Get Adobe Flash player

News

தெற்கு ஆசிய பிரான்சிஸ்கன் துறவிகள் கூட்டமைப்பு 
(Fides)
வத்திக்கான் வானொலி

ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 24ம் தேதி முடிய தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட 60க்கும் மேற்பட்ட பிரான்சிஸ்கன் குழுமத் தலைவர்கள் எடுத்த முடிவுகள் குறித்து, அருள்பணி நித்திய சகாயம் அவர்கள், பீதேஸ் செய்தியிடம் கூறினார். சமுதாய அநீதிகள், மிகக்கடுமையான வறுமை, மாண்பை இழக்கும் பெண்கள், உரிமைகளை இழந்த குழந்தைகள், புலம் பெயர்ந்தோர், இயற்கைச் சீரழிவு என்று, பல தளங்களில், தெற்கு ஆசிய நாடுகள் ஒரே விதமான பிரச்சனைகளைச் சந்திக்கின்றன என்று இக்கூட்டத்தில் பேசப்பட்டது. பிரான்சிஸ் கன் துறவு சபைகளின் அடிப்படை விழுமியங்களை மனதில் கொண்டு, இக்கூட்டத்தின் இறுதியில் பத்து-புள்ளி செயல்திட்டம் ஒன்று வகுக்கப் பட்டது என்றும், இன்றைய உலகில் ஓரந்தள்ளப்பட்டவர்களை மையப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் பீதேஸ் செய்திக் குறிப்பு கூறுகிறது. அசிசி நகர் புனித பிரான்சிஸ், இஸ்லாமிய சுல்தானை சந்தித்த 800ம் ஆண்டையும், மகாத்மா காந்தி பிறந்த 150ம் ஆண்டையும் சிறப்பிக்கும்வண்ணம், சமய நல்லுணர்வுகளை வளர்க்கும் விழாக்களை பிரான்சிஸ்கன் துறவுக் குழுமங்கள் திட்டமிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. (Fides)

தகவல் திரு சிவா whtsup வழியாக

வருடா வருடம் ஆகஸ்ட் மாதம் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு நடை பாதையாக மக்கள் செல்வது வழக்கம். இதில் சிறப்பு என்னவென்றால் இதில் செல்லும் பாதி பேர் ஹிந்துகள் தான். அதுவும் இல்லாமல் எந்த வித கூச்சலும் மக்களுக்கு இடையூறும் இல்லாமல் மிக அமைதியாக ஆண்கள் பெண்கள் குழந்தைகள் மற்றும் மாற்று திறனாளிகள் இந்த பாத யாத்திரையை மேற் கொள்ளுகின்றனர் !!!.*

Lire la suite : கர்நாடகத் திருப்பயணிகள் மீது வேலூரில் தாக்குதல்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கள் ஆதாரமற்றவை
- பேராயர் அந்தோனி பாப்புசாமி
-
தகவல் : திருமதி மேரி தெரேசா - வத்திக்கான் வானொலி

Mdu Archbishop 02


இந்தியாவின் சமயச் சார்பற்ற அரசமைப்பு, ஒவ்வொரு குடிமகனின் சமய சுதந்திரத்திற்கு உறுதியளிக்கின்றது. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் பற்றி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் அவர்கள் தெரிவித்திருப்பது, தவறானது மற்றும், ஆதாரமற்றது என்று கூறியுள்ளார், தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் அந்தோனி பாப்புசாமி.

Lire la suite : சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கள் ஆதாரமற்றவை 

நேர்காணல்– தமிழகத்தில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள்
மேரி தெரேசா - வத்திக்கான்
Mdu Archbishop 01

இந்தியாவில், மதம், இனம், மொழி, சமுதாய நிலை போன்ற எவ்விதப் பாகுபாடுகளின்றி, எல்லாருக்கும் பொதுவான கல்வியை வழங்கத் தொடங்கியவர்கள் கிறிஸ்தவர்கள். தமிழகத்தில், ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் உள்ளன

Lire la suite : நேர்காணல்– தமிழகத்தில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள்

20/08/2019
 
"                                                                                "Broken Mary" brings hope in Chicago procession.
Marie 01By Mary Farrow/Catholic News Agency
 
On May 31, 2019, four lanes of traffic on a major thoroughfare in the city of Chicago shut down for an hour and a half, while 3,200 people marched past.
 
Instead of political banners, they held candles. Instead of shouting, they quietly prayed the Rosary and sang Ave Maria. Instead of a politician or city official, they were led by ‘Broken Mary,’ a statue of the Virgin Mary rescued from a dumpster, who still bears the scars of her past—a crack in the middle where she was broken in half, chipped hands, faded paint with scratches.

Lire la suite : "Broken Mary" brings hope in Chicago procession.

விசுவாசிகள் புதிய மனித சமுதாயத்தைச் சமைப்பவர்கள்

மரியா, ஓர் உண்மையான அன்னையைப் போல, நம் வாழ்வின் போராட்டங்களில் நம்முடன் இருக்கிறார்.
ND de paris 01
 

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இயேசு கிறிஸ்துவில் வேரூன்றப்பட்ட புதிய மனித சமுதாயத்தைக் கட்டியெழுப்புவர்களாகச் செயல்படுமாறு, பாரிஸ் உயர்மறைமாவட்ட கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Lire la suite : விசுவாசிகள் புதிய மனித சமுதாயத்தைச் சமைப்பவர்கள்

இந்திய பெருமழை உயிரிழப்புகளுக்கு திருத்தந்தை அனுதாபம்

- கிறிஸ்டோபர் பிரான்சிஸ் -
Flood 01

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மற்றும், குஜராத்தில் பெய்துவரும் பெருமழையால் உயிரிழந்தவர்கள், மற்றும், தங்கள் உறைவிடங்களை இழந்தவர்கள் குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார். இந்தியாவில் பெருமழையால் உயிரிழந்துள்ள மக்கள் குறித்த திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் செய்தி  தலத்திருஅவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Lire la suite : இந்திய பெருமழை உயிரிழப்புகளுக்கு திருத்தந்தை அனுதாபம் 

திருத்தந்தையை இந்தியாவிற்கு அழைக்குமாறு அரசுக்கு வேண்டுகோள்
மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

1999ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் இந்தியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதற்குப் பின்னர், எந்த திருத்தந்தையும் நாட்டிற்கு வருகை தரவில்லை
 pope 35

 

நம் ஆண்டவர் ஆற்றும் வியப்புக்குரிய செயல்களைப் பெறத் தகுதியுள்ளவர்கள் யார் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 02, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார். 

Lire la suite : திருத்தந்தையை இந்தியாவிற்கு அழைக்குமாறு அரசுக்கு வேண்டுகோள்

மதங்களிடையே இணக்கவாழ்வு ஒரு சமுதாயத் தேவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
Pak

மதங்களுக்கிடையே நிகழும் உரையாடல்கள், பாகிஸ்தானின் அமைதிக்கு அடிப்படையானது என்கிறார் லாகூர் பேராயர் செபாஸ்டியன் ஷா

சகோதரர், சகோதரிகளுடன் நல்லுறவைக் கட்டிக்காக்க ஆவல் கொண்டுள்ள திருஅவை, எவரையும் மதமாற்றம் செய்வதில் ஆர்வம் கொள்ளவில்லை என்று, பாகிஸ்தானின் லாகூர் பேராயர், செபாஸ்டியன் ஷா அவர்கள் கூறினார்.

Lire la suite : மதங்களிடையே இணக்கவாழ்வு ஒரு சமுதாயத் தேவை

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org