Get Adobe Flash player

News

முகப்பு பக்கம் > நீதியும் அமைதியும்  >  2014-12-10 16:04:56

 சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் பறிபோவதே, பெரும் மனித உரிமை மீறல் - இந்திய ஆயர் பேரவை

டிச.10,2014. சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் பறிபோவதே, இந்தியாவில் மிக அதிகமாக, ஆழமாகப் பாதிப்புக்கு உள்ளாகும் மனித உரிமை என்று இந்திய ஆயர் பேரவை கூறியுள்ளது.
டிசம்பர் 10, இப்புதனன்று உலகெங்கும் கடைபிடிக்கப்பட்ட மனித உரிமைகள் உலக நாளையொட்டி, இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி, மனித முன்னேற்றம் பணிக்குழு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சிறுபான்மை மதத்தவர் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் அடிப்படைவாதக் குழுக்கள், மாநில அரசுகளையும் எதிர்த்துச் செயல்படும் துணிவை பெற்று வருகின்றன என்று, இப்பணிக்குழுவின் செயலர், அருள்பணி Charles Irudayam அவர்கள் கூறியுள்ளார்.
அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் இந்தியச் சட்டங்களுக்குச் சற்றும் மதிப்பு அளிக்காத இந்த வன்முறை குழுக்கள், மனித உரிமைகள் என்ற எண்ணத்தையே எள்ளி நகையாடுகின்றன என்று இவ்வறிக்கை தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
பழங்குடியினரும், தலித்துக்களும் ஒவ்வொரு நாளும் வன்முறைகளுக்கு உள்ளாகும் நிகழ்வுகள் இந்தியாவில் நிகழ்கின்றன என்று எடுத்துரைக்கும் இவ்வறிக்கை, வலுவற்ற சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கு உளது என்பதை வலியுறுத்திக் கூறுகிறது.

ஆதாரம் : CBCI (OJPD) / Fides

 

பெத்லகேம் 'அமைதி ஒளி', மத்ரித் Almudena பேராலயத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறதுடிச.11,2014. புனித பூமியில் உள்ள பெத்லகேம் பசிலிக்காவிலிருந்து எடுத்துச் செல்லப்படும் 'அமைதி ஒளி', டிசம்பர் 14, இஞ்ஞாயிறன்று ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகர் Almudena பேராலயத்தைச் சென்றடைகிறது.
பெத்லகேமில் அமைந்துள்ள கிறிஸ்து பிறப்பு பசிலிக்காவில், ஆண்டு முழுவதும் தொடர்ந்து எரிந்துவரும் தீபம் ஒன்று, பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்கத் திருஅவையின் பராமரிப்பில் உள்ளது.
1986ம் ஆண்டு, ஆஸ்திரிய நாட்டின் முயற்சியால், இந்த விளக்கிலிருந்து ஏற்றப்பட்ட ஒரு தீபம், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஆஸ்திரிய நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது.
அந்த ஆண்டு முதல், சாரணர் குழுவைச் சேர்ந்தவர்கள், பெத்லகேம் அமைதி ஒளியை வெவ்வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்லும் பழக்கத்தை உருவாக்கினர்.
இந்த முயற்சியின் தொடர்ச்சியாக, இவ்வாண்டு, பெத்லகேம் அமைதி ஒளி, இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகருக்குக் கொண்டுசெல்லப்படுகிறது.
"ஒளியேற்ற அழைப்பு" என்ற மையக்கருத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, டிசம்பர் 13, சனிக்கிழமையன்று பெத்லகேம் பசிலிக்காவில் துவங்கி, ஆஸ்திரியாவின் வியன்னா நகர் வழியே, இஞ்ஞாயிறன்று மத்ரித் நகர் பேராலயத்தை அடைகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

E Cathedrale de Pondichery Plafond du choeur l Assomption de Marie

L'Immaculée Conception ou encore la Conception Immaculée de Marie, est un dogme de la foi catholique énonçant que la Vierge Marie, en vue de sa maternité divine, fut elle-même conçue sans être marquée par la tache du péché originel. Après avoir consulté l'ensemble des évêques catholiques qui marquèrent leur agrément à une très large majorité, le pape Pie IXdéfinit ce dogme de manière solennelle le 8 décembre 1854, par la bulle Ineffabilis Deus. Comme fête chrétienne, célébrée depuis le Moyen Âge, l'Immaculée Conception est liturgiquementfixée au 8 décembre.

Lire la suite : Fête de l'Immaculée conception de Marie

Xaviers statue handless

தூய சவேரியார் சீனா செல்லும் வழியில் மரணமடைந்தார். பின்னர் அவரது திருவுடல் மலாக்காவில் ஆறுமாத காலம் புதைக்கப்பட்டிருந்தது. எலும்புகளை எடுப்பதற்காக ஆறுமாதங்கள் கழித்து தோண்டியபோது எந்தவித சிதைவுமில்லாமல் உடல் அப்படியே இருந்தது. இறுதியாக அவரது திருவுடல் கோவாவில் பாம் ஜீசஸ் ஆலயத்தில் நிலைப்படுத்தப்பட்டது.

Lire la suite : தூய சவேரியாரின் வலக் கை

திருத்தந்தை பிரான்சிஸ் - இறையன்பு, பிறரன்பு என்ற இருபெரும் கட்டளைகளை, புதிய புனிதர்கள் தங்கள் வாழ்வில் உயிர்பெறச் செய்தனர்

Two saints
நவ.24,2014. கிறிஸ்துவை அரசர் என்று அறிக்கையிடுவதில் நம் மீட்பு அடங்குவதில்லை; மாறாக, அவர் கொணர்ந்த விண்ணரசின் விழுமியங்களை, குறிப்பாக, கிறிஸ்து கொணர்ந்த பிறரன்பை செயலாற்றுவதில் நம் மீட்பு அடங்கியுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு வழங்கிய மறையுரையில் கூறினார்.
நவம்பர் 23, இஞ்ஞாயிறு கொண்டாடப்பட்ட கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, 4 இத்தாலியர்களையும், 2 இந்தியர்களையும் புனிதர்களாக உயர்த்தும் திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் நிறைவேற்றினார்.

Lire la suite : இறையன்பு பிறரன்பை வாழ்ந்து காட்டிய புனிதர்கள் - பாப்பரசர் புகழஞ்சலி

 

 Goa exhibition

நவ.26,2014. கிறிஸ்தவ ஓவியர்களான Angelo da Fonseca, Angela Trindade, அருள் சகோதரிகள் Genevieve, Claire ஆகியோர், கீழை நாடுகளின், குறிப்பாக, இந்திய நாட்டின் மதங்களையும், கிறிஸ்தவ மதத்தையும் இணைக்கும் பாலங்களாக அமைந்தனர் என்று கோவா பேராயர் Filipe Neri Ferrao அவர்கள் கூறினார்.

Lire la suite : கோவாவில், இந்தியக் கிறிஸ்தவ கலையம்சங்களுடன் தீட்டப்பட்டுள்ள ஓவியக் கண்காட்சி 

 Merci : Pèlerin

Isaïe, le prophète du temps de l'Avent © DR

Cette période, qui ouvre l’année liturgique, prépare les croyants à la célébration de la grande fête de Noël.

L’Avent, c’est d’abord un chemin proposé durant quatre semaines. Comme l’indique l’origine du mot lui-même, elle annonce une "venue", un "avènement", qui marque l’histoire de l’humanité. En l’occurrence celle du "Prince de la Paix" dont parle le prophète Isaïe, de "l’Agneau de Dieu" tel que le désigne Jean-Baptiste…

 

Lire la suite : La symbolique de l'Avent

LAvent 2014

L’Avent est la période durant laquelle les fidèles se préparent à célébrer simultanément la venue du Christ à Bethléem il y a deux mille ans, sa venue dans le coeur des hommes de tout temps et son avènement dans la gloire à la fin des temps : « Il est venu, Il vient, Il reviendra ! ».

Lire la suite : La signification de l’Avent

14 applaudissements ponctuent le discours du pape au Parlement européen
Le-pape-a-Strasbourg article main
Merci : ZENIT

Anita Bourdin

ROME, 25 novembre 2014 (Zenit.org) - Le discours du pape François devant le Parlement européen, à Strasbourg, ce mardi 25 novembre 2014, a été salué non seulement par des applaudissements finaux nourris de plusieurs minutes, mais aussi par 14 interruptions qui ont ponctué la réception de cette sorte de "charte" pour l'avenir de l'Europe et de plus de 500 millions d'habitants des 28 pays membres de l'Union. 

Son discours devant le Conseil de l'Europe, qui rassemble 47 Etats membres soit environ 900 millions d'Européens, a été comme le second volet de cette grande charte fondée sur le respect de la "dignité" de toute personne humaine: "dignité", un mot "clef", dit le pape. Un discours de quelque 35 minutes. 

Lire la suite : La réception spontanée du message du pape François

Goa 20
விசுவாசப் பரப்புதலின் பாதுகாவலர்களாக இருவரைக் கொண்டாடுகிறது நம் தாய்த் திருச்சபை. அவர்களுக்கும் நமக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.அவர்களுள் முன்னவர்  16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ; பின்னவர் 19 ஆம் நூற்றாண்டு.அவரோ ஓரிடத்திலும் நிலைத்து நில்லாதவர் ; இவரோ, (ஒரே ஒரு முறை உரோம் நகர் சென்றதைத்  தவிர்த்து) இருந்த இடத்தை விட்டு நகராதவர் ; முன்னவர் வாழ்ந்த ஆண்டுகள் 46 ; பின்னவரோ இளம் வயதிலேயே - 24 ஆம் வயதிலேயே- இறைவனடி சேர்ந்து விட்டவர் ; முதலாமவர் மறைப் பணி ஆற்றிய ஆண்டுகள் 10 மட்டுமே! அதற்குள்  பல நாடுகள் பல ஊர்கள்... சென்று இறைமகன் இயேசுவைப் பற்றி எடுத்துரைத்துப் பல்லாயிரக் கணக்கான ஆனமாக்களை  இறைவனடி கொண்டு வந்து சேர்த்த பெருமை இவருக்கு உண்டு ; படுத்த படுக்கையாக இருந்த படியே, அவருக்கு இணையாகப் பல்லாயிரம் ஆன்மாக்களை இறைமகன் இயேசுவிடம்  ஈர்த்தவர் இந்த இரண்டாமவர். இவர்கள் யார் எனத் தெரிகிறதா?

அவர்கள்...

Lire la suite : புனித சவேரியார் ஆற்றிய மகத்தான மறைப் பணிகள்

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org