Get Adobe Flash player

News

 ஜூன்,28,2014. இறைவனோடு நண்பர்களாக இருப்பதென்பது, பிள்ளைகள் தங்கள் பெற்றோருடன் பேசுவதுபோன்று, எளிமையாகச் செபிப்பதாகும் என, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், புனிதர்கள் பேதுரு பவுல் விழாவாகிய ஜூன் 29ம் தேதி இஞ்ஞாயிறன்று திருத்தந்தைக்கான பிறரன்பு நாள், “பிறரன்பின் சாட்சிகளாக இருங்கள்” என்ற தலைப்பில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நாளில் உலகெங்கும் கத்தோலிக்க ஆலயங்களில் எடுக்கப்படும் உண்டியல் பணம், தேசிய இயற்கைப் பேரிடர்கள் மற்றும் போர்களால் பாதிக்கப்படுகிறவர்களுக்கும், இன்னும் பிற பிறரன்பு பணிகளுக்குமென திருத்தந்தை செய்யும் உதவிக்கென வழங்கப்படுகின்றது.
இராயப்பர் காசு என்றழைக்கப்படும் இந்த உண்டியல் பற்றி பேட்டியளித்த பேராயர் ஆஞ்சலோ பெச்சு அவர்கள், ஏழைகளுக்காகக் குரல் கொடுக்கும் திருத்தந்தை அவர்களின் பிறரன்புப் பணிகளுக்கு அனைவரும் தாராளமாக கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

முழுமையான கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவனின் கொடைஜூன்,28,2014. தூய ஆவியால் உந்தப்பட்டு நாம் அனைவரும் ஒருவரையொருவர் இறைவனில் பார்ப்பதற்குக் கற்றுக்கொண்டால், நமது பாதை மேலும் நேரானதாகவும், நம் அன்றாட வாழ்வின் பல நிலைகளில் நம் ஒத்துழைப்பு மேலும் எளிதானதாகவும் அமையும் என, கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பிரதிநிதிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களின் பிரதிநிதிகள் குழுவை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
முழுமையான கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவனின் கொடை எனவும், தூய ஆவியின் வல்லமையால், விசுவாசக் கண்கொண்டு ஒருவர் மற்றவரை இறைவனில் பார்க்கும்போது இந்த ஒன்றிப்பை அடைவதற்கான அருளை இறைவன் இப்போதுகூட நமக்கு அருளுகிறார் எனவும் கூறினார் திருத்தந்தை.
இவ்வாறு பார்க்க வைக்கும் சிந்தனையானது ஒன்றிப்புப் பாதையில் நம்மை மேலும் அதிகமதிகமாய் இட்டுச்செல்லும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்த திருத்தந்தை, நாம் அனைவரும் தூய ஆவியின் செயல்களுக்குத் திறந்த உள்ளம் கொண்டவர்களாய் இருக்க வேண்டியது அவசியம் எனவும் கேட்டுக்கொண்டார்.
திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களும், கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை முதலாம் அத்தனகோரஸ் அவர்களும், எருசலேம் புனித நகரில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்ததை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் புனித பூமியிலும், பின்னர் வத்திக்கானிலும் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்புக்களையும் மகிழ்வோடு குறிப்பிட்டார்.
புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவையொட்டி கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தையின் பிரதிநிதிகள் குழு வத்திக்கானுக்கு வருகை தருவதும், புனித அந்திரேயா விழாவன்று வத்திக்கான் பிரதிநிதிகள் குழு கான்ஸ்டான்டிநோபிள் செல்வதும் வழக்கத்தில் உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழாவில் திருத்தந்தை : திருநற்கருணை அன்பின் உணவு

ஜூன்,20,2014. இயேசுவே உயிருள்ள உணவு, அந்த உணவால் மட்டுமே மனிதரின் மிக ஆழமான ஆவல்களைத் திருப்தி செய்ய இயலும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் மாலை கூறினார்.
வத்திக்கானில் இவ்வியாழனன்று இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழா சிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு, உரோம் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா வளாகத்தில் இவ்வியாழன் மாலை நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உடல் பசியோடு மனிதருக்கு மற்றுமொரு பசி இருக்கின்றது, அது வாழ்வதற்கான பசி, அன்புக்கான பசி, பேரின்ப வாழ்வுக்கான பசி, இந்தப் பசியை, சாதாரண உணவினால் போக்க முடியாது என்றுரைத்தார் திருத்தந்தை.
கத்தோலிக்க விசுவாசத்தை வாழ்வதென்பது, உலகப் பொருள்களின்மீது வாழ்வைக் கட்டியெழுப்பாமல், அழியாத உணவாகிய ஆண்டவரால் ஊட்டமளிக்கப்படுவதற்கு உங்களைக் கையளிப்பதாகும் என்று, அத்திருப்பலியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
இவ்வுலகில் சிலர் பணத்தாலும், இன்னும் சிலர் வெற்றி மற்றும் வீண் தற்பெருமையாலும், மேலும் சிலர் அதிகாரம் மற்றும் செருக்கினாலும் தங்களுக்கு ஊட்டமளிக்கின்றனர், இவை திருப்தியை அதிகமாக அளிப்பதுபோல் தோன்றலாம், ஆனால் இவை அடிமையின் மேஜையில் உண்ணப்படுபவை என்பதை மக்கள் மறக்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
நீங்கள் எங்கே உணவருந்த விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை விசுவாசிகளிடம் முன்வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, இந்த உலகின் போலியான உணவைத் தவிர்க்குமாறும், இறைவனின் உணவே உண்மையிலே திருப்திப்படுத்தவல்லது என்பதை நினைவில் வைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

முதல் நூற்றாண்டுகளைவிட இக்காலத்தில் அதிகமான கிறிஸ்தவ மறைசாட்சிகள், திருத்தந்தை பிரான்சிஸ் கவலை

ஜூன்,20,2014. சமய சுதந்திரம் குறித்த அனைத்துலக கருத்தரங்கில் கலந்துகொள்ளும் ஏறக்குறைய 200 பிரிதிநிதிகளை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமய அடக்குமுறைகளால் இன்று உலகெங்கும் கிறிஸ்தவர்கள் அனுபவித்துவரும் துன்பங்கள் தனக்கு மிகுந்த வேதனை தருகின்றது என்று தெரிவித்தார்.
இன்றைய உலகில், சமய சுதந்திரத்துக்கு ஆதரவாக எண்ணற்ற கருத்துக்கள் வெளிவந்தாலும், சமய அடக்குமுறையும், அலைக்கழிப்பும், ஏன் கொலைகளும்கூட இன்று உலகெங்கும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்று கூறிய திருத்தந்தை, இந்தச் செயல்கள், குறிப்பாக, கிறிஸ்தவர்க்கெதிரான சமய அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன என்று கவலை தெரிவித்தார்.
“அனைத்துலகச் சட்டத்தின் அடிப்படையில் சமய சுதந்திரம் : உலகில் இடம்பெறும் மோதல்களின் தாக்கங்கள்” என்ற தலைப்பில், உரோம் நகரில் இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பிரிதிநிதிகளிடம் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
இக்காலத்தில் இடம்பெறும் கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகள், திருஅவையின் முதல் நூற்றாண்டுகளில் நடந்ததைவிட அதிகக் கொடூரமாய் இருக்கின்றன என்றும், அந்தச் சகாப்தத்தைவிட இக்காலத்தில் அதிகமான கிறிஸ்தவர்கள் மறைசாட்சிகளாக உயிரிழக்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித ஜான் பல்கலைக்கழகமும், உரோம் LUMSA கல்வி நிறுவனமும் இணைந்து, இக்கருத்தரங்கை நடத்துகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

நம்மிடையே  வாழ்ந்து நமக்காகத் திருப்பலிகள் நிறைவேற்றிப் பணி புரிந்து

திருச்சபைச் சட்டத்தில் ஒரு முனைவர் பட்டமும் சமூகச் சட்டத்தில் இன்னொரு முனைவர் பட்டமும்

சிறப்பாகப் பெற்ற முனைவர் அருட்தந்தை லூர்துசாமி சகாயராஜ் ,

தம் 11 - ஆவது நூலை ஆங்கிலத்தில்  வெளியிட்டு இருக்கிறார்.
அதன் தலைப்பு : 'இறைவன் திட்டத்தில் திருமணமும் குடும்பமும் -
புனித 2 -ஆம் அருள்சின்னப்பர் சிந்தனைகள்'.
("Marriage and Family in the Plan of God- Reflections of Saint John Paul II".

அருட்தந்தைக்கு நம் பாராட்டுகள்.
அவர் தஞ்சை மறைவட்டத்தில் சான்சலராகப் பணி புரிகிறார்.

 Sagayaraj Lourdusamys book
 

தமிழகப் பாதிரியாரை மீட்க நடவடிக்கை:

ஜெயலலிதாவுக்குமோடிபதில்கடிதம்!

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/narendra-modi-reply-jayalalithaa-s-letter-203331.html

Alexis Premkumar

சென்னை:
ஆப்கானிஸ்தானில் தாலிபன்தீவிரவாதிகளால் கடத்திசெல்லப்பட்ட தமிழகப் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்க உரிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடிஉறுதிஅளித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார், தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் பணி நிமித்தமாக ஆப்கானிஸ்தான் சென்றிருந்தார். அவரைத் தாலிபன் தீவிரவாதிகள் சிலர்கடந்த 2-ஆம் தேதியன்று கடத்திச்சென்றனர். இதனைத் தொடர்ந்து அவரை மீட்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும் எனதமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி இருந்தனர். மேலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் கடிதத்திற்கு பிரதமர் மோடி
இன்று பதில்அனுப்பிஉள்ளார். அந்தகடிதத்தில், தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உறுதி அளித்துள்ளார்.
காபூலில் உள்ள இந்திய தூதரக அதிகாரி, ஆப்கானிஸ்தான் அதிபர் அலுவலகத்துடன் இது தொடர்பாக தொடர்ந்து பேசிவருவதாகவும், தாமும் இது தொடர்பான நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அந்த கடிதத்தில் மோடி தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=95906

சிவகங்கை: ஆப்கனில் கடத்தப்பட்ட சிவகங்கை மாவட்ட பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரின் மீட்பு நடவடிக்கையில் ஒருவாரமாகியும் முன்னேற்றம் இல்லை. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வாரியன்வயல் கிராமத்தை சேர்ந்த அந்தோணி, மரியதங்கத்தின் மூத்த மகன் அலெக்சிஸ் பிரேம்குமார்(47). இயேசு சபையில் குருத்துவ பட்டம் பெற்று கொடைக்கானல் மலை கிராமங்களில் சேவை செய்துள்ளார். கல்விப்பணிக்காக 2011ம் ஆண்டு ஆப்கன் சென்றார். அங்கு கடந்த 2ம் தேதி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். இதனால் அவரது குடும்பத்தினர் சிவகங்கை கலெக்டர், கவர்னர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு உடனடியாக பாதிரியாரை மீட்க வேண்டும் என மனு அளித்தனர். இந்நிலையில், கடத்தலில் தொடர்புடைய ஆப்கனை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பாதிரியார் இருக்கும் இடம் குறித்து அவரிடம் விசாரித்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதுவரை பாதிரியார் கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்படவில்லை.

ஒரு வாரம் ஆகியும் பாதிரியார் மீட்பு நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லாததால் அவரது குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், பாதிரியார் கடத்தப்பட்ட தகவல் அறிந்ததில் இருந்து நிம்மதி இல்லை. அவரது தந்தை மிகுந்த மனவேதனையுடன் உடல் நலிவுற்று உள்ளார். இது வரை வேறு எவ்வித தகவலும் கிடைக்காததால் குழப்பமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் கடத்தல்காரர்களிடம் இருந்து பாதிரியாரை மீட்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றனர்.

தி௫ச்சபை > 2014-06-09 16:54:51

 
கர்தினால் லூர்துசாமி அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வில், 20,000த்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு


ஜூன்,09,2014. உலகக் கத்தோலிக்கத் திருஅவைக்காகவும் ஆசியத் திருஅவைக்காகவும்
அயராது உழைத்த கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்களின் மறைவு, ஈடுசெய்ய முடியாத ஓர்
இழப்பு என்று மும்பைப் பேராயர், கர்தினால் Oswald Gracias அவர்கள் கூறினார்.
ஜூன் 2, கடந்த திங்களன்று உரோம் நகரில் இறைவனடி சேர்ந்த கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்களின் அடக்கத் திருப்பலியும், இறுதிச் சடங்குகளும், ஜூன் 9 இத்திங்களன்று புதுச்சேரி கடலூர் உயர் மறைமாவட்ட பேராலயத்தில் நிறைவேற்றப்பட்டன.
இத்திருப்பலியில் கலந்துகொண்ட கர்தினால் Gracias அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில், மிக இளவயதில் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் பங்கேற்ற அருள் பணியாளர் என்ற பெருமைபெற்ற கர்தினால் லூர்துசாமி அவர்கள், தற்போது, இந்தியத் திருஅவைக்காகவும், ஆசியத் திருஅவைக்காகவும் சக்திமிகுந்த வகையில் பரிந்துபேச இறைவனிடம் சென்றுள்ளார் என்று கூறினார்.
இந்தியாவில் பணியாற்றும் திருப்பீடத் தூதர், பேராயர் Salvatore Pnnachio அவர்கள் தலைமையில் நடைபெற்ற அடக்கத் திருப்பலியில், மும்பை பேராயர் கர்தினால் Oswald Gracias, ராஞ்சி பேராயர் கர்தினால் Telespore Toppo, எர்ணாகுளம் சீரோ மலபார் கர்தினால் George Alancherry ஆகியோருடன், புதுச்சேரி கடலூர் பேராயர் அன்டனி அனந்தராயர் மற்றும் ஏனைய ஆயர்கள், அருள் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
உரோம் நகரிலிருந்து விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட கர்தினால் லூர்துசாமி அவர்களின் உடல், சனிக்கிழமை இரவு புதுச்சேரியை அடைந்தது என்றும், இஞ்ஞாயிறு முழுவதும் பேராலயத்திற்கு அருகே உள்ள பள்ளியில் அது மக்கள் வணக்கத்திற்கு வைக்கப்பட்டிருந்தது என்றும் உயர் மறைமாவட்டச் செய்திக் குறிப்பு கூறுகிறது.
புதுச்சேரி ஆளுநர் Virendra Kataria, புதுச்சேரி முதல்வர் Rangasamy உட்பட, பல அரசியல் தலைவர்களும், வேறு பல தலைவர்களும் கர்தினால் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினர் என்றும், கர்தினால் மறைவையொட்டி, திங்களன்று புதுச்சேரியில் விடுமுறை அறிவிக்கப்பட்டது என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
இவ்வாண்டு தன் 90வது வயதை நிறைவு செய்த கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்களின் உடல், புதுச்சேரி கடலூர் உயர் மறைமாவட்டத்தின் அமல அன்னை பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வில், 20,000த்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர் என்று ஆசிய செய்திக்குறிப்பொன்று கூறுகிறது..

ஆதாரம் : AsiaNews / Ind.ExpressOneIndia :
09.06.2014
 
புதுவை காந்தி வீதியில் உள்ள பெத்திசெமினார் பள்ளி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு கவர்னர் வீரேந்திர கட்டாரியா, முதல்வர் ரங்கசாமி, எதிர்கட்சி தலைவர் வைத்திலிங்கம், கண்ணன் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், தமிழகம் மற்றும் புதுவை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இன்று காலை 10 மணி வரை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து கர்தினல் சைமன் லூர்துசாமியின் உடல் அங்கிருந்து ஊர்வலமாக மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு போப் ஆண்டவரின் தூதர் சால்வோ தோரே பொன்னாக்கியோ தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து போப் ஆண்டவரின் இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது. பின்னர், ஆலயத்தின் சூசையப்பர் கெபி அடியில் கர்தினல் லூர்துசாமியின் உடல் புதைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள கர்தினல்கள், பேராயர்கள், ஆயர்கள், குருமார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் கர்தினல் லூர்துசாமியின் சொந்த ஊரான கல்லேரி பகுதியை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/cardenal-lurdusamy-s-funeral-finish-puducherry-today-203088.html

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org