Get Adobe Flash player

குருக்களுக்காக வேண்டும் ஜெபம்

04.08.2017 புனித ஜான் மரிய வியான்னியின் திருவிழாவையொட்டி, இந்த ஞாயிறு திருப்பலியில் திருவிருந்துக்குப்பின் ' குருக்களுக்காக வேண்டும் ஜெபம் ' வேண்டுதல் செய்யும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

 mass

என்றும் குருவான / இயேசு கிறிஸ்துவின் தந்தையே! / “நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ள வில்லை. / நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்‘ / என்ற இறை வார்த்தையின்படி, / எம்மிடையேயிருந்து நீர் தேர்ந்தெடுத்த குருக்கள், / எமக்காக திருப்பலியையும் / அருட்சாதனங்களையும் / நிறைவேற்றுவதற்காகவும்  / அவர்கள் நற்செய்தியை எடுத்துரைத்து / அருள் வாழ்வில் எங்களை / திடப்படுத்துவதற்காகவும் / உம்மைப் போற்றுகின்றோம். /


கிறிஸ்துவின் திருவுடலை ஏந்தும் / எம் குருக்களின் கைகளைக் / கறைபடாமல் காத்தருளும். / இறையரசுப் பணியில் சந்திக்கும் / இன்னல் இடையூறுகள் மத்தியில் / தடுமாறாமல், / ஜெப,  தப / நற்செய்தி,  அருட்சாதன வாழ்வில் / நிலைத்திருக்கச் செய்தருளும். / குருக்களின் பாதுகாவலராம் / புனித ஜான் மரிய வியான்னியைப் போல, / மறுகிறிஸ்துவாக, / இறைமக்களுக்கு முன்மாதிரிகையாக,  /நற்செய்தியின் தூதுவர்களாக/ என்றும் வாழச் செய்தருளும்./ இறையாட்சிப் பணியில் / நாங்கள் குருக்களோடு சேர்ந்து / பொறுப்புடன் செயல்படவும், / அவர்களிடம் நாங்கள் / மாண்புடன் நடந்து கொள்ளவும் / அருள்தாரும். / எங்கள் குடும்பங்களிலிருந்து / உமக்குத் தேவையானவர்களை / உமது பணிக்கென தேர்ந்து கொள்வீராக. / எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக / உம்மை மன்றாடுகின்றோம். / ஆமென். /

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org