Get Adobe Flash player

News

பாரிஸ் வன்முறை அமைதியை விரும்பும் அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்துள்ளது

சன.08,2015. பாரிஸ் நகருக்காகச் செபிக்குமாறு, இவ்வியாழன் காலையில் தனது டுவிட்டரில் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், பாரிஸ் நகரில் இப்புதன் நடுப்பகல் வேளையில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய இப்படுகொலையைக் கண்டித்து, பாரிஸ் கர்தினால் André Vingt-Trois அவர்களுக்கு, தந்திச் செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வன்முறை, அமைதியை விரும்பும் அனைத்து மனிதர்களின் மனங்களையும் அதிர்ச்சியுறச் செய்துள்ளது எனவும், இதில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் அனைவரோடும் மனத்தளவில் ஒன்றித்துச் செபிக்கும் உலகத்தினர் அனைவரோடும் தானும் இணைந்து செபிப்பதாகவும் அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.
மனித உயிரை மதிக்க மறுக்கும் அனைத்து முயற்சிகளையும் முறியடிப்பதற்கு, நல்மனம் கொண்டோர் இணைந்து வரவேண்டும் என்ற வேண்டுகோளையும் திருத்தந்தை தனது செய்தியில் விடுத்துள்ளார்.
இத்தந்திச் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.
மேலும், பாரிஸ் கர்தினால் André Vingt-Trois அவர்களும், இத்தாக்குதல்கள் காட்டுமிராண்டித்தனமானவை என்று கூறி, சமுதாயத்தில் ஒருவர் ஒருவரை மதித்து அமைதியில் வாழும் உறவுகளைக் கட்டியெழுப்புமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

திருத்தந்தை – கிறிஸ்துவைச் சந்திப்பதற்கு கீழ்த்திசை ஞானிகளின் பாதையைப் பின்பற்றுவோம்


சன.06,2015. இவ்வுலகின் வல்லமையில் கடவுள் தம்மை வெளிப்படுத்தமாட்டார், மாறாக, தமது அன்பின் தாழ்மையில் அவர் நம்மிடம் பேசுகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இச்செவ்வாயன்று நிறைவேற்றிய திருக்காட்சிப் பெருவிழா திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, கீழ்த்திசை ஞானிகள், மேலோட்டமாக ஒளிரும் வல்லமையில் நம்பிக்கை வைப்பதைவிட கடவுளின் நன்மைத்தனத்தில் நம்பிக்கை வைத்திருந்ததால் அவர்கள் உண்மையான விசுவாசத்துக்கு மனம் மாறுவதன் எடுத்துக்காட்டுகளாய் உள்ளார்கள் என்றும் கூறினார்.

Lire la suite : திருத்தந்தை அறவுரை

பிலாத்துவின் முன்னிலையில் இயேசு விசாரிக்கப்பட்ட இடம் கண்டுபிடிப்புசன.06,2015. எருசலேமில் ஆளுநர் பிலாத்துவின் முன்னிலையில் இயேசு விசாரிக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்துள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

 

Lire la suite : அகழ்வாய்வில் புதிய கண்டு பிடிப்பு 

புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் திருப்பண்டத்தைப் பெரும்திரளான பக்தர்கள் தரிசித்தனர்

சன.06,2015. இந்தியாவின் கோவாவில் புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் திருப்பண்டம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட 45 நாள்களில் ஏறக்குறைய நாற்பது இலட்சம் பக்தர்கள் அதனைத் தரிசித்துள்ளனர் என்று UCAN செய்தி நிறுவனம் கூறியது.

 

Lire la suite : புனித சவேரியார் திருவுடலுக்கு வணக்கம்

புதுச்சேரி-கடலூர் மறைமாவட்டக் குருக்கள் படம் பார்ப்பதற்கு

 

இங்கே உள்ள பட்டனை அழுத்துக :

Archdiocese of Pondy photo

(நன்றி : புதுச்சேரி உயர் மறைமாவட்டம்)

 

2015, அனைத்துலக ஒளி-மின்னியல் ஆண்டு

டிச.27,2014. கணனிகள், புகைப்பட கருவிகள், மின் சமையல் கருவிகள், கதிரியக்கக் கருவிகள் என பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளின் ஒளி, நம் அன்றாட வாழ்விலும், வருங்கால சமுதாயத்தின் வளர்ச்சியிலும் கொண்டிருக்கும் முக்கிய இடத்தை எடுத்துரைக்கும் நோக்கத்தில் 2015ம் ஆண்டை அனைத்துலக ஒளி-மின்னியல் ஆண்டாக அறிவித்துள்ளது ஐ.நா.நிறுவனம்.
ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ 2012ம் ஆண்டில் பரிந்துரைத்ததன் பயனாக, ஐ.நா. பொது அவை, 2015ம் ஆண்டை அனைத்துலக ஒளி-மின்னியல் ஆண்டாக அறிவித்துள்ளது.
மருத்துவம், தொடர்பு சாதனங்கள், பொழுதுபோக்குகள், கலாச்சாரம், தொழிற்சாலைகள், என எல்லாத் துறைகளிலும் மின் ஒளி தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுகின்றது.
ஒளி அறிவியலின் 1000 ஆண்டுகள், 200 ஆண்டுகள் 150 ஆண்டுகள், 100 ஆண்டுகள் மற்றும் 50 ஆண்டுகள் வரலாறு இந்த 2015ம் ஆண்டில் நினைவுகூரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAO, 2015ம் ஆண்டை அனைத்துலக மண்வள ஆண்டாகவும் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 5ம் தேதி சிறப்பிக்கப்பட்ட உலக மண்வள தினத்தன்று இந்த உலக ஆண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UN

சுனாமிப் பேரிடரின் பத்தாம் ஆண்டு நினைவு

டிச.26,2014. சுனாமிப் பேரிடர் இடம்பெற்று பத்தாண்டுகள் ஆகியும், வேதனை உணர்வும், அச்சமும் பாதிக்கப்பட்ட அம்மக்களைவிட்டு இன்னும் நீங்கவில்லை என்று இலங்கை ஆயர் ஒருவர் கூறினார்.
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்ற பத்தாம் ஆண்டு நிறைவு இவ்வெள்ளியன்று உலகில் கடைப்பிடிக்கப்பட்டவேளை, இப்பேரிடரால் அதிகம் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் மட்டும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்தனர் என்றும், அப்பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறிய ஆயர், சீரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றபோதிலும், மக்களில் சுனாமி ஏற்படுத்திய தாக்கங்கள் இன்னும் அகலவில்லை என்று கூறினார்.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்திய நேரம் காலை 6.30 மணியளவில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 30 கி.மீ., ஆழத்தில், 9.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த 2 மணி நேரத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஏறக்குறைய 12 நாடுகளில் பேரலைகள் எழும்பி கடற்கரைப் பகுதிகளை நீரில் மூழ்கடித்தன. இதில் 2 இலட்சத்து 28 , 000 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் உயிரிழந்தனர். இந்தப் பேரலைகள் 20 முதல் 30 மீட்டர் உயரம் வரை எழும்பின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

திருத்தந்தை வழங்கிய ‘ஊருக்கும் உலகுக்கும்’ வாழ்த்துச்செய்தி

 

Pope urbi et orbi 2014

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று திருத்தந்தை வழங்கிய ‘ஊர்பி எத் ஓர்பி’ எனப்படும் ‘ஊருக்கும் உலகுக்கும்’ வாழ்த்துச்செய்தி

டிச.25,2014. அன்பு சகோதர சகோதரிகளே, கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

இறைமகனும் உலக மீட்பருமான இயேசு நமக்காகப் பிறந்துள்ளார்.
முற்கால இறைவாக்குகளின் நிறைவாக பெத்லகேமில் கன்னியிடம் பிறந்துள்ளார்.
அந்தக் கன்னியின் பெயர் மரியா, அவர் யோசேப்பின் மனைவி.

 

Lire la suite : திருத்தந்தை வழங்கிய வாழ்த்துச் செய்தி   

குமரி மாவட்டத்தில் புதிய மறைமாவட்டமும் புதிய ஆயரும்

டிச.22,2014. தமிழகத்தின் கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதியைக்கொண்டு குழித்துறை என்ற புதிய மறைமாவட்டத்தை உருவாக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராக சலேசிய சபை அருள்பணியாளர் ஜெரோம்தாஸ் வறுவேலை நியமித்துள்ளார் திருத்தந்தை.

தமிழகத்தின் தென்கோடி மறைமாவட்டமான கோட்டாறிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள குழித்துறை மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள அருள்பணியாளர் ஜெரோம்தாஸ் அவர்கள், 1951ம் ஆண்டு கோட்டாறு மறைமாவட்டத்தின் படுவூர் என்ற கிராமத்தில் பிறந்து,முதலில் கோட்டாறு மறைமாவட்ட இளங்குருமடத்தில் பயன்றார். சென்னை பூந்தமல்லி திரு இதயக் குருத்துவக் கல்லூரியில் மூன்றாண்டு தத்துவயியல் கற்றபின்,சலேசிய துறவுசபையில் இணைந்தார். உரோம் நகர் சலேசிய பல்கலைக்கழகத்தில் மெய்யியலைக் கற்றபின்1985ம் ஆண்டு ஜூன் மாதம்2ம் தேதி திருத்தந்தை2ம் ஜான் பால் அவர்களால் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார். சலேசியத் துறவுசபையில் இணைந்து பல்வேறுப் பொறுப்புகளை வகித்துள்ள புதிய ஆயர் ஜெரோம்தாஸ் அவர்கள்,தற்போதுவரை ஏலகிரி மலையில் சலேசிய நவதுறவியர் இல்ல அதிபராக பணியாற்றி வந்துள்ளார்.

புதுச்சேரி பெத்தி செமினரி உயர் நிலைப் பள்ளி

கடலூர் மஞ்சக்குப்பம் புனித சூசையப்பர் உயர் நிலைப் பள்ளிகளில்

பல்லாண்டுகள் சிறப்பான கல்விப்பணியாற்றி

அக்கால மாணவர்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்ற

அருள் குருக்கள் இருவர் 08.12.2014 அன்று

தம் குருத்துவத்தின் வைரவிழா கொண்டாடினார்கள்.

அவர்களுடைய மாணவர்களும் பிறரும்

அக்குருக்களின் உடல் உள்ள நலன்களுக்காக வேண்டிக்கொள்வோம்.

அது சரி அக்குருக்கள் யார் என அறிய ஆவலா?

'Lire la suite' பட்டனை அழுத்துக!

தகவல் : சர்வவியாபி

Lire la suite : குருத்துவ திருநிலைப்பாட்டின் வைர விழா

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org