் கடவுளுக்காக தனது முழுக் காலத்தையும் செலவிட்டவர் ஆவார். இவருக்கு பிரார்த்தனை அன்னை என்றும் மக்கள் செல்லப் பெயரிட்டு அழைத்தனர். இவரது காலத்தில் பல அற்புதங்களை இவர் நிகழ்த்தியதாக இவரது பக்தர்கள் கூறுகிறார்கள். 1952ம் ஆண்டு தனது 75வது வதில் மரணமடைந்தார் யூபிரேசியா. திருச்சூர் மாவட்டம் ஒல்லூர் என்ற இடத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.

Read more at: http://tamil.oneindia.com/news/international/pope-francis-confers-sainthood-on-two-beatified-candidates-from-kerala-at-vatican-215489.html