Get Adobe Flash player

News

புதுடெல்லி-திருத்தந்தையின் தலைமைப் பணியின் 2ம் ஆண்டு நிறைவு

Delhi

மார்ச்,14,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் 266வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை இவ்வெள்ளியன்று புதுடெல்லியில் திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பெனாக்கியோ அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

Lire la suite : திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா

François estime que son pontificat sera de courte durée
Pape 01

CITE DU VATICAN (Reuters) -

Le pape François estime dans une interview rendue publique vendredi que son pontificat sera de courte durée et affirme qu'il n'a pas l'intention de régner jusqu'à sa mort et n'hésitera pas à démissionner comme l'a fait son prédécesseur Benoît XVI.

Lire la suite : Le Pape estime que son pontificat sera de courte durée

மும்பையில் 'இறைவனுடன் 24 மணி நேரங்கள்'

Lire la suite :  கடவுளோடு சில மணி நேரங்கள்

வத்திக்கான் பசிலிக்காவில் பாவ மன்னிப்பு திருவழிபாடு

மார்ச்,07,2015.

Confession

இம்மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாவ மன்னிப்பு திருவழிபாட்டை தலைமை வகித்து நடத்துவார் என்று, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பாளரான பேரருள்திரு Guido Marini அவர்கள் அறிவித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றி தனிப்பட்ட நபர்களுக்கு பாவமன்னிப்பும் வழங்குவார் என்றும் பேரருள்திரு Marini அவர்கள் அறிவித்துள்ளார்.

Lire la suite : வத்திக்கான் பசிலிக்காவில் பாவ மன்னிப்பு திருவழிபாடு

' பகலும் இரவு போலவே இருந்தது!

ஆப்கானில் கடத்தப்பட்ட அலெக்சிஸ் பிரேம்குமார்நன்றி :
ஜூனியர் விகடன் - 08 Mar, 2015

'நான் காணாமல் போவது இது இரண்டாவது முறை.. முதல் முறையாக எனது கிராமமான வாரியன் வயலில் காணாமல் போனேன். இப்போது இரண்டாவது முறையாக ஆப்கானில் காணாமல் போய் திரும்பி வந்துள்ளேன்' இப்படி உணர்ச்சி பொங்க தனது கிராம மக்களிடம் பேசினார் தாலிபன்களால் கடத்தப்பட்ட அலெக்சிஸ் பிரேம்குமார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வாரியன் வயல் கிராமத்தைச் சேர்ந்த அலெக்சிஸ் பிரேம்குமார், இயேசு சபை அமைப்புக்காக ஆப்கானில் கல்விப் பணியில் ஈடுபட்டிருந்தார். தாலிபன் தீவிரவாதிகள் அவரைக் கடத்திச் சென்றனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

Lire la suite : ஆப்கானில் கடத்தப்பட்ட அலெக்சிஸ் பிரேம்குமார்

புனித தெரேசா அவர்களின் பெற்றோர் புனிதர்களாக உயர்த்தப்படுவர்
Les Martins

.. 04/03/2015

புனிதர் படிநிலைகள் பேராயத்தின் தலைவரான கர்தினால் ஆஞ்செலொ அமாத்தோ அவர்கள், “புனிதர்களால் என்ன பயன்?” என்ற தலைப்பில் உரோம் நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றுகையில் இதனை எடுத்துரைத்தார்.

Lire la suite : புனித தெரேசா அவர்களின் பெற்றோர் புனிதர்களாக உயர்த்தப்படுவர்

இந்தியாவில் ஆலயங்கள் தாக்கப்படுவதை நிறுத்த செப வழிபாடுகள்
ஆதாரம் : DNA / வத்திக்கான் வானொலி

Stop attacking churches

மார்ச்,03,2015. இந்தியாவில் ஆலயங்கள் தாக்கப்படுவது மற்றும் கிறிஸ்தவ சமூகத்துக்கு எதிரான காழ்ப்புணர்வைத் தடைசெய்யும் விதமாக, மூன்று நாள்களுக்கு குறைந்தது நூறு இடங்களில் சிறப்பு செப வழிபாடுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Lire la suite : இந்தியாவில் ஆலயங்கள் தாக்கப்படுவதை நிறுத்த செப வழிபாடுகள்

கச்சத் தீவு அந்தோணியார் கோயில் விழா நிறைவு.. ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!

நன்றி :http://tamil.oneindia.com/news/tamilnadu/katcadeevu-st-anthony-festivel-commence-221946.html

katchatheevu-st-antony-festival-600

சென்னை: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் நேற்று காலை சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. இந்தியா-இலங்கை ஆகிய இருநாட்டு மக்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா, நேற்றுமுன்தினம் தொடங்கியது. இலங்கை யாழ்ப்பாணம் மறைமாவட்ட பேராயர் சவுந்திரநாயகம், கச்சத்தீவு ஆலயத்தின் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.

Lire la suite : கச்சத் தீவு அந்தோணியார் கோயில் விழா நிறைவு

குழித்துறை மறைமாவட்ட முதல் ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் பணி ஏற்பு

Bishop Varuvel consacration

பிப்.25,2015. கோட்டார் மறைமாவட்டத்தில் இருந்து குழித்துறை மறைமாவட்டம் என்ற புதிய மறைமாவட்டம் உருவாக்கப்பட்டு, அந்த மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமிக்கப்பட்ட அருள்பணி ஜெரோம் தாஸ் வறுவேல் அவர்கள் இச்செவ்வாயன்று (பிப்.24) ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

Lire la suite : புதிய ஆயர் பதவி ஏற்பு 

அ.பணி பிரேம்குமாரின் விடுதலைக்கு ஆயர்கள் பிரதமருக்கு நன்றி

விடுதலையாகிவரும் அ.பணி பிரேம் குமார் - RV

24/02/2015 15:21
 பிப்.24,2015. அருள்பணி அலெக்சிஸ் பிரேம்குமார் அவர்கள் கடத்தல்காரர்களிடமிருந்து விடுதலையடைவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் இந்திய ஆயர்கள்.

Lire la suite : அ.பணி பிரேம்குமாரின் விடுதலைக்கு ஆயர்கள் பிரதமருக்கு நன்றி

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org