Get Adobe Flash player

News

 நம் குடும்பங்களில் எந்த ஒரு முதியோரும் நிராகரிக்கப்பட்டவர்போல் இருக்கக் கூடாது

சன.11,2014. நம் குடும்பங்களில் எந்த ஒரு முதியோரும் நிராகரிக்கப்பட்டவர்போல் இருக்கக் கூடாது; முதியவர்கள் நம் சமூகத்தின் சொத்து என்று இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள Twitter செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், நம் ஆண்டவரின் திருமுழுக்கு விழாவாகிய இஞ்ஞாயிறன்று வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அருளடையாளத்தை வழங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருமுழுக்கு வழங்கவிருக்கும் குழந்தைகளில், பெரும்பாலான குழந்தைகள் வத்திக்கான் பணியாளர்களின் பிள்ளைகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும், தான் கருத்தாங்கியிருந்த குழந்தையை கருக்கலைப்பு செய்ய விரும்புவதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்த ஒரு பெண்ணின் மகனுக்கும் இஞ்ஞாயிறன்று இவ்வருளடையாளத்தை வழங்கவுள்ளார் திருத்தந்தை என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது..

Lire la suite...

 நம் குடும்பங்களில் எந்த ஒரு முதியோரும் நிராகரிக்கப்பட்டவர்போல் இருக்கக் கூடாது

சன.11,2014. நம் குடும்பங்களில் எந்த ஒரு முதியோரும் நிராகரிக்கப்பட்டவர்போல் இருக்கக் கூடாது; முதியவர்கள் நம் சமூகத்தின் சொத்து என்று இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள Twitter செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், நம் ஆண்டவரின் திருமுழுக்கு விழாவாகிய இஞ்ஞாயிறன்று வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அருளடையாளத்தை வழங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருமுழுக்கு வழங்கவிருக்கும் குழந்தைகளில், பெரும்பாலான குழந்தைகள் வத்திக்கான் பணியாளர்களின் பிள்ளைகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும், தான் கருத்தாங்கியிருந்த குழந்தையை கருக்கலைப்பு செய்ய விரும்புவதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்த ஒரு பெண்ணின் மகனுக்கும் இஞ்ஞாயிறன்று இவ்வருளடையாளத்தை வழங்கவுள்ளார் திருத்தந்தை என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது..

Lire la suite...

ஆண்டின் இறுதி நாளன்று - Te Deum சிறப்புச் செய்தி:

சன.01,2014. 'இதுவே கடைசி காலம் என தூய யோவான் தன் முதல் திருமுகம் 2ம் பிரிவில் எழுதியுள்ளார். இறைவன் வரலாற்றில் வரும் இறுதி காலத்தில் நாம் உள்ளோம் என்பதை இந்த வார்த்தைகள் குறிக்கின்றன. இந்த கடைசிக் காலத்திற்குப் பின் வரும் அடுத்த படி என்பது இயேசுவின் இறுதி வருகையாகும். நாம் இங்கு பேசுவது காலத்தின் அளவைப் பற்றியல்ல, மாறாக அதன் தரத்தைப்பற்றியது. காலம் நிறைவுற்றபோது அதாவது, மீட்பின் காலம் முழுமைபெற்றபோது இயேசு இவ்வுலகிற்கு வந்தார். இதே கண்ணோட்டத்தில் பார்க்கும்போது நாம் கடைசி காலத்தில் உள்ளோம் எனலாம். நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் கடைசி காலமே.

Lire la suite...

 

 
28 December,2013

New Delhi (CBCI News): Pope Francis has erected the Diocese of Sultanpet with territory taken from the Dioceses of Coimbatore and Calicut, making it a suffragan of the Archdiocese of Verapoly. The Pope has appointed Rev. Fr. Peter Abir Antonysamy of the Archdiocese of Pondicherry-Cuddalore as the first bishop of the new diocese. The erection of the diocese and the appointment was made known at 4.30 p.m. on Saturday, 28 December. Sultanpet is the 167th diocese in India. 
 
  நமது திருத்தந்தை பிரான்சிசு அவர்கள் சுல்தான்பெட் என்னும் புதிய மறைமாவட்டத்தை உருவாக்கியுள்ளார். இது இந்தியாவின் 167வது மறைமாவட்டமாகும் . இந்த புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராக  புதுவை கடலுர் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்திரு. பீட்டர் அபீர் அந்தோனிசாமி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.


(RV) « Prions particulièrement pour les chrétiens qui subissent des discriminations à cause de leur témoignage rendu au Christ et à l’Evangile ». En ce jour de la Saint-Etienne qui commémore le premier martyr de l’Eglise, « un homme rempli de foi et d’Esprit Saint », « choisi avec six autres pour le service des veuves et des pauvres dans la première communauté de Jérusalem » et qui « fut trainé hors des murs de la ville et lapidé », le Pape François a appelé les fidèles réunis place Saint-Pierre à prier et à penser à ces martyrs d’aujourd’hui.

« Jésus transforme la mort de ceux qui l’aiment en aurore d’une vie nouvelle »

L’Angélus de ce 26 décembre s’inscrit dans l’octave de Noël, « un temps de joie pour tout le peuple de Dieu ». Or fêter un martyr dans ces circonstances peut paraitre incongru mais « dans l’optique de la foi, a expliqué le Pape, la fête de Saint-Etienne est en pleine harmonie avec la signification profonde de Noël. Dans le martyr, en effet, la violence est vaincue par l’amour ; la mort par la vie. L’Eglise voit dans le sacrifice des martyrs leur “montée au ciel”. Jésus transforme la mort de ceux qui l’aiment en aurore d’une vie nouvelle ».

Lire la suite...

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்  சிறப்புச்செய்தி


உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக!
உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!(லூக். 2 : 14)

உரோம் நகரிலும் உலகிலும் உள்ள அன்பு சகோதர சகோதரிகளே,
கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துக்கள்.

கிறிஸ்து பிறந்த இரவில் பெத்லகேமில் ஆட்டிடையர்களுக்குத் தோன்றிய வானதூதர்களின் பாடலை நான் இப்போது எடுத்துக்கொள்கிறேன். இது விண்ணையும் மண்ணையும் இணைக்கும் பாடல், வானுலகிற்கு மகிமையையும் புகழ்ச்சியையும் வழங்குவது, மற்றும், இவ்வுலகிற்கும் அதிலுள்ள அனைத்து மக்களுக்கும் அமைதி வாக்குறுதியை தருவது.
இந்தப்பாடலில் பங்கெடுக்குமாறு உங்கள் ஒவ்வொருவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

Lire la suite...

மார்த்தா இல்லப் பணியாளர்கள், தெருவில் வாழும் மூன்று ஏழைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் பிறந்த நாள்

டிச.17,2013. கடவுள் ஒருபோதும் நம்மைத் தனியே விடுவதில்லை, அவர் எப்போதும் நம்முடனே நடக்கிறார், நம்மோடு பயணிக்கிறார் என்று, இச்செவ்வாய் காலையில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிறந்த நாளான இச்செவ்வாயன்று, அவர் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் கர்தினால்கள் அவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ, திருப்பீடச் செயலர், அவ்வில்லத்தில் வாழ்வோர் மற்றும் வீடற்று தெருவில் வாழும் மூன்று ஏழைகளுடன் சேர்ந்து திருப்பலி நிகழ்த்தியபோது, கடவுள் நமது வாழ்வில் எப்போதும் பிரசன்னமாய் இருக்கிறார் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

Lire la suite...

2013ம் ஆண்டின் மனிதராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை Time இதழ் தெரிவு செய்திருப்பது மிகுந்த மகிழ்வளிக்கிறது - கர்தினால் Timothy Dolan


டிச.12,2013. இறையன்பையும், மக்கள் மீது கனிவையும் வெளிப்படுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை 2013ம் ஆண்டின் மனிதராக Time இதழ் தெரிவு செய்திருப்பது மிகுந்த மகிழ்வளிக்கிறது என்று நியூயார்க் பேராயர் கர்தினால் Timothy Dolan அவர்கள் கூறினார்.
அன்பும் கனிவும் திருஅவையில் எக்காலமும் அழியாத செய்தி என்றும், அந்த நற்செய்தியின் ஒப்பற்ற எடுத்துக்காட்டாக வாழும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டின் மனிதர் என்ற இடத்தைப் பெறுவது அனைவரும் எதிர்பார்த்த ஒரு தெரிவே என்றும் கர்தினால் Dolan தெரிவித்தார்.
திருஅவையின் மீது மக்களுக்கு மீண்டும் ஓர் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் உருவாக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையை விட்டு விலகி இருந்த பலரை மீண்டும் அதில் இணைத்ததை காணமுடிகிறது என்று Time இதழின் பொறுப்பாசிரியரான Nancy Gibbs அவர்கள் CNA செய்தியிடம் கூறினார்.
பாரம்பரியத்தைக் காப்பவர்களும், புதுமையை விரும்புகிறவர்களும் ஏற்றுக்கொள்ளும் உண்மைகளை பேசும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் மனசாட்சியின் குரலாக இருந்து செயல்படுகிறார் என்று பொறுப்பாசிரியர் Nancy Gibbs எடுத்துரைத்தார்.
பல்வேறு காரணங்களால் பிளவுபட்டுக் கிடந்த கத்தோலிக்கத் திருஅவையை ஒன்றிணைக்கும் பாலமாக விளங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்களாக வாழ்வது பெருமைக்குரியது என்ற எண்ணத்தை அனைவர் மனதிலும் விதைத்துள்ளார் என்று அமெரிக்க இயேசு சபை மாநிலங்களின் தலைவர் அருள்பணி Thomas Smolich அவர்கள் கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Time இதழின் 'ஆண்டின் மனிதர்' என்ற நிலையைப் பெறும் மூன்றாவது திருத்தந்தை என்பதும், இவருக்கு முன்னர், 1962ம் ஆண்டு திருத்தந்தை 23ம் ஜான் அவர்களும், 1994ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களும் இதே நிலையைப் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், Time இதழின் இப்பெருமைக்குரியவர்களாக கருதப்பட்ட முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான் அவர்களும், இரண்டாம் ஜான்பால் அவர்களும் 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புனித நிலைக்கு உயர்த்தப்பட உள்ளனர் என்பதும் மற்றொரு சிறப்பு.

ஆதாரம் : CNA/EWTN

Lire la suite...

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org