Get Adobe Flash player

News

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு......

கிறிஸ்தவர்களை மதத்தின் பெயரால் துன்புறுத்தினால் 10 ஆண்டு ஜெயில்.......இந்தியா ஒரு மதசார்ப்பற்ற ஜனநாயக நாடு..........கிறிஸ்தவர்களை ஒடுக்க யாருக்கும் அதிகாரமில்லை.. .
"United Christian Forum" கிறிஸ்துவர்கள் இலவச அழைப்பு மையத்தை ஏர்படுத்தியுள்ளனர்.
எண்- 18002084545
இதன் மூலம் நம்முடைய ஆலயங்கள், பிரசங்கம் நடக்கும் இடங்களில் யாரேனும் தடுக்கவோ, தாக்கவோ முயன்றால் இந்த எண்ணில் புகார் செய்யவும். இதன் மூலம் நம் கிறிஸ்துவ வழக்கறிஞர்கள், மற்றும் அதிகாரிகளைக்கொண்டு நம் பிரச்சனைக்கான தீர்வு உடனடியாக கவனிக்கபடும். நமக்கு தெரிந்த கிறிஸ்தவ நண்பர்கள், போதகர்களுக்கு உடனடியாக பகிறவும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.

 சூறையாடப்பட்ட கத்தோலிக்கப் பள்ளி
school 01school 02school 03 SML

கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தூய இதய மரியன்னை சபை அருட்சகோதிரிகள் கடந்த 74 ஆண்டுகளாக சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மூலம் அப்பகுதியில் கிராம குழந்தைகளுக்கு கல்வி பணி ஆற்றி வருகின்றார்கள்.
மார்ச்25ஆம்தேதி நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு கணித தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததினால் இப்பள்ளியை சேர்ந்த பூங்குழலி என்ற மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டார்.

Lire la suite : சூறையாடப்பட்ட கத்தோலிக்கப் பள்ளி 

Béatification du père Jacques Hamel : clôture du procès diocésain

Merci : KTO

Le rapport de l'enquête diocésaine en vue de la béatification du père Jacques Hamel, tué par deux djihadistes en 2016, est remis samedi 09/03/19 à Monseigneur Dominique Lebrun, archevêque de Rouen.

Lire la suite : Béatification du père Jacques Hamel : clôture du procès diocésain

LE PAPE FRANCOIS AU MAROC

Les 30 et 31 mars, le pape François se rend au Maroc pour son 28ème voyage apostolique.
Merci KTO

pope 13

Le pape François se rend au Maroc, les 30 au 31 mars. Ayant pour thème « Serviteur d’Espérance », cette première visite au Maghreb du pape François est placée sous le signe du développement du dialogue interreligieux, de la promotion de la paix, et s’inscrit dans le prolongement de ses voyages en Égypte (avril 2017) et aux Émirats Arabes Unis (février 2019).

Lire la suite : LE PAPE FRANCOIS AU MAROC

கத்தோலிக்கத் திருஅவை கட்டாய மதமாற்றங்களை எதிர்க்கின்றது

- கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - .(AsiaNews)

ஒவ்வொருவருக்கும், தங்களின் மதத்தை அறிவிப்பதற்கு உரிமை உள்ளது. மதத்தைத் தெரிவுசெய்வதும் சுதந்திரமாக இடம்பெற வேண்டும் - ஆயர் தியோடர் மஸ்கரீனஸ். கட்டாய அல்லது ஏமாற்றி இடம்பெறும் அனைத்து மதமாற்றங்களை கத்தோலிக்கத் திருஅவை எதிர்க்கின்றது, அதேநேரம், ஒவ்வொருவரும் தங்களின் மத நம்பிக்கையை அறிவிக்கவும், அதைப் பரப்பவும், அவர்களுக்குள்ள உரிமையைப் பாதுகாக்கின்றது என்று, இந்திய கத்தோலிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Lire la suite : கத்தோலிக்கத் திருஅவை கட்டாய மதமாற்றங்களை எதிர்க்கின்றது 

சிலுவையில் அறையுண்ட இயேசுவே, விண்ணக திசைகாட்டி

- ஜெரோம் லூயிஸ் -

தவக்காலத்தையும், சிலுவையில் அறையுண்ட இயேசுவையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 27, இப்புதனன்று தன் டுவிட்டர் செய்தியைப் பதிவு செய்திருந்தார்."தவக்காலப் பயணத்தில் நம் பார்வையை எங்கு பதிக்கவேண்டும்? சிலுவையில் அறையுண்டவர் மீது. சிலுவையின் மீதிருக்கும் இயேசுவே, விண்ணகத்தை நமக்கு சுட்டிக்காட்டும் வாழ்வின் திசைகாட்டி" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

Lire la suite : சிலுவையில் அறையுண்ட இயேசுவே, விண்ணக திசைகாட்டி

'இன்றைய உணவை எங்களுக்குத் தாரும்'

- கிறிஸ்டோபர் பிரான்சிஸ் -
pope 12

'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' என்ற செபத்தில், பிறர் தேவைகளுக்காக செபிப்பதன் வழியாக, அது, ஒருமைப்பாடு, மற்றும், பிறர் உணர்வை புரிந்து செயல்படுவதன் செபமாக மாறுகிறது. இப்புதன் காலையில் வத்திக்கான் புனித பேதுரு பேராலய வளாகம் திருப்பயணிகளால் நிரம்பியிருக்க, திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வியுரை, 'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' என்ற செபம் குறித்த விளக்கவுரையுடன் துவங்கியது.

Lire la suite : 'இன்றைய உணவை எங்களுக்குத் தாரும் '

துறவு வாழ்வுக்கு குழு வாழ்வு இன்றியமையாத கூறு 

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - துறவறக் குழுமங்களைவிட்டு, சட்டத்திற்குப் புறம்பே வெளியே இருக்கும் துறவிகள் பற்றிய புதிய விதிமுறைகள் அடங்கிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Motu Proprio திருத்தூது கடிதம் ஒன்று, மார்ச் 26, வெளியிடப்பட்டுள்ளது. Communis Vita என்ற தலைப்பில், தனது சொந்த விருப்பத்தினால் வெளியிட்டுள்ள இத்திருத்தூது கடிதம் வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துறவிகள் பற்றிய திருஅவை சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார்.

Lire la suite : துறவு வாழ்வுக்கு குழு வாழ்வு இன்றியமையாத கூறு

மதுரையில் திட்டமிட்டபடி தேர்தல்…
தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி By Alagesan | Updated: Friday, March 22, 2019, 17:26 [IST] மதுரை: சித்திரைத் திருவிழா மற்றும் பெரிய வியாழன் பண்டிகையை சுட்டிக்காட்டி, மக்களவை தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வாக்குப்பதிவை இரவு 8 மணி வரை நீட்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை ஏற்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால், மதுரை மக்களவைத் தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி பார்த்தசாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதேபோல் தேர்தல் நாளில் பெரிய வியாழன் பண்டிகை என்பதால், கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற வேண்டும் என பிஷப் கவுன்சில் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல் புனித வாரம் வருவதால் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி மற்றொரு கிறிஸ்தவ அமைப்பும் வழக்கு தொடர்ந்திருந்தது. இவ்வழக்குகள் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்திரை திருவிழாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதேசமயம், இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நேரத்தை நீட்டித்திருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதனை அடுத்து, தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்று, தேர்தலுக்கு எதிரான 3 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஆகையால், மதுரை மக்களவைத் தொகுதியில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெற உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/madurai/election-process-as-planned-madurai-high-court-order-344737.html

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org