Get Adobe Flash player

News

ஒடிசாவிலுள்ள ஏழு கிறிஸ்தவ கைதிகளின் விடுதலைக்காக செபம்
bishops 03

29வது ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய ஆயர்கள் - RV

ஒடிசா மாநிலத்தில், இந்துமத குரு ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒன்பது ஆண்டுகளாக சிறையிலுள்ள ஏழு குற்றமற்ற கிறிஸ்தவர்கள் விடுதலை செய்யப்படுமாறு, இந்திய ஆயர்கள் எல்லாரும் இணைந்து செபம் செய்துள்ளனர். இந்தியாவின் 174 மறைமாவட்டங்களின் ஆயர்கள் பெங்களூருவில் நடத்திய 33வது ஆண்டுக் கூட்டத்தில், கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள், இந்தச் செபத்தை வழிநடத்தியுள்ளார்.

Lire la suite...

கச்சத்தீவு திருவிழா பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24ம் திகதிகளில்
(யாழ் நிருபர் சுமித்தி)

வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இம்முறை இலங்கையில் இருந்து பத்தாயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர்கள் என தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Lire la suite...

கொலோசெயம், சிவப்பு வண்ணத்தில் ஒளிர்விக்கப்படும்
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
colosseum

பிப்.08,2018. உலகெங்கும் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களை நினைவுகூரும் வண்ணம், பிப்ரவரி 24, சனிக்கிழமை, உரோம் நகரில் உள்ள கொலோசெயம், சிவப்பு வண்ண விளக்குகளால் ஒளிர்விக்கப்படும் என்று Aid to the Church in Need கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு அறிவித்துள்ளது.

Lire la suite...

இமயமாகும் இளமை : லூர்துநகர் திருத்தலத்தில் இளையோர் அணி
நன்றி : வத்திக்கான் வானொலி
Lourdes 06

14 வயது நிறைந்த பெர்னதெத் சுபிரூ (Bernadette Soubirous) என்ற இளம்பெண்ணுக்கு, 1858ம் ஆண்டு, பிப்ரவரி 11ம் தேதி, லூர்து நகரில், அன்னை மரியா முதல் முறையாகத் தோன்றினார். அந்நிகழ்வின் 160ம் ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகிறோம். கடந்த 160 ஆண்டுகளாக, தன்னை நாடிவந்துள்ள பக்தர்களுக்கு, மனநலத்தையும், உடல் நலத்தையும் இறைவனிடமிருந்து பெற்றுத்தருகிறார் லூர்துநகர் அன்னை மரியா.

Lire la suite...

இந்திய ஆயர் பேரவையின் தலைவராக கர்தினால் கிரேசியஸ் 
தகவல் : வத்திக்கான் வானொலி

இந்திய ஆயர் பேரவையின் 33வது ஆண்டுக்கூட்டத்தில், இப்பேரவையின் தலைவராக, மும்பை பேராயர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  பிப்ரவரி 2ம் தேதி முதல், 9ம் தேதி முடிய, பெங்களூருவில் நடைபெற்றுவரும் இந்திய ஆயர் பேரவை கூட்டத்தில், கர்தினால் கிரேசியஸ் அவர்கள், அடுத்த இரு ஆண்டுகளுக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Lire la suite...

இந்திய ஆயர்களின் 33வது பொதுக்கூட்டம், ஆரம்ப நிகழ்வுகள்

ஆதாரம் : CBCI /வத்திக்கான் வானொலி


bishops 02

பிப்.03,2018.

இயேசு ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழா, ஆண்டவரோடு சந்திப்பு நடத்த அழைப்பு விடுக்கின்றது, இச்சந்திப்பு, மக்களோடு சந்திப்பு நடத்த நம்மை இட்டுச் செல்கின்றது என்று, இந்திய திருப்பீடத் தூதர் பேராயர் ஜாம்பத்திஸ்தா திகுவாத்ரோ அவர்கள், இந்திய ஆயர்களிடம் கூறினார்.

Lire la suite...

பெங்களூருவில் இந்திய ஆயர்கள் கூட்டம் பிப்ரவரி 2-9
ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி

Bishops 01

பிப்.02,2018.

இந்தியாவின் 170க்கும் மேற்பட்ட மறைமாவட்டங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 200 ஆயர்கள், பெங்களூருவில், பிப்ரவரி 2, இவ்வெள்ளியன்று, தங்களின் 33வது கூட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெறும் இக்கூட்டத்தில், மியான்மாரின் யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறப்புரையாற்றுவார்.

இந்தியாவில் திருஅவையின் மறைப்பணியை வலியுறுத்தும் அதேவேளை, பன்மையில் ஒற்றுமையைக் காக்கும் பல்வேறு வழிகளை, ஆயர்கள் இந்தக் கூட்டத்தில், கலந்துரையாட உள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்திய ஆயர்களின் இக்கூட்டம் “உலகம் முடியும்வரை நான் எந்நாளும் உங்களோடு இருப்பேன் (மத்.28:20)” என்ற தலைப்பில் இடம்பெற்று வருகிறது.

CBCI எனப்படும் இந்திய ஆயர்கள் பேரவை, 174 மறைமாவட்டங்களையும், 204 ஆயர்களையும், 64 ஓய்வு பெற்ற ஆயர்களையும் கொண்டு, உலகில் நான்காவது பெரிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையாக விளங்குகிறது.

உலக அமைதிக்காக ஒரு செப நாள் பிப்ரவரி 23

உலகின் அமைதிக்காகச் செபிக்குமாறு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் எல்லாரையும் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் கடுமையான ஆயுத மோதல்கள் அதிகரித்துக்கொண்டே வரும் இன்றையச் சூழலில், பிப்ரவரி 23, தவக்கால முதல் வாரத்தின் வெள்ளிக்கிழமையை, உலகின் அனைத்துக் கிறிஸ்தவரும், அமைதிக்கான செபம் மற்றும் நோன்பு நாளாகக் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுக்கிறேன் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளை, சிறப்பாக, காங்கோ சனநாயக குடியரசு மற்றும் தென் சூடான் நாடுகளின் மக்களுக்காக அர்ப்பணிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார்.

Lire la suite...

2018ம் ஆண்டு தவக்காலத்திற்கு திருத்தந்தையின் செய்தி

"நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும்" (மத்தேயு 24:12) என்று நற்செய்தியாளர் மத்தேயு பதிவு செய்துள்ள இயேசுவின் சொற்களை மையமாக வைத்து, இவ்வாண்டுக்குரிய தவக்காலச் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார். இம்மாதம் 14ம் தேதி, சிறப்பிக்கப்படும் திருநீற்றுப் புதனன்று துவங்கும் தவக்காலத்திற்கென, இச்செவ்வாயன்று செய்தி வெளியிட்ட திருத்தந்தை,


Lire la suite...

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org