Get Adobe Flash player

News

 

Cardinal Lourdusamy

On vient d'apprendre que

notre aimable Cardinal Lourdusamy

est gravement malade à Rome.

Prions pour Son Eminence.

Que Dieu lui donne bonne santé!

 

Père John Kennedy.

 

 

Canonisation des bienheureux Jean Paul II et Jean XXIII

Le Pape François a présidé le 30 septembre 2013 un consistoire ordinaire public qui a fixé au 27 avril 2014 (dimanche de la divine Miséricorde) la messe de canonisation des bienheureux Jean XXIII et Jean Paul II.

 

 

கிறிஸ்தவர்கள் எக்காலத்தையும்விட இக்காலத்தில், அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர்

ஏப்.04,2014. நற்செய்தியை அறிவித்த இறைவாக்கினர்கள், எப்பொழுதும், திருஅவையிலும்கூட துன்புறுத்தப்பட்டு வந்தனர், தொடக்க காலங்களைவிட இக்காலத்தில் அதிகமான மறைசாட்சிகள் இருக்கக்கூடும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளி காலை வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில், "நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்..." என்றுரைக்கும் சாலமோனின் ஞானம் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதியை மையமாக வைத்து ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் நற்செய்தியை அறிவிக்கும்போது துன்பங்களைச் சந்திப்பது தவிர்க்க முடியாதது எனவும், புரிந்துகொள்ளாமை மற்றும் அடக்குமுறைகளுக்கு விசுவாசிகள் பயப்பட வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
மீட்பு வரலாறு முழுவதும் குறித்த சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவாக்கினர்கள் அனுபவித்த பல துன்பங்களை இயேசுவே பரிசேயர்களிடம் நினைவுபடுத்தினார் என்றும், மீட்பு வரலாற்றில், இஸ்ரேல் வரலாற்றில், திருஅவையிலும்கூட இறைவாக்கினர்கள் துன்புறுத்தப்பட்டனர் என்றும் கூறினார்.

Lire la suite : வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தையைப் பற்றிய புதிய நூல் - "ஹலோ, நான் பிரான்சிஸ் பேசுகிறேன்"

மார்ச்,13,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதலாம் ஆண்டு பணிநிறைவையோட்டி, மார்ச் 12, இப்புதனன்று, வத்திக்கான் நூலகம் ஒரு புதிய நூலை வெளியிட்டுள்ளது.
"ஹலோ, நான் பிரான்சிஸ் பேசுகிறேன்: திருத்தந்தையும், ஓராண்டு தொடர்புகளில் புரட்சியும்" என்ற தலைப்பில், திருவாளர் Massimo Enrico Milone அவர்கள் எழுதியுள்ள இந்நூலில், திருத்தந்தையின் முக்கியமான படிப்பினைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2013ம் ஆண்டு, மார்ச் 16ம் தேதியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 6000க்கும் அதிகமான ஊடகத் துறையினரைச் சந்தித்த முதல் நிகழ்விலிருந்து, 2014ம் ஆண்டு மார்ச் 5ம் தேதியன்று Corriere della Sera இதழுக்கு அவர் அளித்த பேட்டி வரையிலும், திருத்தந்தை வெளியிட்ட முக்கியமான கருத்துக்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
மக்களுடன் நேரடியாக, மிகவும் எளிய வழிகளில் தொடர்பு கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஓராண்டளவாய் ஊடகத்தைப் புரட்சிகரமான முறையில் பயன்படுத்தியுள்ள வழிகள், இந்நூலில் அலசப்பட்டுள்ளன என்று ஆசிரியர் Milone அவர்கள் தெரிவித்தார்.

பல்வேறு ஆயர்கள் அவைகளிலிருந்து திருத்தந்தைக்கு வாழ்த்துக்கள்

மார்ச்,13,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைமைப் பொறுப்பிற்குத் தெரிவு செய்யப்பட்டதன் முதல் ஆண்டு நிறைவு நாளான இவ்வியாழனன்று, "தயவுசெய்து எனக்காகச் செபியுங்கள்" என்ற குறுகியச் செய்தியைத் தன் Twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
திருத்தந்தையும், வத்திக்கான் உயர் அதிகாரிகளும் தங்கள் ஆண்டு தியானத்தை மேற்கொண்டிருந்தாலும், இந்த முதலாண்டு நிறைவையொட்டி பல்வேறு ஆயர்கள் அவைகளிலிருந்து திருத்தந்தைக்கு வாழ்த்துக்கள் வந்தவண்ணம் உள்ளன.
தன் முதல் ஆண்டு பணிநிறைவு நாளன்று தியானத்தில் ஈடுபட்டுள்ளத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு இத்தாலியத் தலத்திருஅவையின் நன்றிகள், செபத்தின் வழியாக வெளியிடப்படுகின்றன என்று இத்தாலிய ஆயர் பேரவையின் செய்தி கூறுகிறது.
தன் எளிமையான வார்த்தைகளாலும், வாழ்வாலும் திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த ஓராண்டளவாக கத்தோலிக்கர்களை மட்டுமல்லாமல், மத நம்பிக்கையற்ற நல்ல உள்ளத்தோர் அனைவரையும் கவந்துள்ளார் என்று அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Joseph Edward Kurtz அவர்கள் செய்தி அனுப்பியுள்ளார்.
இவ்வுலகின் அடிப்படை குடும்பங்கள் என்றும், அவற்றைக் கட்டியெழுப்புவதே திருஅவையைக் கட்டியெழுப்புவதன் முதல் பணி என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உணர்ந்திருப்பதால், அவர் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்று போலந்து ஆயர்கள் பேரவையின் தலைவர், பேராயர் Jòzef Michalik அவர்கள் தன் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி, கான்கிளேவ் சிறப்புக் கூட்டத்தில் கூடியிருந்த கர்தினால்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தேர்ந்தெடுத்தபோது அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை முழுமையாக நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை என்று போர்த்துகல் ஆயர் பேரவையின் தலைவர் José Manuel Macário அவர்கள் கூறியுள்ளார்.
புனித பிரான்சிஸ் அவர்களின் பெயரைத் தெரிவுசெய்துள்ள திருத்தந்தையின் முதல் ஆண்டு பணி நிறைவையொட்டி, இத்தாலியின் அசிசி நகரில் புனித பிரான்சிஸ் அவர்களின் கல்லறை அடங்கிய பசிலிக்காவில் மாலை 7 மணியளவில் சிறப்புச் செப வழிபாடு நடைபெறுகிறது.

காயமடைந்த மனிதரைக் குனிந்து கட்டித்தழுவுவது மிகக் கடினமான நோன்பாகும், திருத்தந்தை பிரான்சிஸ்

மார்ச்,07,2014. காயமடைந்த மனிதரைக் குனிந்து கட்டித்தழுவுவது மிகக் கடினமான நோன்பாகும் மற்றும் மிகக் கடினமான பிறரன்புச் செயலாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளி காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார்
துன்புறும் அல்லது காயமடைந்துள்ள நம் சகோதர சகோதரிகளின் சதையைத் தொடுவதற்கு நாம் வெட்கப்படுகிறோமா என்ற கேள்வியை இத்திருப்பலி மறையுரையில் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நமது விசுவாச வாழ்வு, பிறரன்பு வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது என்றும், இதனை நடைமுறைப்படுத்தாத கிறிஸ்தவர்கள் வெளிவேடக்காரர்கள் என்றும் கூறினார்.
ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்வில் பிறரன்பின் முக்கிய பங்கு குறித்த சிந்தனைகளை இவ்வெள்ளிக்கிழமை மறையுரையில் வழங்கிய திருத்தந்தை, இதயத்தில் எவ்விதப் பிறரன்பு உணர்வும் இன்றி வெளியில் நன்றாகத் தோற்றமளிக்கும் மக்கள் கூட்டமல்ல கிறிஸ்தவம் என்றும் கூறினார்.
துன்புறுவோர் அனைவர் முன்னிலையிலும், எவ்வித வேறுபாடும், எவ்வித வெட்கமுமின்றி குனிந்து செயல்பட்ட இயேசுவின் உடலை வெளிப்படுத்துவதே கிறிஸ்தவம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், காயமடைந்த மனிதருக்குக் குனிந்து உசவி செய்த நல்ல சமாரியர் போன்ற நன்மைத்தனத்தின் தியாகமே மிகக் கடினமான நோன்பு மற்றும் மிகக் கடினமான பிறரன்புச் செயல் என்று கூறினார்.

Lire la suite : வத்திக்கான் செய்திகள்

2014-02-22 L’Osservatore Romano

« L’Eglise a besoin de vous, de votre collaboration, de votre communion, avec moi et entre vous, de votre courage, de votre prière, de votre compassion ». Elle a besoin d’« artisans de paix », afin que « nous invoquions la paix et la réconciliation pour les peuples qui en ces temps sont éprouvés par la violence et par la guerre ».

Lire la suite : Le Pape François a créé dix-neuf cardinaux -Jésus devant nous

Textes de réflexion pour l’Année de l’appel

Merci :http://www.paris.catholique.fr/-320-Rechercher-.html?q=l%27ann%C3%A9e+de+l%27appelle&sa=OK

 

Viens Il tappelle

 

 « Soyez à l’écoute des appels du Seigneur dans votre vie, soyez attentifs aux besoins de ceux qui vous entourent. Vous pensez que notre Église peut et qu’elle doit faire quelque chose pour le salut des hommes et des femmes du XXI° siècle ? Demandez-vous comment Dieu vous appelle à vous donner dans cette mission. »


+ André cardinal Vingt-Trois

 Après l’Année de la foi, et avant l’Année de la mission, le diocèse de Paris s’engage dans l’Année de l’appel durant l’année 2013-2014.

 

Rendez-vous diocésain :
- Forum Mission et partage au Collège des Bernardins, samedi 8 mars 2014 de 9h30 à midi
- Conférences de Carême 2014 à Notre-Dame de Paris : « L’Homme, un être appelé »

 

Lire la suite : Textes de réflexion pour l’Année de l’appel

Michael Augustine 01 framed

 

நம் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய

புதுச்சேரி - கடலுர் முன்னாள் பேராயர்

பேருட் பெருந்தகை

S.மைக்கல் அகஸ்டின் ஆண்டகை அவர்கள்

தம் உடல் நலம் தேறி இருப்பதாக

மின்னஞ்சல் வழி தகவல் அனுப்பி இருக்கிறார்கள்.

 

அவர் உடல் நலம் பெற அயராது செபித்த

அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள்!

 

அவருக்காகத் தொடர்ந்து செபிப்போம்.

 

பேராயர் அவுர்கள்

நம் ஞானகத்தை உருவாக்கிய சிற்பி!

 

நல்ல நல்ல உடல நலத்தோடு

நாளும் அவர் வாழ வாழ்த்துவோம்!

 

திருத்தந்தை பிரான்சிஸ் : பிரமாணிக்கமும், பயனும் நிறைந்த திருமணம் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்



பிப்.14,2014. அன்பு இளையோரே, திருமணம் செய்துகொள்ள அஞ்ச வேண்டாம், பிரமாணிக்கமுள்ள மற்றும் பயனுள்ள திருமணம் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்று இவ்வெள்ளியன்று தனது Twitter செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், அமெரிக்க யூதமதப் பிரதிநிதிகள் குழு ஒன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, அமெரிக்க யூதச் சமுதாயத்தின் பல்சமய விவகாரத்துறை இயக்குனர் ராபி David Rosen அவர்கள், தங்களது இச்சந்திப்பு, குடும்பச் சந்திப்பு போன்று இருந்ததாகத் தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் யூத சமூகத்துடன் மிக நெருக்கமான உறவு கொண்டிருப்பதை இச்சந்திப்பில் உணர முடிந்ததாகவும் ராபி David Rosen தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org