Get Adobe Flash player

News

Cardinal dias தகவல் :
Press Office Archdiocese of Bombay
http://archdioceseofbombay.org/news/international/we-regret-announce-sad-demise-his-eminence-ivan-ca

மும்பை முன்னாள்  பேராயர்   மேதகுஇவான் கார்டினல் டயஸ் அவர்கள் 19.06.2017 அன்று உரோமில் இறைவனடி சேர்ந்தார்கள்.

Lire la suite...

நவம்பர் 4, அருளாளராக உயர்த்தப்படும் இறையடியார் இராணி மேரி
ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி
Rani Mary
இறையடியாரான அருள்சகோதரி இராணி மேரி, நவம்பர் 4ம் தேதி, இந்தூரில் அருளாளராக உயர்த்தப்படுவார் என்று, பிரான்சிஸ்கன் கிளாரா துறவு சபையின் உலகத் தலைவர், அருள் சகோதரி ஆன் ஜோசப் அவர்கள்
அறிவித்துள்ளார்.

Lire la suite...

மலர் அலங்காரங்களுக்குப் பதில், பாதிக்கப்பட்டோருக்கு உதவி

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
Procession

 

ஜூன்,09,2017. இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள ஒரு கத்தோலிக்கப் பெண்கள் பள்ளியில் கொண்டாடப்பட்ட மரியன்னை விழாவில், மலர் அலங்காரங்களுக்குப் பதிலாக, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யும் வகையில் இவ்விழா கொண்டாடப்பட்டது என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

Lire la suite...

இயேசுவை அவமதிக்கும் குஜராத் பாடப் புத்தகம்
ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி
Gujarat

ஜூன்,10,2017. குஜராத் மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள மேல்நிலைப்பள்ளிக்கான பாடப் புத்தகம் ஒன்றில் இயேசு, சாத்தான் என்ற அடைமொழியுடன் குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து, இந்திய கிறிஸ்தவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

Lire la suite...

இந்தியாவில் அடிப்படைவாதமே பெரும் ஆபத்து -பேராயர் அந்தோனிசாமி
ஆதாரம் : CCBI / வத்திக்கான் வானொலி 

Mgr George Antonysamy
மதசார்பற்ற நாடு என்று அழைக்கப்படும் இந்தியாவுக்கு, அடிப்படைவாதமே பெரும் ஆபத்தாக அமைந்துள்ளது என்று, பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள் கூறினார்.

Lire la suite...

Bopal sister

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

 ஜூன்,15,2017. தகுந்த காரணம் ஏதுமின்றி, மத்தியப் பிரதேசத்தில், அருள் சகோதரி ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதற்கு, போபால் உயர் மறைமாவட்ட கத்தோலிக்கர்கள் தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

Lire la suite...

திருத்தந்தைக்கு, கவுரவ மருத்துவப் பட்டம்
POPE 05

மார்ச்,18,2017.
ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஆன்மாக்களின் மருத்துவராக அங்கீகரித்து, அவருக்கு, கவுரவ மருத்துவப் பட்டம் வழங்குவதாக, இத்தாலியின் சலேர்னோ மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Lire la suite...

மார்ச்,07,2017.

pope04நன்றி : வத்திக்கான் வானொலி
ஒருவர், மற்றவர்களோடு சேர்ந்து உணவுண்பது, தானும் படைப்புயிர் என்பதை பிறர் முன்னிலையில் வெளிப்படுத்துவதாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ், மற்றும், திருப்பீட உயர் அதிகாரிகளுக்கு, தியானச் சிந்தனைகளை வழங்கும் அருள்பணியாளர் இச்செவ்வாயன்று கூறினார்.

அரிச்சா தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில் திருத்தந்தைக்கும், திருப்பீட உயர் அதிகாரிகளுக்கும், தியானச் சிந்தனைகளை வழங்கி வரும் அருள்பணி ஜூலியோ மிக்கேலினி அவர்கள், இயேசுவின் இறுதி இரவு உணவு பற்றி விளக்கிய தியான உரையில், இவ்வாறு கூறினார்.

உணவு உண்பது, மனிதரின் உடலுக்குத் தேவையான ஒன்று எனவும் உரைத்த அருள்பணி மிக்கேலினி அவர்கள், இயேசு தம் இறுதி இரவு உணவு உண்ட அதே இரவில், யூதாஸ் இஸ்காரியோத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டார் என்றும், இயேசு அவ்வேளையில், தம்மையே முழுவதுமாக அளித்தார் என்றும் கூறினார்

உணவு உண்பது குறித்து புனித இலொயோலா இஞ்ஞாசியார் எழுதிய விதிமுறைகள் பற்றி விளக்கிய இயேசு சபை அருள்பணி Jean-Paul Hernandez அவர்கள், நீ எப்படி உணவு உண்கிறாய் என்று சொல், நீ யார் என்று சொல்கிறேன் எனச் சொல்லியிருப்பதையும் குறிப்பிட்டுப் பேசினார், அருள்பணி மிக்கேலினி.

மேலும், இயேசு, தம் பாடுகளின் ஆரம்பத்தில் கூறிய கடைசி வார்த்தைகளை, இத்திங்கள் தியானச் சிந்தனைக்கு மையமாக வைத்து உரையாற்றினார், அருள்பணி மிக்கேலினி.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீட உயர் அதிகாரிகளும், வருகிற வெள்ளியன்று தங்களின் ஆண்டு தியானத்தை நிறைவு செய்வார்கள்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org