Get Adobe Flash player

 

 

குருக்களுக்கான செபம்
(இரவுச் செபங்களிலும் திருப்பலி நிறைவுக்குப் பின்னும் சொல்ல வேண்டிய செபம்)
 
 
 

 

Mother_Teresa-light

 

என் அன்பான ஆண்டவரே!/

குருக்களைக் காப்பாற்றும்படியாக/ உம்மை மன்றாடுகிறோம்/

அவர்கள் உம்முடையவர்கள் ஆனதாலும்/அவர்களது வாழ்வு/ உமது பலி பீடத்தில் எரிக்கப்படுவதாலும்/ அவர்களைக் காப்பாற்றும்./ அவர்கள் உலகத்தை விட்டுப் பிரிந்தாலும்/ உலகின் நடுவே வாழ்வதாலும்/ உலக இன்பங்கள் அவர்களைச் சோதிப்பதாலும்/ அவர்களை உமது இதயத்தில் வைத்துக் காப்பாற்றும்./ அவர்கள் தனிமையாயிருக்கும் போதும்/ வேதனை படும்போதும்/ ஆன்மாக்களுக்கான அவர்களது பலி வாழ்வெல்லாம்/ வீணாகத்தோன்றும் பொழுதும்/ அவர்களைக் காப்பாற்றும்./ ஆண்டவரே!/   அவர்களுக்கு உம்மைத் தவிர/ ஒருவரும் இல்லையென்றும்/ மனித பலவீனம் கொண்ட / மனித இதயம்தான்/ அவர்களிடம் உண்டு என்றும் நினைத்து/ அவர்களைக் காப்பாற்றும்./ அவர்களது ஒவ்வொரு சிந்தனையையும்/ சொல்லையும்/ செயலையும் ஆசிர்வதித்து/  அவர்களைக் காப்பாற்றும்.

ஆமென்

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org