Get Adobe Flash player

News

காழ்ப்புணர்ச்சி காரணமாகவே காப்பகம் மீது அவதூறு...

பாலேஸ்வரம் பாதிரியார் குற்றச்சாட்டு!
தகவல் :
https://tamil.oneindia.com/news/tamilnadu/father-thomas-paleeswaram-hospice-justifying-his-service-312772.html
Posted By: Gajalakshmi


Fr Thomas சென்னை : ஆதரவற்ற முதியோர்களை பராமரிப்பதற்காக வாங்கும் நிதியை பிறருக்கு செலவு செய்யவில்லை என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவதூறு பரப்பப்படுவதாக பாலேஸ்வரம் காப்பக நிர்வாகி பாதிரியார் தாமஸ் குற்றம்சாட்டியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பாலேஸ்வரம் முதியோர் காப்பகத்தில் இறந்த முதியவர்களின் எலும்புகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 3 நாட்களாக கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காப்பக நிர்வாகி பாதிரியார் தாமஸ் சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Lire la suite...

புனித வளனார் கருணையில்லம் - உண்மைச் செய்தி என்ன?
அருள்பணி பிலோமின்தாசு
St Josephs hospice 01

கௌரவமாக சாவதற்கும் வழியில்லாமல் போய்விடுமோ? ஊடகங்களோடு விஷமிகளின் அறியாமை:

புனித வளனார் கருணையில்லம் (St Joseph's Hospice) நிறுவனம் ஏதோ தவறு செய்துவிட்டதாக தங்கள் TRP மதிப்பை அதிகப் படுத்தும் நோக்கில் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள் தொலைக்காட்சி நிறுவனங்கள். சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சில விஷமிகள், ஏதோ புனித வளனார் கருணையில்லம் நிறுவனம் எலும்புகளை சேகரித்தும், உள் உறுப்புகளை அறுவடை செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவதாகவும் சமுகவலைதளங்களில் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். ஆகவே மக்களுக்கு தெளிவு படுத்த எனது சிறு முயற்சி.

Lire la suite...

இரா.மோகன், உ.பாண்டி வி.சதிஷ்குமார்
நன்றி : விகடன்
 cutch 06

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நிறைவடைந்தது. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துவர்களின் தவக்காலத்தின்போது இருநாள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
cutch 07

Lire la suite...

அருளாளரான திருத்தந்தை 6ம் பால், புனிதராக உயர்த்தப்படுவார்
தகவல் : வத்திக்கான் வானொலி
Pope Paul VI

பிப்.21,2018. நடைபெறும் 2018ம் ஆண்டில், அருளாளரான திருத்தந்தை 6ம் பால், புனிதராக உயர்த்தப்படுவார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களிடம் கூறினார்.

Lire la suite...

களைகட்டியது கச்சத் தீவு திருவிழா!
தகவல் :விகடன்
சுகன்யா, இரா.மோகன், உ.பாண்டி
Cutch feast 01
இந்திய ராமேஸ்வர மீனவர்கள் கொண்டு வந்த 40 அடி உயரம் தேக்குக் கொடிமரத்தில், நெடுந்தீது பங்குத்தந்தை ’எமில் பால்’ கொடியினை ஏற்றி வைத்தார். கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய பக்தர்களும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தலைமன்னார் மற்றும் கொழும்பு பகுதியைச் சேர்ந்த இலங்கை பக்தர்களும் கலந்து கொண்டனர். 
கொடியேற்றத்தைத் தொடர்ந்து சிறப்புத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இத்திருவிழாவில் தீருச் சிலுவை பாவை நிகழ்வும், தேர்பவனியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது வருகின்றன. 

Lire la suite...

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா.. 2100 தமிழக மீனவர்கள் பங்கேற்பு
தகவல் : https://tamil.oneindia.com/news/tamilnadu/katchatheevu-pilgrimage-begins-today-312341.html
Cutch feast
 
 
ராமேஸ்வரம் : கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதில் பங்குபெற தமிழக மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் கச்சத்தீவு சென்றுள்ளனர். கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் இந்திய மற்றும் இலங்கை நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்குபெற உள்ளனர்.

Lire la suite...

சபீனா பசிலிக்காவில் திருநீற்றுப் புதன் திருப்பலி
ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி

பிப்.15,2018. பிப்ரவரி 14, சிறப்பிக்கப்பட்ட திருநீற்றுப் புதனன்று மாலை 4.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம், புனித ஆன்செல்ம் ஆலயத்திலிருந்து புறப்பட்ட பாவப்பரிகாரத் திருப்பவனியை தலைமையேற்று நடத்தினார்.

Lire la suite...

2018ம் ஆண்டு தவக்காலத்திற்குத் திருத்தந்தையின் செய்தி
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
pope 07

பிப்.06,2018. "நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும்" (மத்தேயு 24:12) என்று நற்செய்தியாளர் மத்தேயு பதிவு செய்துள்ள இயேசுவின் சொற்களை மையமாக வைத்து, இவ்வாண்டுக்குரிய தவக்காலச் செய்தியை, திருத்தந்தைபிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

Lire la suite...

இந்தியாவின் வருங்காலம் பற்றி இந்திய ஆயர்கள்
ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி
Cardinal Balios Glemis

 பிப்.13,2018.

இந்தியாவில் கத்தோலிக்க விசுவாசம் பரவுவதற்குக் காரணமான திருத்தூதர் தோமையார், புனித பிரான்சிஸ் சவேரியார் போன்ற மாபெரும் புனிதர்களுக்கு, இந்தியத் திருஅவை நன்றி செலுத்துகின்றது என்று, கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

Lire la suite...

விசுவாச அறிக்கையும் மன்றாட்டும்
நன்றி : வத்திக்கான் வானொலி-

நீங்கள் என்னுள்ளும், என் வார்த்தைகள் உங்களுள்ளும் இருந்தால், நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும், என இயேசு கூறிய, புனித யோவான் நற்செய்தி 15ம் பிரிவின் வார்த்தைகள் முதலில் வாசிக்கப்பட, திருத்தந்தையின், திருப்பலி குறித்த மறைக்கல்வி உரை தொடர்ந்தது.

Lire la suite...

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org