Get Adobe Flash player

News

திருத்தந்தை - இலங்கை, பிலிப்பின்ஸ் மக்களுக்காக என்னுடன் இணைந்து செபியுங்கள்

Pope msg

சன.12,2015. “இலங்கை மற்றும் பிலிப்பின்ஸ் நாடுகளுக்கு நான் பயணத்தைத் துவக்கும் நாளன்று, இந்நாடுகளில் உள்ள மக்களுக்காக என்னுடன் இணைந்து செபிக்குமாறு உங்களைக் கேட்கிறேன்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டுவிட்டரில் இத்திங்களன்று எழுதியுள்ளார்.

Lire la suite : திருத்தந்தை வேண்டுகொள்

 

Pope  in Asiaதிருத்தந்தையின் 2வது ஆசியத் திருத்தூதுப் பயணம்

சன.08,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசியாவுக்கு இரண்டாவது தடவையாக மேற்கொள்ளவிருக்கும் இத்திருத்தூதுப் பயணம், அவர் இந்தப் பெரிய கண்டத்தின்மீது கொண்டிருக்கும் அக்கறையையே காட்டுகின்றது என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Lire la suite : பாப்ரசர் ஆசியப் பயணம்

திருத்தந்தையின் இலங்கை திருத்தூதுப் பயணம் ஒப்புரவின் அடையாளம்

Lire la suite : பாப்பரசரின் இலங்கைப் பயணம்

Le Caridnal Vingt-Trois appelle la France à chercher l'unité et non la haine

 

2015-01-10 Radio Vatican

Suite aux événements dramatiques de ces derniers jours, en France, après l’attentat contre la revue satirique Charlie Hebdo, le cardinal André Vingt-Trois, archevêque de Paris, a appelé les Français à ne pas céder à l’affolement ou la haine. Dans un message qui sera lu, ce dimanche, dans toutes les paroisses du diocèse de Paris, à l’issue des messes, le cardinal Vingt-Trois appelle la nation à l’unité et non à la haine. Commentant les actes de violence et de barbarie inouïes, il observe que depuis de nombreuses années pour nous, la guerre, la mort, c'était toujours ailleurs même si, pendant ce temps, des soldats français étaient engagés en différents pays pour essayer d'apporter un peu de paix. Certains l'ont payé de leur vie.

Lire la suite : Le Caridnal Vingt-Trois appelle la France à chercher l'unité et non la haine

திருத்தந்தை - வன்முறையாளர்களின் மனமாற்றத்திற்காகச் செபிப்போம்

சன.08,2015. மனிதர்களிடம் இவ்வளவு வன்முறை உணர்வுகள் உள்ளனவே என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் வெளியிட்டுள்ளார்.
சனவரி 08, இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியின்போது, இப்புதனன்று பாரிஸ் மாநகரில் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்ட கொடுமையைக் குறித்து தன் மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.
இந்த வன்முறையால் கொல்லப்பட்டவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தன் செபங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறையாளர்களின் மனமாற்றத்திற்காகச் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
அரசியல், மதம், கலாச்சாரம் என்ற பல தலைப்புக்களில் கருத்துக்களை வெளியிட்டுவரும் Charlie Hebdo என்ற வார இதழ் அலுவலகத்தின்மீது முகமூடி அணிந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள் இப்புதன் நடுப்பகலில் நடத்திய தாக்குதலில், ஆசிரியர் குழுவின் நான்கு பேர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமுற்று மரணத்தோடு போராடி வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

பாரிஸ் வன்முறை அமைதியை விரும்பும் அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்துள்ளது

சன.08,2015. பாரிஸ் நகருக்காகச் செபிக்குமாறு, இவ்வியாழன் காலையில் தனது டுவிட்டரில் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், பாரிஸ் நகரில் இப்புதன் நடுப்பகல் வேளையில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய இப்படுகொலையைக் கண்டித்து, பாரிஸ் கர்தினால் André Vingt-Trois அவர்களுக்கு, தந்திச் செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வன்முறை, அமைதியை விரும்பும் அனைத்து மனிதர்களின் மனங்களையும் அதிர்ச்சியுறச் செய்துள்ளது எனவும், இதில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் அனைவரோடும் மனத்தளவில் ஒன்றித்துச் செபிக்கும் உலகத்தினர் அனைவரோடும் தானும் இணைந்து செபிப்பதாகவும் அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.
மனித உயிரை மதிக்க மறுக்கும் அனைத்து முயற்சிகளையும் முறியடிப்பதற்கு, நல்மனம் கொண்டோர் இணைந்து வரவேண்டும் என்ற வேண்டுகோளையும் திருத்தந்தை தனது செய்தியில் விடுத்துள்ளார்.
இத்தந்திச் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.
மேலும், பாரிஸ் கர்தினால் André Vingt-Trois அவர்களும், இத்தாக்குதல்கள் காட்டுமிராண்டித்தனமானவை என்று கூறி, சமுதாயத்தில் ஒருவர் ஒருவரை மதித்து அமைதியில் வாழும் உறவுகளைக் கட்டியெழுப்புமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

திருத்தந்தை – கிறிஸ்துவைச் சந்திப்பதற்கு கீழ்த்திசை ஞானிகளின் பாதையைப் பின்பற்றுவோம்


சன.06,2015. இவ்வுலகின் வல்லமையில் கடவுள் தம்மை வெளிப்படுத்தமாட்டார், மாறாக, தமது அன்பின் தாழ்மையில் அவர் நம்மிடம் பேசுகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இச்செவ்வாயன்று நிறைவேற்றிய திருக்காட்சிப் பெருவிழா திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, கீழ்த்திசை ஞானிகள், மேலோட்டமாக ஒளிரும் வல்லமையில் நம்பிக்கை வைப்பதைவிட கடவுளின் நன்மைத்தனத்தில் நம்பிக்கை வைத்திருந்ததால் அவர்கள் உண்மையான விசுவாசத்துக்கு மனம் மாறுவதன் எடுத்துக்காட்டுகளாய் உள்ளார்கள் என்றும் கூறினார்.

Lire la suite : திருத்தந்தை அறவுரை

பிலாத்துவின் முன்னிலையில் இயேசு விசாரிக்கப்பட்ட இடம் கண்டுபிடிப்புசன.06,2015. எருசலேமில் ஆளுநர் பிலாத்துவின் முன்னிலையில் இயேசு விசாரிக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்துள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

 

Lire la suite : அகழ்வாய்வில் புதிய கண்டு பிடிப்பு 

புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் திருப்பண்டத்தைப் பெரும்திரளான பக்தர்கள் தரிசித்தனர்

சன.06,2015. இந்தியாவின் கோவாவில் புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் திருப்பண்டம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட 45 நாள்களில் ஏறக்குறைய நாற்பது இலட்சம் பக்தர்கள் அதனைத் தரிசித்துள்ளனர் என்று UCAN செய்தி நிறுவனம் கூறியது.

 

Lire la suite : புனித சவேரியார் திருவுடலுக்கு வணக்கம்

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org