Get Adobe Flash player

Prières

குருக்களுக்காக வேண்டும் ஜெபம்

04.08.2017 புனித ஜான் மரிய வியான்னியின் திருவிழாவையொட்டி, இந்த ஞாயிறு திருப்பலியில் திருவிருந்துக்குப்பின் ' குருக்களுக்காக வேண்டும் ஜெபம் ' வேண்டுதல் செய்யும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

 mass

என்றும் குருவான / இயேசு கிறிஸ்துவின் தந்தையே! / “நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ள வில்லை. / நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்‘ / என்ற இறை வார்த்தையின்படி, / எம்மிடையேயிருந்து நீர் தேர்ந்தெடுத்த குருக்கள், / எமக்காக திருப்பலியையும் / அருட்சாதனங்களையும் / நிறைவேற்றுவதற்காகவும்  / அவர்கள் நற்செய்தியை எடுத்துரைத்து / அருள் வாழ்வில் எங்களை / திடப்படுத்துவதற்காகவும் / உம்மைப் போற்றுகின்றோம். /

Lire la suite : குருக்களுக்காக வேண்டும் ஜெபம்

Bonjour

"Priez pour l'Eglise en Inde. On a brulé 20 églises la nuit dernière.
Ce soir, ils veulent détruire, plus de 200 églises dans la province Olisabang.
Ils veulent tuer 200 missionnaires dans les prochaines 24 heures.
Tous les chrétiens se cachent dans les villages ....
Priez pour eux et envoyez ce message à tous les chrétiens que vous connaissez.
Demandez à Dieu d'avoir pitié de nos frères et soeurs en Inde.
"Lorsque vous recevez ce message, s'il vous plait envoyer de toute urgence
à d'autres personnes.
S'il vous plait priez pour les 22 familles missionnaires chrétiennes condamné à mort
par les islamistes en Afghanistan.
Merci de passer ce message aussi vite que possible
afin que le plus grand nombre puisse prier !!!
⚠⚠⚠⚠
Merci beaucoup

Joseph Moudiappanadin

Majomoudia
Cette adresse e-mail est protégée contre les robots spammeurs. Vous devez activer le JavaScript pour la visualiser.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் ஜெபம்

 

புனித மரியே,மாசில்லா கன்னிகையே !யேசுவின் தாயாக மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவளே !
துன்ப படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் அன்னையே!உமது தெய்வீக திருமகனின் அளவற்ற வல்லமையை நம்பி,
உமது வல்லமை நிறைந்த மன்றாட்டுகளில் உறுதி கொண்டு ,இந்த நவநாளின் போது நான் கேட்கும் மன்றாட்டுக்கள்
தெய்வ திருவுளத்திற்கு ஏற்றவையானால் உன் திருமகன் யேசுவிடம் பரிந்து பேசி என் மன்றாட்டுகளை எனக்கு நிறைவேற்றி தாரும்.
(நமது தேவைகளை வேளாங்கண்ணி மாதாவிடம் சொல்லவும் )
இறைவனின் மாட்சி பெற்ற அன்னையே "அருள் நிறைந்தவள் " என்று அன்று அதி தூதர் கபிரியேல் சொல்லும் போது
அவர் கொண்டிருந்த அதே பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துக்களை கூறுகிறேன்;அன்புடன் ஏற்றுகொள்ளும் .
(ஒன்பது முறை பின்வரும் அருள் நிறைந்த மரியே வாழ்க ஜெபம் சொல்லவும் )
அருள் நிறைந்த மரியே வாழ்க!கர்த்தர் உம்முடனே ,பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே;
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய ஏசுவும் ஆசிர்வதிக்கபட்டவரே.
அர்ச்சிஷ்ட மரியே !சர்வேஸ்ரனுடைய மாதாவே,பாவிகளாயிருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் -ஆமென்.
வருந்துவோருக்கு ஆறுதலே!
நான் இப்போது கேட்ட மன்றாட்டுக்கள் நிறைவேறுமாறு எனது நற்செயல்களையும்
நான் ஏற்கும் துன்பங்களையும் ஒறுத்தல் முயற்சிகளையும்
உமக்கு ஒப்பு கொடுக்கிறேன்.உமது திருமகனிடம் உம் அடியான் எனக்காக பரிந்து பேசி
என் மன்றாட்டுகளை அடைந்து தந்தருளும் வேளாங்கண்ணி மாதாவே-ஆமென்

 
மிகவும் இரக்கமுள்ள தாயே,இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடி வந்து உமது உபகார சகாயங்களின் உதவியை இரந்து கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக உலகில் ஒருபோதும் சொல்லக் கேள்விபட்டது இல்லை என நினைத்தருளும்.கன்னியரின் அரசியான கன்னிகையே ,தயையுள்ள தாயே,இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உமது திருபாதத்தை அண்டி வந்து நிற்கிறேன் .பெருமூச்செறிந்தழுது,பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன்.அவதரித்த வார்த்தையின் தாயே, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதாவே,என் மன்றாட்டை புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டு கிருபை புரிந்தருளும்.ஆமென்

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org