Get Adobe Flash player

News

கத்தோலிக்கத் திருஅவை கட்டாய மதமாற்றங்களை எதிர்க்கின்றது

- கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - .(AsiaNews)

ஒவ்வொருவருக்கும், தங்களின் மதத்தை அறிவிப்பதற்கு உரிமை உள்ளது. மதத்தைத் தெரிவுசெய்வதும் சுதந்திரமாக இடம்பெற வேண்டும் - ஆயர் தியோடர் மஸ்கரீனஸ். கட்டாய அல்லது ஏமாற்றி இடம்பெறும் அனைத்து மதமாற்றங்களை கத்தோலிக்கத் திருஅவை எதிர்க்கின்றது, அதேநேரம், ஒவ்வொருவரும் தங்களின் மத நம்பிக்கையை அறிவிக்கவும், அதைப் பரப்பவும், அவர்களுக்குள்ள உரிமையைப் பாதுகாக்கின்றது என்று, இந்திய கத்தோலிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Lire la suite : கத்தோலிக்கத் திருஅவை கட்டாய மதமாற்றங்களை எதிர்க்கின்றது 

சிலுவையில் அறையுண்ட இயேசுவே, விண்ணக திசைகாட்டி

- ஜெரோம் லூயிஸ் -

தவக்காலத்தையும், சிலுவையில் அறையுண்ட இயேசுவையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 27, இப்புதனன்று தன் டுவிட்டர் செய்தியைப் பதிவு செய்திருந்தார்."தவக்காலப் பயணத்தில் நம் பார்வையை எங்கு பதிக்கவேண்டும்? சிலுவையில் அறையுண்டவர் மீது. சிலுவையின் மீதிருக்கும் இயேசுவே, விண்ணகத்தை நமக்கு சுட்டிக்காட்டும் வாழ்வின் திசைகாட்டி" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

Lire la suite : சிலுவையில் அறையுண்ட இயேசுவே, விண்ணக திசைகாட்டி

'இன்றைய உணவை எங்களுக்குத் தாரும்'

- கிறிஸ்டோபர் பிரான்சிஸ் -
pope 12

'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' என்ற செபத்தில், பிறர் தேவைகளுக்காக செபிப்பதன் வழியாக, அது, ஒருமைப்பாடு, மற்றும், பிறர் உணர்வை புரிந்து செயல்படுவதன் செபமாக மாறுகிறது. இப்புதன் காலையில் வத்திக்கான் புனித பேதுரு பேராலய வளாகம் திருப்பயணிகளால் நிரம்பியிருக்க, திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வியுரை, 'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' என்ற செபம் குறித்த விளக்கவுரையுடன் துவங்கியது.

Lire la suite : 'இன்றைய உணவை எங்களுக்குத் தாரும் '

துறவு வாழ்வுக்கு குழு வாழ்வு இன்றியமையாத கூறு 

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - துறவறக் குழுமங்களைவிட்டு, சட்டத்திற்குப் புறம்பே வெளியே இருக்கும் துறவிகள் பற்றிய புதிய விதிமுறைகள் அடங்கிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Motu Proprio திருத்தூது கடிதம் ஒன்று, மார்ச் 26, வெளியிடப்பட்டுள்ளது. Communis Vita என்ற தலைப்பில், தனது சொந்த விருப்பத்தினால் வெளியிட்டுள்ள இத்திருத்தூது கடிதம் வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துறவிகள் பற்றிய திருஅவை சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார்.

Lire la suite : துறவு வாழ்வுக்கு குழு வாழ்வு இன்றியமையாத கூறு

மதுரையில் திட்டமிட்டபடி தேர்தல்…
தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி By Alagesan | Updated: Friday, March 22, 2019, 17:26 [IST] மதுரை: சித்திரைத் திருவிழா மற்றும் பெரிய வியாழன் பண்டிகையை சுட்டிக்காட்டி, மக்களவை தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வாக்குப்பதிவை இரவு 8 மணி வரை நீட்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை ஏற்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால், மதுரை மக்களவைத் தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி பார்த்தசாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதேபோல் தேர்தல் நாளில் பெரிய வியாழன் பண்டிகை என்பதால், கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற வேண்டும் என பிஷப் கவுன்சில் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல் புனித வாரம் வருவதால் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி மற்றொரு கிறிஸ்தவ அமைப்பும் வழக்கு தொடர்ந்திருந்தது. இவ்வழக்குகள் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்திரை திருவிழாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதேசமயம், இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நேரத்தை நீட்டித்திருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதனை அடுத்து, தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்று, தேர்தலுக்கு எதிரான 3 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஆகையால், மதுரை மக்களவைத் தொகுதியில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெற உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/madurai/election-process-as-planned-madurai-high-court-order-344737.html

 

கொழும்பு காரித்தாசின் தவக்கால நடவடிக்கைகள்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
Carita Colombo

கொழும்பு உயர்மறைமாவட்டத்தில், இவ்வாண்டு தவக்காலத்தில் திரட்டப்படும் ஒவ்வொரு பைசாவும், இளையோர் தொழிற் கல்விக்கும், மாற்றுத்திறனாளர் சிறார்க்கு ஆதரவான பணிகளுக்கும் செலவழிக்கப்படும்

Lire la suite : கொழும்பு காரித்தாசின் தவக்கால நடவடிக்கைகள்

 நன்றி :(AsiaNews)
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ELECTION

புனித வாரத்தில் பல வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறும் என்பதையும், அவை கத்தோலிக்கருக்கு மிகவும் முக்கியமான வழிபாடுகள் என்பதையும் கூறி, ஆயர்கள் விடுத்த விண்ணப்பத்தை, தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.

Lire la suite : புனித வியாழன் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம் நிராகரிப்பு

Pope Continues Teaching on Lord’s Prayer: ‘Your Will be Done’
Jim Fair
pope 11

The Prayer’s Third Invocation

coutesy : https://zenit.org/articles/pope-continues-teaching-on-lords-prayer-your-will-be-done/

Pope Francis on March 20, 2019, continued his commentaries on the Lord’s Prayer, focusing on the theme “Your Will be Done.”

His comments came during the General Audience in St. Peter’s Square attended by the faithful from around the world.

“Continuing our catechesis on the Lord’s Prayer today we focus on the third invocation: ‘Your will be done.’ This must be read as united with the first two – ‘Hallowed be your name’ and ‘Your Kingdom come’ – so that together they form a triptych: Hallowed be your name, Your Kingdom come, Your will be done”

Lire la suite : Pope continues teaching Lord's prayer

கச்சத்தீவு திருவிழா இன்று கோலாகலமாக தொடக்கம்…
 
ஏராளமானோர் பங்கேற்பு By Alagesan | Published: Friday, March 15, 2019, 15:09 [IST]
St Antony 01
 
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த ஏராளமானோர் இந்த திருவிழாவில் பங்கேற்கின்றனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Lire la suite : கச்சத்தீவு திருவிழா இன்று கோலாகலமாக தொடக்கம்

திருத்தந்தையின் புனித யோசேப் பக்தி
St Joseph 03

 திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டினாவில் பணியாற்றிய காலத்திலும், தற்போது வத்திக்கானில் தனது அலுவலக அறையிலும், உறங்கும் நிலையிலுள்ள புனித யோசேப் அவர்களின் திருவுருவத்தை வைத்துள்ளார். இத்திருவுருவத்தின் மீது தான் கொண்டுள்ள சிறப்பு பக்தி பற்றி, 2015ம் ஆண்டு சனவரியில் மணிலாவில் நடைபெற்ற உலக குடும்பங்கள் மாநாட்டில் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித யோசேப், உறுதியான மற்றும் அமைதியான மனிதர் என்பதால், இவரை நான் மிகவும் அன்புகூர்கிறேன் என்று கூறினார்.

Lire la suite : திருத்தந்தையின் புனித யோசேப் பக்தி

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org