Get Adobe Flash player

News

மைக்ரோஸ்கோப்பின் உதவியுடன் பார்க்கக் கூடிய, உலகின் மிகச் சிறிய குடில் - AP
Crib 04

 

லித்துவேனிய நாட்டின் அரசுத்தலைவர் Dalia Grybauskaitė அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, மைக்ரோஸ்கோப்பின் உதவியுடன் பார்க்கக் கூடிய, உலகின் மிகச் சிறிய குடில் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார்.லித்துவேனிய நாட்டின் வில்னியுஸ் பேராலய வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள குடில் அமைப்பை, பத்தாயிரம் முறைகள் சுருக்கி, இந்தச் சிறிய குடில் அமைக்கப்பட்டுள்ளது.இச்சிறிய குடில்,

Lire la suite...

அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்..
கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பின் தலைவர் பரபரப்பு பேட்டி
நன்றி : One India 22.12.17
Cardinal announcement


டெல்லி: மதரீதியான பிளவுகளை கட்டுப்படுத்தாத இந்த அரசு மீது, தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று இந்திய கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பு தலைவர் கார்டினல் பேஸ்லியோஸ்ஸ க்லீமிஸ் தெரிவித்துள்ளார். இந்த அமைப்புதான் இந்திய கத்தோலிக்க திருச்சபைகளின் தலைமை பீடமாகும். 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இந்த தகவலை கூறியுள்ளார்.

Lire la suite...

நைஜீரியா : கடத்தப்பட்ட அருள்சகோதரிகளின் விடுதலைக்கு செபம்
நன்றி : வத்திக்கான் வானொலி
prière

ஞாயிறு மூவேளை செப உரையின்போது - AFP

ஒரு மாதத்திற்கு முன்னால், நைஜீரியாவில் கடத்திச் செல்லப்பட்ட ஆறு அருள்சகோதரிகளுக்காக அனைவரும் செபிக்க வேண்டும் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். நைஜீரியாவின் Iguoriakhi எனுமிடத்திலுள்ள தங்கள் துறவு இல்லத்தி லிருந்து கடத்திச்செல்லப்பட்ட, கிறிஸ்துவின் திருநற்கருணை இதய சபையின் (Eucharistic Heart of Christ) ஆறு அருள் சகோதரிகள் எங்கு வைக்கப் பட்டுள்ளனர் என்பது தெரியாத நிலையில், அவர்களின் விடுதலைக்காக அனைவரும் செபிக்க வேண்டும் என அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இவர்களும், இவர்களைப்போல் கடத்தப்பட்டு,  துன்பச் சூழலில் வைக்கப்பட்டுள்ளோரும், இந்த கிறிஸ்து பிறப்புக் காலத்தில் தங்கள் துறவு குழுமத்துடன் வாழ்வதற்கு, நம் செபங்கள் வழியாக உதவுவோம் என கூறினார்.

Lire la suite...

pope 27

பாலனுக்காக காத்திருக்கும் குடில்கள், நம்பிக்கை அடையாளங்கள்
நன்றி : வத்திக்கான் வானொலி

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை

இன்றைய உலகில் சில நாடுகள், குழந்தைகளின்றி, வெறுமை நாடுகளாக இருப்பது குறித்து தன் கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில்  திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் பிறப்பு விழாவுக்கென உருவாக்கப்பட்டுள்ள குடில்கள், குழந்தை இயேசுவின் திரு உருவங்கள் இன்றி காத்திருப்பதையும், குழந்தை பிறப்புகளின்றி சில நாடுகள் உள்ளதையும் ஒப்புமைப்படுத்திக் கூறினார்.

Lire la suite...

புனித யோசேப்பிடமிருந்து கற்றுக்கொள்வோம்
நன்றி : வத்திக்கான் வானொலி
pope 26

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி

 

நம் துன்பகரமான வேளைகளிலும், இருள் சூழ்ந்துள்ள நேரங்களிலும், பிரச்னைகளிலும் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து புனித யோசேப்பிட மிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம், ஏனெனில், இருளில் நடப்பதையும், இறைவனுக்குச் செவிமடுப்பதையும், அமைதி காப்பதையும் அறிந்தவர் அவர், என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Lire la suite...

திருப்பலி துவக்க சடங்குகளின் முக்கியத்துவம்
நன்றி : வத்திக்கான் வானொலி
pope 25

புதன் மறைக்கல்வி உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் - AFP

தன் புதன் மறைக்கல்வி உரைகளில் திருப்பலி குறித்த கருத்துக்களை திருப்பயணிகளோடு பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துவக்க காலக் கிறிஸ்தவர்கள், எவ்வாறு தங்களுக்குரியதை பிறரோடு பகிர்ந்து, ஒன்றிப்பில் வாழ்ந்து வந்தார்கள் என்பது குறித்து எடுத்துரைத்தார்.

Lire la suite...

தைரியம் இருந்தால் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்..
உத்தர பிரதேச பள்ளிகளுக்கு இந்து அமைப்பு எச்சரிக்கை
நன்றி : OneIndia
 Posted By: Shyamsundar Published: Tuesday, December 19, 2017, 14:49 [IST
 
லக்னோ: உத்தர பிரதேசத்தின் 'அலிகார்' பகுதியில் இருக்கும் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட கூடாது என இந்து அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. 'தி ஹிந்து ஜக்ரான் மார்ச்' என்ற அந்த அமைப்பு பள்ளிகளுக்கு இதுகுறித்து கடிதம் எழுதி இருக்கிறது.

Lire la suite...

திருத்தந்தை பிறந்த நாளுக்கு 4 மீட்டர் பீசா பரிசு
நன்றி : ZENIT
POPE 24

 
இன்று 17.12.2017 காலை மார்ச்தா  மண்டபத்தில் சிறுவர்களை வரவேற்றார் திருத்தந்தை. .பாப்பரசர் பிறந்த நாளைக்கு அவர்கள் 4 ஆதி நீளமுள்ள பிசா பண்டத்தைத் தயார் செய்து வந்திருந்தனர்.கார்கள் நடுவில் வாத்தியை உதித் தன பிறந்தாள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார் பாப்பரசர். குழனிகளை மகிழ்ச்சியாக வைத்திருக்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தினார்.

ஏழைகளுக்கு உணவே, திருத்தந்தைக்கு தரும் பிறந்த நாள் பரிசு
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
pope 21

டிச.16,2017. தன் 81ம் பிறந்த நாளை இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கும் பரிசாக, இஞ்ஞாயிறன்று, ஏழைகளுக்கு மதிய உணவளிக்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது, உரோம் நகர் மாணவர் குழு ஒன்று.

Lire la suite...

மத்திய பிரதேச மாநிலத்தில் கிறிஸ்மஸ் நிகழ்வுக்கு எதிர்ப்பு
நன்றி ; வத்திக்கான் வானொலி

DharnaSatna நகரின் முப்பது குருத்துவ மாணவர்களும், இரு அருள்பணியாளர்களும் தேசியவாத அமைப்பினரின் எதிர்ப்பை சந்திக்கின்றனர் - RV

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், டிசம்பர் 14, இவ்வியாழன் இரவில், குருத்துவ மாணவர்கள் மற்றும் அருள்பணியாளர்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ள வன்முறை, மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கின்றது என்று, இந்திய ஆயர் பேரவை கூறியுள்ளது. Satna நகரின் புனித எப்ரேம் குருத்துவ கல்லூரியைச் சார்ந்த முப்பது குருத்துவ மாணவர்களும், இரு அருள்பணியாளர்களும், கிறிஸ்மஸ் பாடல் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தவேளையில், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Lire la suite...

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org