Get Adobe Flash player

News

Cardinal cercueil

 

08.06.2014 புதுவை

நேற்று இரவு முதல் ஏராளமான மக்கள் கர்தினால் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த

வந்த வண்ணமாக இருக்கின்றனர்.

இன்று காலை புதுவைப் பேராயர் மேதகு அந்தோனி ஆனந்தராயர் ஆண்டகை அவர்கள் கர்தினால் திரு உடல் முன்னிலையில் திருப்பலி நிறைவேற்றினார்கள்.

பின்ன்ர் முன்னாள் புதுவைப் பேராயர் மேதகு மைக்கல் அகஸ்டின் ஆண்டகை அவர்கள அஞ்சலி செலுத்தினார்.  அப்போது, கர்தினால் லூர்துசாமி , ஆண்டவராகத் திருநிலைப்படுத்தபட்டபோது நிகழ்ந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். கர்தினால் அவர்கள் கற்றுத் தந்த பாடலையும் பாடினார்.

 

இன்று மாலை புதுவை நேரம் 04.00 மணிக்கு இன்னொரு திருப்பலி நடைபெறும்.

நாளைக் காலை 09.30 மணிக்குக் கர்திளால் திரு உடல் ஆடம்பரப் பவனியாக காந்தி தெரு நீதாராசப்பையர் தெரு மிசன் தெரு... வழியாக

சென்ம இராக்கினி அன்னை ஆலயம் வந்து சேரும். அங்கே காலை 10.00 மணிக்குத் திருப்பலி நடைபெறும். அதில் 4 கர்தினால்கள், பாப்பரசர் தூதுவர், 30 ஆயர்கள் பேராயர்கள், 500 குருக்கள் கன்னியர் எராளமான மக்கள் கலந்துகொள்கின்றனர். அதன் பின்னர் கர்தினால் திரு உடல நல்லடக்கம் செய்யப்படும்.

 

அவர் ஆன்ம இளைப்பாற்றிக்காக வேண்டிக்கொள்வோம்.

 

http://ta.radiovaticana.va/m_articolo.asp?c=804933

 

கர்தினால் லூர்துசாமி அவர்கள், நோயிலும், திருஅவைக்கு, செபத்தாலும் துன்பத்தாலும் தொடர்ந்து பணி செய்தவர்கள், கர்தினால் சொதானோ பாராட்டு


ஜூன்,05,2014. இறைவனடி எய்தியுள்ள கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்கள், நோயினால் நீண்டகாலமாக வேதனை அனுபவித்தாலும், அவர் தனது செபத்தாலும் துன்பத்தாலும் திருஅவைக்குத் தொடர்ந்து பணி செய்தார் எனப் பாராட்டினார் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ.
ஜூன் 05, இவ்வியாழன் உள்ளூர் நேரம் முற்பகல் 11.30 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் கர்தினால் லூர்துசாமி அவர்களுக்கு இறுதி வழியனுப்பும் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய, கர்தினால்கள் அவைத் தலைவர் கர்தினால் சொதானோ அவர்கள், கர்தினால் லூர்துசாமி அவர்கள் தலத்திருஅவைகளுக்கும், அகிலத் திருஅவைக்கும் செய்த அரும்பணிகளைப் பாராட்டினார்.
உயிர்த்துடிப்புள்ள, மிகுந்த ஆர்வமிக்க அருள்பணியாளராக பத்து ஆண்டுகள் தனது பாண்டிச்சேரி உயர்மறைமாவட்டத்துக்கும், பத்து ஆண்டுகள் பங்களூரு உயர்மறைமாவட்டத்துக்குமென உழைத்த கர்தினால் லூர்துசாமி அவர்கள், திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் அழைப்பின்பேரில் வத்திக்கான் வந்து நற்பணியாற்றினார் எனவும் புகழ்ந்தார் கர்தினால் சொதானோ.
உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன் என்றுரைத்த தூய பவுல் அடிகளாரின் வார்த்தைகளை அடிக்கடி உச்சரித்த கர்தினால் லூர்துசாமி அவர்களின் ஆன்மா நிறைசாந்தியடைய நாம் அனைவரும் செபிப்போம் எனவும் உரைத்தார் கர்தினால் சொதானோ.
ஆயிரக்கணக்கான இந்தியர்களும் மற்றவர்களும் கலந்துகொண்ட இந்தத் திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வந்து இறந்த கர்தினால் லூர்துசாமி அவர்களின் பூதஉடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி செபித்தார்.
நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் செயலராக 10 ஆண்டுகளும், பின்னர், கர்தினாலாக கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவராக 7 ஆண்டுகளும் பணியாற்றி ஒய்வுபெற்ற கர்தினால் லூர்துசாமி அவர்களின் உடல் இவ்வெள்ளியன்று இந்தியாவின் பாண்டிச்சேரிக்கு எடுத்துச்செல்லப்படும்.
புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்டத்தின் பேராலயத்தில் ஜூன் 9, திங்களன்று இறுதி அடக்கத் திருப்பலியும், அடக்கச் சடங்குகளும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி


சேவைகள் மூலம் கர்தினால் லூர்துசாமி உலக வரலாற்றில் இடம் பெறுவார்... ஜெ. இரங்கல்
Posted by: Jayachitra Updated: Thursday, June 5, 2014, 17:25 [IST]
 
Jayalalitha

சேவைகள் மூலம் கர்தினால் லூர்துசாமி உலக வரலாற்றில் இடம் பெறுவார்... ஜெ.
இரங்கல் சென்னை: வாட்டிகனில் காலமான கர்தினால் லூர்துசாமி மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கத்தோலிக்க கிறிஸ்தவ சமுதாயத்தின் தூணாகத் திகழ்ந்த கர்தினால் துரைசாமி சைமன் லூர்துசாமி மரணம் அடைந்தார் என்ற தகவல் அறிந்து நான் மிகவும் ஆழ்ந்த வேதனை அடைந்தேன். கர்தினால் லூர்துசாமி இந்திய கர்தினால்களில் 4-வது கர்தினால் ஆவார். ரோமன் கத்தோலிக்க சபையில் இடம் பெற்ற முதல் தமிழ்நாட்டு கர்தினால் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு.

Lire la suite...

பெரியோர் சூட்டிய புகழாரம் :

Caerdinal Lourdusamy 07

 

பாப்பரசர் 2 -ஆம் அருள் சின்னப்பர் :

('உலகிடை ஒளிரும் செஞ்சுடர்' - பக் iii - iv-
அருந்தமிழ் அடிகள் பி பி சேவியர்)

"உங்களைக் கீழ்த் திருச்சபைகளின் திருச்சங்கத் தலைவராக நியமித்தோம்.
அத்திருச்சபைகள் உங்களுடைய அறிவாற்றல், இறை பக்தி, விவேகத்தின் நற்பயன்களை அடையவேண்டும்

என்று விரும்பினோம். நீங்கள் இத்தனை மிகுதியான திருச்சங்கங்க ஆணைக் குழுக்களிலும்

உறுப்பினராக இருப்பது புனித இராயப்பரின் இப் புனித ஆட்சிப் பீடம் உங்கள் மீது கொண்டுள்ள நன்மதிப்புக்குச் 

சான்றாகும்."

----------------------------------------------------------

 

புனித அன்னை தெரெசா :

('உலகிடை ஒளிரும் செஞ்சுடர்' - பக் v- Vi
அருந்தமிழ் அடிகள் பி பி சேவியர்)

"கர்தினால் லூர்துசாமி ஆண்டகை இறைவன் திருச்சபைக்கு அளித்துள்ள உண்மையான ஓர் அன்பளிப்பு.

திருச்சபைக்கு இவர் குறையாத பிரமாணிக்கமும் அன்பும் கொண்டிருக்கிறார்."

 

----------------------------------------------------------

புதுவை கடலுர் முன்னாள் பேராயர் வி.எஸ்  செல்வநாதர் ஆண்டகை :

('உலகிடை ஒளிரும் செஞ்சுடர்' - பக் xiii-
அருந்தமிழ் அடிகள் பி பி சேவியர்)

" ஆண்டகையவர்களின் பணிகளுக்கு எத்தகைய குறுகிய கருத்துகளும் இடையூறாக

இருப்பதில்லை. அவர் கனிவு வாய்ந்த திறந்த உள்ளத்துடன் சாதி  நிற சமய இன வேறுபாடுகளின்றி

எல்லைகள் அனைத்தையும் ◌தாண்டி வான விளம்புகளையும் தாண்டிச் சென்று  அனைத்துலக மக்களையும் தம் அன்பினால் அணைத்துக்கொள்கிறார்."

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org