Get Adobe Flash player

பைபிளின் ஆசிரியர் யார்? Auteur de la Bible?

முன்பு , "பைபிளின் ஆசிரியர் ஒருவரே ஆனால் எழுதியவர் பலர்!!! இது எப்படி என அறிய ஆவலா?" எனக் கேட்டிருந்தேன். இதோ அதற்கான விடை. கத்தோலிக்க மரபுப் படி பைபிளில் 72  நுர்ல்கள் உள்ளன. அவற்றை எழுதியவர்கள் பல வேறு ஆள்கள் ; பல வேறு கால கட்டங்களில் எழுதப்பட்டவை! அவற்றின் ஆசிரியர் '' தூய ஆவியானவரே"! இதன் விளக்கம் இதோ பிரஞ்சு மொழியில் ; உங்கள் பிள்ளைகளையும் படிக்கச் சொல்லுங்கள் :

" En fait, par-delà les auteurs humains, c'est Dieu Lui-même qui a écrit la Bible. En effet, la Deuxième Lettre à Timothée, chapitre 3, verset 16 nous dit que la Bible fut « inspirée » par Dieu. Dieu supervisa les auteurs de la Bible afin qu’ils puissent écrire ce que Lui souhaitait, leur permettant cependant de garder leur propre style ainsi que leur personnalité. Mais la Bible ne fut pas dictée par Dieu : elle fut totalement induite et inspirée par Lui.

Sur le plan humain, la Bible fut écrite par une quarantaine d'hommes provenant d'horizons très divers pendant une durée de 1500 ans environ. Esaïe était un prophète; Matthieu un percepteur d'impôts, Jean était un pêcheur, Paul un faiseur de tentes, Moïse un berger, et Luc un médecin. Malgré une écriture qui s'est faite tout au long de 15 siècles, la Bible ne se contredit jamais et ne comporte aucune erreur. Les auteurs ont des visions différentes mais ils proclament tous Un Seul vrai Dieu, Un Seul chemin de salut – Jésus-Christ (Jean 14 : 16 ; Actes 4 : 12). Peu de la Bible mentionnent leur auteur."

இந்த வீடியோவையும் பாருங்கள் ; அவர்களையும் பார்க்கச் சொல்லுங்கள் :

யாரால் எழுதப்பட்டது?

சரி இனி முக்கியமான கட்டத்திற்கு வருவோம் இந்த புத்தகங்கள் மனிதர்களால் எழுதப்பட்டது தான் ஆனால் அதில் தொடக்கம் முதல் முடிவு வரை எழுதப்பட்ட‌ காலமும், எழுதப்பட்ட மனிதர்களின் மொழி பன்பாடு நாகரீகம் கல்வியறிவு ஆகியவைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவைகள். இவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் சொல்லப்பட்ட தகவல்கள் ஒரே மாதிரியானவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை, என்ன ஒன்றும் புரியவில்லையா? தொடர்ந்து படியுங்கள் புரிந்து விடும்

அதாவது பைபிளில் முதல் புத்தகம் முதல் கடைசிப் புத்தகம் வரை எழுத சுமார் 1600 (ஆயிரத்து ஆறுனூறு) ஆண்டுகள் ஆனது, மேலும் எழுதிய மனிதர்களும் முற்றிலும் மாறுபட்டவர்கள் அதாவது மோசே போன்ற தீர்க்கதரிசிகள் எஸ்ரா போன்ற ஆசாரியன். தாவீது போன்ற அரசர்கள், தானியேல் போன்ற அமைச்சர்கள், பவுல் போன்ற அறிஞர்கள், பேதுரு போன்ற மீனவர்கள், லூக்கா போன்ற மருத்துவன், என பலதரப்பட்ட 40 மனிதர்களால் எழுத்தப்பட்டது தான் பைபிள், மேலும் இவர்கள் வாழந்த காலமும் இடமும் ஒன்றோடு ஒன்று முற்றிலும் மாறுபட்டவை.

எழுதப்பட்ட மொழிகள்

அதோடு அல்லாமல் எழுதப்பட்ட மூல மொழிகளிலும் வேறுபாடுகள் உண்டு பழைய ஏற்பாட்டின் பெரும்பாலான பகுதிகள் எபிரேய மொழியிலும், சில பகுதிகள் அரமாயிக் மொழியிலும் எழுத்தப்பட்டது, புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டது இப்படி பன் மொழியில் எழுதப்பட்டதுதான் பைபிள், ஒரு வேளை இவைகள் வேறு வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும் எழுதப்பட்ட இடங்கள் ஒன்றாக இருக்குமோ என நீங்கள் நினைப்பது தெரிகிறது அதுதான் இல்லை

எழுதப்பட்ட இடங்கள்

மோசே பாலஸ்தீனாவிற்கு வெளியே எழுதினார். கானான் தேசத்தில் பலர் எழுதினார்கள், பாபிலோனிலிருந்தும், தாவீது பாலைவனத்திலிருந்தும் அரச சிம்மாசனத்திலுமிருந்தும், புதிய ஏற்பாட்டுக் கடிதங்களை ஆசிய ஐரோப்பிய கண்ட முக்கிய நகரங்களில் இருந்தும் எழுத்தப்பட்டன.

பைபிளின் ஆசிரியர்

என்னங்க இது யார் யாரோ எங்கெங்கிருந்தோ எழுதியதாகச் சொல்கிறீர்கள் அப்படியானால் இது எப்படி ஒரே புத்தகமாக இருக்க முடியும் என நீங்க நினப்பது தெரிகிறது, நீங்கள் நினைப்பது போல் இந்த புத்தகங்கள் எழுதியவர்கள் வேறு வேறு இடங்களில் வெவ்வேறு சூழ்நிலையில் வாழ்ந்திருந்தாலும், இதில் எப்படி ஒற்றுமை வந்தது, என அறிவது மிகவும் முக்கியமான காரியம்।,ஆம் மருத்துவனாக இருந்தாலும் கல்வி வாசனை இல்லாத மீனவனானாலும் அறிஞனானாலும் ஒரே நோக்கத்தில் ஒரே அறிவோடு எழுதக் காரணம் திரித்துவ கிறிஸ்துவின் ஒருவராகிய பரிசுத்த ஆவியானவரே இந்த ஒற்றுமைக்குக் காரணம், ஆம் அவரே இதை எழுதிய மனிதர்களில் நிறைந்து எழுதுவித்தார்।

ஆகவே தான் இது தொடக்கம் முதல் இறுதிவரை பின்னிப் பினைந்திருக்கிறது, அதாவது பைபிளில் தொடக்க வசனமான ஆதியாகமம் முதல் அதிகாரத்தைப் பார்த்தால், "ஆவியானவர் தண்ணீரின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்" என்று சொல்லப்படுள்ளது. அதே போல கடைசி புத்தகமான வெளிப்படுத்தல் கடைசி அதிகாரத்தில்  (22:17)" தூய ஆவியாரும் ஆட்டுக்குட்டியின் மணமகளும் சேர்ந்து, வருக! வருக! என்கிறார்கள்." என்று சொல்லப்படுள்ளது. இதுவே பைபிளின் தொடக்கம் முதல் முடிவு வரை பரிசுத்த ஆவியானவரே நீக்கமர நிறைந்திருக்கிறார் எனபதைத் தெளிவாக்கும்.எனவே பைபிளின் ஆசிரியர் பரிசுத்த ஆவியானவரே எனபது தெள்ளத் தெளிவாகிறது।

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org