Get Adobe Flash player

News

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா.. 2100 தமிழக மீனவர்கள் பங்கேற்பு
தகவல் : https://tamil.oneindia.com/news/tamilnadu/katchatheevu-pilgrimage-begins-today-312341.html
Cutch feast
 
 
ராமேஸ்வரம் : கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதில் பங்குபெற தமிழக மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் கச்சத்தீவு சென்றுள்ளனர். கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் இந்திய மற்றும் இலங்கை நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்குபெற உள்ளனர்.

Lire la suite...

சபீனா பசிலிக்காவில் திருநீற்றுப் புதன் திருப்பலி
ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி

பிப்.15,2018. பிப்ரவரி 14, சிறப்பிக்கப்பட்ட திருநீற்றுப் புதனன்று மாலை 4.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம், புனித ஆன்செல்ம் ஆலயத்திலிருந்து புறப்பட்ட பாவப்பரிகாரத் திருப்பவனியை தலைமையேற்று நடத்தினார்.

Lire la suite...

2018ம் ஆண்டு தவக்காலத்திற்குத் திருத்தந்தையின் செய்தி
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
pope 07

பிப்.06,2018. "நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும்" (மத்தேயு 24:12) என்று நற்செய்தியாளர் மத்தேயு பதிவு செய்துள்ள இயேசுவின் சொற்களை மையமாக வைத்து, இவ்வாண்டுக்குரிய தவக்காலச் செய்தியை, திருத்தந்தைபிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

Lire la suite...

இந்தியாவின் வருங்காலம் பற்றி இந்திய ஆயர்கள்
ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி
Cardinal Balios Glemis

 பிப்.13,2018.

இந்தியாவில் கத்தோலிக்க விசுவாசம் பரவுவதற்குக் காரணமான திருத்தூதர் தோமையார், புனித பிரான்சிஸ் சவேரியார் போன்ற மாபெரும் புனிதர்களுக்கு, இந்தியத் திருஅவை நன்றி செலுத்துகின்றது என்று, கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

Lire la suite...

விசுவாச அறிக்கையும் மன்றாட்டும்
நன்றி : வத்திக்கான் வானொலி-

நீங்கள் என்னுள்ளும், என் வார்த்தைகள் உங்களுள்ளும் இருந்தால், நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும், என இயேசு கூறிய, புனித யோவான் நற்செய்தி 15ம் பிரிவின் வார்த்தைகள் முதலில் வாசிக்கப்பட, திருத்தந்தையின், திருப்பலி குறித்த மறைக்கல்வி உரை தொடர்ந்தது.

Lire la suite...

ஒடிசாவிலுள்ள ஏழு கிறிஸ்தவ கைதிகளின் விடுதலைக்காக செபம்
bishops 03

29வது ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய ஆயர்கள் - RV

ஒடிசா மாநிலத்தில், இந்துமத குரு ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒன்பது ஆண்டுகளாக சிறையிலுள்ள ஏழு குற்றமற்ற கிறிஸ்தவர்கள் விடுதலை செய்யப்படுமாறு, இந்திய ஆயர்கள் எல்லாரும் இணைந்து செபம் செய்துள்ளனர். இந்தியாவின் 174 மறைமாவட்டங்களின் ஆயர்கள் பெங்களூருவில் நடத்திய 33வது ஆண்டுக் கூட்டத்தில், கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள், இந்தச் செபத்தை வழிநடத்தியுள்ளார்.

Lire la suite...

கச்சத்தீவு திருவிழா பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24ம் திகதிகளில்
(யாழ் நிருபர் சுமித்தி)

வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இம்முறை இலங்கையில் இருந்து பத்தாயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர்கள் என தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Lire la suite...

கொலோசெயம், சிவப்பு வண்ணத்தில் ஒளிர்விக்கப்படும்
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
colosseum

பிப்.08,2018. உலகெங்கும் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களை நினைவுகூரும் வண்ணம், பிப்ரவரி 24, சனிக்கிழமை, உரோம் நகரில் உள்ள கொலோசெயம், சிவப்பு வண்ண விளக்குகளால் ஒளிர்விக்கப்படும் என்று Aid to the Church in Need கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு அறிவித்துள்ளது.

Lire la suite...

இமயமாகும் இளமை : லூர்துநகர் திருத்தலத்தில் இளையோர் அணி
நன்றி : வத்திக்கான் வானொலி
Lourdes 06

14 வயது நிறைந்த பெர்னதெத் சுபிரூ (Bernadette Soubirous) என்ற இளம்பெண்ணுக்கு, 1858ம் ஆண்டு, பிப்ரவரி 11ம் தேதி, லூர்து நகரில், அன்னை மரியா முதல் முறையாகத் தோன்றினார். அந்நிகழ்வின் 160ம் ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகிறோம். கடந்த 160 ஆண்டுகளாக, தன்னை நாடிவந்துள்ள பக்தர்களுக்கு, மனநலத்தையும், உடல் நலத்தையும் இறைவனிடமிருந்து பெற்றுத்தருகிறார் லூர்துநகர் அன்னை மரியா.

Lire la suite...

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org